பணம் வேண்டாம்! ஆடம்பரம் வேண்டாம்… எல்லாவற்றையும் துறந்த 22 வயதான பணக்கார பெண்

இந்தியாவில் செல்வந்தராக வாழ்ந்து வந்த இளம்பெண்ணொருவர் துறவியாக மாறியுள்ளார். துறவறம் புதுச்சேரியை சேர்ந்தவர் சாந்திலால் ஜெயின். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். இளைய மகள் சலோனி ஜெயின் (22). பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இவர் துறவியாக மாற முடிவு செய்து, தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சலோனி முடிவிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். வரும் 4ம் திகதி பெங்களூருவில் உள்ள பாஸ்வசுசீல்தார் கோயிலில், குருஜி ஆச்சார்ய அரவிந்த் சாகர் … Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மார்ச் வரை அவகாசம் வழங்க வேண்டும்! தமிழகஅரசுக்கு அண்ணாமலை கோரிக்கை…

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில், மின்வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழகஅரசு அறிவுறுத்தி உள்ளது. அதற்காக சிறப்பு முகாம்களையும் ஏற்படுத்தி உள்ளது.  அதிலும் 100யூனிட்  இலவச மின்சாரம் பெறுபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளியோர் கண்டிப்பாக பதிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  இது மக்களிடையே அதிர்ச்சியை … Read more

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராசேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிகமுள்ளன. கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு என தொல்லியல் பொக்கிஷங்கள் அரியலூரில் நிறைந்துள்ளன என ஸ்டாலின் கூறினார்.

நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் விரக்தி! :மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக வேதனை| Dinamalar

புதுடில்லி :உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான உச்ச நீதிமன்ற ‘கொலீஜியத்தின்’ பரிந்துரை மீது, மத்திய அரசு முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது, நியமன நடைமுறையையே விரக்தி அடைய செய்வதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கிறது. ‘இந்த பரிந்துரையை ஏற்று 3 – 4 வாரங்களுக்குள் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கடந்த … Read more

தன்னை விட 13 வயது அதிகமான பெண்ணை தீவிரமாக காதலித்த இளவசர் ஹரி! யார் அவர்? வெளியான புகைப்படங்கள்

இளவரசர் ஹரி தன்னை விட 13 வயது அதிகமான பெண்ணை முன்னர் காதலித்த நிலையில் அது தொடர்பில் அப்பெண் தற்போது மனம் திறந்துள்ளார். இளவரசர் ஹரி இளவரசர் ஹரி (38) கடந்த 2018ல் மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னர் தன்னை விட 13 வயது அதிகமான காத்தரீன் ஒம்மனே என்ற பெண்ணை அவர் காதலித்திருக்கிறார். ஹரிக்கு 21 வயது இருந்த போது 34 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயான காத்தரீனை சந்தித்திருக்கிறார். இருவரும் … Read more

பராமரிப்பு பணி காரணமாக 30ந்தேதி முதல் சென்ட்ரல் டூ கோவை, எழும்பூர் டூ சேலம் வழித்தடங்களில் 8 ரயில்கள் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 30ந்தேதி முதல் டிசம்பர் 3ந்தேதி வரை சென்ட்ரல் டூ கோவை, எழும்பூர் டூ சேலம் வழித்தடங்களில் 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை -கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் டிசம்பர்-3ம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல் சென்னை எழும்பூர் -சேலம் இடையே இயக்கப்பட்டு வரும் ரயில்கள் 30,1,2,3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பராமரிப்பு பணியின் காரணமாக இந்த … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை நாளை விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் ஆணை

சென்னை : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை நாளை விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. ரூ.206.42 கோடி வரி பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம், 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் 117 ஏக்கர் நிலம், 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார். 

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: `மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' – யோகா குரு பாபா ராம்தேவ்

யோகா குரு பாபா ராம்தேவ் மும்பை அருகில் உள்ள தானேயில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பேசிய ராம்தேவ், `பெண்கள் சேலையில் அழகாக இருப்பார்கள். சல்வார் கமீஸில் மிகவும் அழகாக இருப்பார்கள். என்னைப்போன்றவர்களுக்கு பெண்கள் ஆடை இல்லாமலும் அழகாக இருப்பார்கள்’ என்று தெரிவித்திருந்தார். ராம்தேவின் இக்கருத்துக்கு பெண்கள் அமைப்புகள் கடுமையான கண்டனம் தெரிவித்தது. இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நனாவிஸ் மனைவி அம்ருதா மற்றும் முதல்வர் … Read more

இறுதி வரை திக் திக்! இரண்டு கோல்கள் அடித்து மிரட்டிய வீரர்.. கத்தார் உலக கோப்பையில் ரசிகர்களுக்கு விருந்து

உலக கோப்பை கால்பந்து தொடரில் தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணி வெற்றியை சுவைத்துள்ளது. வெற்றிபெற வேண்டிய கட்டாயம் தென் கொரியா அணி உருகுவே அணிக்கு எதிரான முதல் போட்டியை டிரா செய்திருந்த நிலையில் நேற்று கானா அணியை எதிர்கொண்டது. அதேபோல் கானா அணி போர்ச்சுகல் அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தது. இதனால் கானா அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. நிதானமாக விளையாடி … Read more