விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வாழ்க்கை ஸ்பீல்பெர்க்கின் 'The terminal' படத்தின் நிஜ ஹீரோ மரணம்!

பாரிஸ் நகரின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நஸ்செரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வினை இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் `தி டெர்மினல்’ (The terminal)  என்ற படமாக்கியுள்ளார்.  மெஹ்ரான் கரிமி நஸ்செரி மெஹ்ரான் கரிமி நஸ்செரி, 1945 ஆம் ஆண்டில்,  ஈரான் நாட்டிலுள்ள சோலேய்மான் என்ற இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த காலகட்டத்தில் ஈரான், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் செயல்பட்டு … Read more

மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல், டிரம்ஸ் வாசித்து அசத்தல் – வீடியோ

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு நேற்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கு இசைத்துக்கொண்டிருந்த  இசை கலைஞர்களுடன் இணைந்து, ராகுல் காந்தி டிரம்ஸ் வாசித்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில்  ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி கலம்நூரியில்  என்ற பகுதியில் நடைபெற்ற  கலாச்சார நிகழ்ச்சியில் இசை கலைஞர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைக்கண்ட பொருமக்கள் ராகுல்காந்தி வாழ்க என … Read more

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்பு

கள்ளக்குறிச்சி: சோமண்டார்குடி தடுப்பணையில் மீன்பிடித்த போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இளைஞர் கரண்ராஜை 3 நாட்களாக தீயணைப்புத்துறையினர் தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஓடும் ரயிலிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை… காப்பாற்ற குதித்த தந்தை – இருவரும் பலியான சோகம்!

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிரா ரெயின் (32) என்ற நபர் தன் மனைவி ஜரீனா, தன் 3 வயது குழந்தை, மைத்துனர் ஃபிரோஸ் ஆகியோருடன் டெல்லியிலிருந்து பீகாருக்கு, ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், இருக்கை கிடைக்காததாலும், கதவின் அருகிலேயே குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். மிர்ஜாமுராட் காவல் வட்டத்துக்கு உட்பட்ட பஹெடா ஹால்ட் அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ரயிலில் … Read more

உங்கள் கண் பார்வை கூரான கத்தி மாதிரி ஷார்ப்பா இருக்கனுமா! இந்த உணவு போதும்

கண்பார்வை குறைபாடு என்பது ஒரு சமயத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் நிலையில் தற்போதெல்லாம் சிறுவர்,சிறுமியர் கூட பாதிக்கப்படுகின்றனர். செல்போனை அதிகம் பார்ப்பது, தவறான உணவுப்பழக்கம் போன்றவை தான் கண்பார்வை குறைப்பாட்டிற்கு காரணம். உங்கள் கண்களின் ஆரோக்கியம் மேம்படவும் கண் பார்வைத்திறன் அதிகரிக்கவும் உதவும் உணவுகள் குறித்து காண்போம். healthgrades முருங்கைக்கீரையும்,பொன்னாங்கண்ணிக்கீரையும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த மருந்துகளாகும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தும், அமினோ அமிலங்களும் இந்த கீரைகளில் நிரம்பியுள்ளன கேரட்டில் கண்களுக்கு ஆரோக்கியம் … Read more

நடிகர் கார்த்தி-யின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது…

நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது.   Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team. — Karthi (@Karthi_Offl) November 14, 2022 இது எங்கிருந்து யாரால் ஹேக் செய்யப்படுகிறது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இருந்தபோதும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட … Read more

கொள்ளிடம் அருகே மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். கடலூரை தொடர்ந்து மயிலாடுதுறையில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிடுகிறார்.

நடப்பாண்டு, தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60ஆயிரம் இடங்கள் காலி….

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இறுதிச்சுற்று கலந்தாய்வில் 36,057 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவிகிதம் மாணவர் சேர்க்கை உயர்ந்து உள்ளது என்றாலும்,  சுமார் 60ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில்  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் நடப்பு (2022-23) கல்வி ஆண்டில் 2 லட்சத்து 7,996 இடங்களில் சேர்க்கை நடத்திக் கொள்ள தமிழக அரசு … Read more

கொடநாடு வழக்கு: 3600 பக்க விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

உதகை: கொடநாடு கொலை, கொள்ள வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதகை நீதிமன்றத்தில் 3600 பக்க விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்தததாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. விசாரணையின் போது சசிகலாவிடம் 280 கேள்விகள் கேட்கப்பட்டன; சசிகலா அளித்த பதில்கள் 30 பக்கங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.