தாறுமாறாக ஓடிய டெஸ்லா காரால் 2 பேர் பலியா? பதற வைக்கும் வீடியோ! என்னாச்சு எலான் மஸ்க்?

எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தைத் தன்வசமாக்கியது முதல் பல அதிரடி நடவடிக்கைளை எடுத்து டாக் ஆஃப் தி வேர்ல்டு ஆக மாறியிருந்தார். இதையடுத்து பலர் ட்விட்டரின் ப்ளூ டிக் முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வரை அவரின் புதிய நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர். மற்றொருபுறம், எலான் மஸ்க் ட்விட்டரில் மட்டுமே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதால், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தை அவர் சரியாகக் கவனிப்பதில்லை. இதனால் இவ்விரு நிறுவனங்களும் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும் … Read more

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ‘தி டெர்மினல்’ படத்தை எடுக்க காரணமாக இருந்த நபர் பாரிஸ் ஏர்போர்ட்டில் மரணமடைந்தார்

ஈரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி என்ற நபர் 18 ஆண்டுகள் தனது வீடுபோல் வசித்து வந்த சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் சனிக்கிழமை அன்று மரணமடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் டெர்மினல் 2F-ல் இருந்த நேரத்தில் 77 வயதான நாசேரி மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த ஈரானில் 1945 ம் ஆண்டு ஈரானிய தந்தைக்கும் பிரிட்டிஷ் தாய்க்கும் பிறந்தவரான நாசேரி … Read more

மதுரவாயல் சிக்னல் அருகே டேங்கர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் உயிரிழப்பு

சென்னை: மதுரவாயல் சிக்னல் அருகே டேங்கர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் உயிரிழந்தார். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பணியாற்றிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஜெயினுலாபுதீன் 27 என்பவர் உயிரிழந்துள்ளார்.

Evening Post:தமிழகம்: முதல் Virtual Reality நூலகம்-பவனுக்குப் போன புகார்-35 துண்டுகளாக்கப்பட்ட பெண்!

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் மெய்நிகர் நூலகங்கள் தொடக்கம்!  Virtual Reality மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வாசிப்பதை காட்டிலும், 360 டிகிரி கோணத்தில் மெய் நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில், இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 76 நூலகங்களில் மெய்நிகர் நூலக (Virtual Reality) பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ‘நூலக நண்பர்கள் திட்டம்’ தமிழகத்தில் மாநில நூலகம் மற்றும் 30-க்கும் அதிகமான மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற … Read more

பிறந்தநாளில் மன்னர் சார்லசுக்கு கிடைத்துள்ள மோசமான செய்தி

பிரித்தானிய மன்னர் சார்லஸ் இன்று தனது 74ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். மகிழ்ச்சி ஒரு பக்கம் வருத்தம் ஒருபக்கம் பிரித்தானிய மன்னரானபிறகு இது சார்லஸ் கொண்டாடும் முதல் பிறந்த நாள் ஆகும். ஒருபக்கம், மன்னருக்கு பிறந்தநாள் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், மறுபக்கம் விமர்சகர்களோ, அவருக்கு வயதாகிக்கொண்டே செல்வதால் அவர் குறுகிய காலமே ஆட்சி செய்யமுடியும் என்று கவலை தெரிவித்துள்ளார்கள். பிறந்தநாளில் கிடைத்த ஏமாற்றம் இந்நிலையில், பிறந்தநாளன்றே மன்னருக்கு ஒரு மோசமான செய்தியும் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், … Read more

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார்… சீனாவில் இரண்டு பேர் உயிரிழப்பு… வீடியோ

சீனாவின் கவுங்டொங் மாகாணத்தில் உள்ள சாஓசோவ் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மாதம் 5 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் Y மாடல் எலக்ட்ரிக் காரை ஓட்டிவந்த நபர் அதனை பார்க்கிங் செய்ய முயன்றபோது பிரேக் பிடிக்காமல் கார் வேகமெடுத்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் தாறுமாறாக ஓடியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த … Read more

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் லலிதா அறிவிப்பு

சீர்காழி: சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். மயிலாடுதுறை, குத்தலாம் வட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

“பள்ளி வகுப்பறைகளுக்குக் காவி நிறம் அடிப்பதில் என்ன தவறு; மூவர்ணக்கொடியில் கூடத்தான்..!" – பசவராஜ்

பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், சுவாமி விவேகானந்தரின் பெயரில் ‘விவேகா’ திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 7,601 பள்ளி வகுப்பறைகள் கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்திருக்கிறது. மேலும், இந்த ‘விவேகா’ திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய வகுப்பறைகளுக்கு, காவி நிற பெயின்ட் அடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகளுக்குக் காவி நிறம் பூசுவதா என்று சில கேள்விகளும் எழுந்தன. விவேகானந்தர் இந்த நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை, வகுப்பறைகளுக்குக் காவி நிறம் பூசுவதை ஆதரித்து, … Read more

கெர்சனில் ரஷ்ய படைகளின் காட்டுமிராண்டித்தனம்: ஜென்லென்ஸ்கியை கண்டதும் ஆனந்த கண்ணீரில் பொதுமக்கள்!

ரஷ்யாவின் மிக கொடூரமான காட்டுமிராண்டிதனத்தால் கெர்சன் நகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் அரங்கேறி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். கெர்சனில் போர் அத்துமீறல் உக்ரைனில் உள்ள போர் புலனாய்வாளர்கள் கெர்சனில் மட்டும் 400க்கும் அதிகமான ரஷ்ய போர் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், கெர்சனில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்களுடன் சேர்த்து பொதுமக்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். SKY NEWS அத்துடன் ரஷ்யா ராணுவம் நமது நாட்டிற்குள் நுழைந்து … Read more

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் … Read more