ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எலெக்ட்ரிக் அறிமுகம் எப்போது.?

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை தயாரித்து வரும் நிலையில் ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக் மாடல் பற்றி சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 450சிசி மற்றும் 650 சிசி என்ஜின் பெற்ற பல்வேறு மாடல்களை தொடர்ந்து பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் மிக தீவரமாகவும் உள்ளது. ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக் விற்பனையில் கிடைக்கின்ற ஹிமாலயன் பைக்கின் அடிப்படையில் பவர்ஃபுல்லான மற்றும் ஸ்டைலிஷான அட்வென்ச்சர் பெட்ரோல் மாடலை உருவாக்கி வருகின்றது. … Read more

மதுரை: திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை விழா கொடியேற்றம்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இந்நிகழ்வில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கொடியேற்றம் முருகக்கடவுளின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று. பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கான கொடியேற்ற விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு ஆதாரதனைகள் நடைபெற்றன. … Read more

காலை நேர உடற்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மை கிடைக்கின்றதா?

உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்குப் பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவும் ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.  அதிலும் காலைநேரத்தில் உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க. காலைநேர உடற்பயிற்சி, … Read more

உலகளவில் 64.64 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.64 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.64 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.37 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.50 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் முறைகேடாக நெல் கொள்முதல் செய்ய அடங்கல் தந்த புகாரில் வி.ஏ.ஓ. கைது

அரக்கோணம்: அதிமுக ஆட்சியில் முறைகேடாக நெல் கொள்முதல் நிலையத்துக்கு அடங்கல் வழங்கிய புகாரில் வி.ஏ.ஓ. குமரவேல் கைது செய்யப்பட்டார். அரக்கோணம் அடுத்த பெருமூச்சு கிராமத்தில் 2020-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக குமரவேல் பணியாற்றினார். ரூ.6 கோடி அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய அடங்கல் தந்த புகாரை அடுத்து குமரவேலை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.

டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம்… கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்கள்?!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை கடந்த 6 நாள்களுக்கு முன்பு ஹேக்கர்கள் ஹேக் செய்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். அதனை மீண்டும் பழைய நிலைக்கு இன்னும் கொண்டு வரமுடியவில்லை. சர்வரை விடுவிக்கவேண்டுமானால் ரூ.200 கோடி கொடுக்கவேண்டும் என்று ஹேக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் அந்த பணத்தை கிரிப்டோகரன்சியில்தான் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பணம் கேட்டு எந்த கோரிக்கையும் வரவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். சர்வர் முடங்கியதால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அனைத்தும் முடங்கிப்போய் … Read more

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் 14 பேர் வெற்றி பெற்றனர். ஒரு கவுன்சிலர், அதாவது காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த நாஞ்சில் பிரசாத் கடந்த வாரம் உடல்குறைவு காரணமாக காலமானார். இதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகராட்சியில் காங்கிரசின் பலம் 13 ஆக உள்ளது. இருந்த போதிலும், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்படாமல் … Read more

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 15 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். நீதிமன்ற காவல் முடிந்து வவுனியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நவம்பர் 5-ம் தேதி கச்சதீவு அருகே 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மகனுடன் சேர்ந்து கணவரை 10 துண்டாக வெட்டிய பெண் :புதுடில்லியை அதிர வைத்த மற்றொரு படு பயங்கர கொலை சம்பவம்| Dinamalar

புதுடில்லி :புதுடில்லியில், மகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, உடலை 10 துண்டுகளாக வெட்டி ‘பிரிஜ்’ஜில் வைத்து, பின் அவற்றை இரவு நேரங்களில் குப்பை தொட்டிகளில் வீசியெறிந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுடில்லியில் காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை புதுடில்லியின் பல பகுதிகளில் வீசியெறிந்த அப்தாப் அமீன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் அடங்குவதற்கு முன், அதேபோன்ற மற்றொரு சம்பவம் புதுடில்லியில் மீண்டும் நடந்துள்ளது. … Read more

விழுப்புரம்: `இனி இவனை விடக்கூடாது’… பாமக பிரமுகர் படுகொலை; 7 பேர் கைது – அதிர்ச்சிப் பின்னணி!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன். விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க துணைச் செயலாளராக இருந்து வந்த இவர், கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டிருந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையில் 5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். மேலும், … Read more