உச்சநீதிமன்ற நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபங்கர் தத்தா பதவியேற்பு…

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா இன்று பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 28-ஆக உயர்ந்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தலைவர் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, அவர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று காலை காலை … Read more

கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

செங்கல்பட்டு: கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபாங்கர் தத்தா பதவியேற்பு| Dinamalar

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில், தீபாங்கர் தத்தா இன்று(டிச.,12) நீதிபதியாக பொறுப்பேற்றார். மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபாங்கர் தத்தா வயது ( 57). இவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26ம் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் … Read more

சூனியம் வைத்ததாக சந்தேகம்… நள்ளிரவில் கணவன், மனைவி வெட்டிக் கொலை – போலீஸ் தீவிர விசாரணை!

ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் பஹதா முர்மு (45), தானி (35) என்ற தம்பதியர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்களுக்கு சிங்கோ என்ற மகளும் இருக்கிறார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் கணவனும், மனைவியும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவர்களின் மகள் சிங்கோ கூறுகையில், “என் அம்மாவும், அப்பாவும் சனிக்கிழமை இரவு அறைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். நான் வேறொரு அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தேன். நள்ளிரவு திடீரென அலறல் … Read more

சரவெடியாய் வெடித்த மந்தனா! மும்பையில் சிக்ஸர் மழை..சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி

மகளிர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா 187 இந்தியா – அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் மும்பை பட்டீல் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. மூனி 54 பந்துகளில் 82 ஓட்டங்களும், டஹ்லியா மெக்ராத் 51 பந்துகளுக்கு 70 ஓட்டங்களும் விளாசினர். மந்தனா மிரட்டல் ஆட்டம்  பின்னர் களமிறங்கிய இந்திய … Read more

பொதுமக்கள் வாங்கிய ரேசன் அரிசியில் ‘எலிக்குஞ்சு’ – பொதுமக்கள் வாக்குவாதம்! இது ஆண்டிப்பட்டி சம்பவம்…

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நியாய விலைகடையில் வாங்கிய ரேசன் அரிசியில் எலி குஞ்சுகள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ரேசன் கடையில் அப்பகுதி மக்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏழை மக்களுக்கு குறைந்த விலையிலும், பலருக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசிகள் தரமற்றவை என குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில், தற்போது ரேசன் அரிசிக்குள் உயிருடன் எலிக்குஞ்சுகள் கிடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், திமுக அரசு … Read more

செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பை மேலும் அதிகரிக்க முடிவு

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவை மதியம் 12 மணிக்கு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். நீர்வரத்து தொடர்ந்து  அதிகரித்து வருவதால் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளது எனவும் கூறினார்.

உக்ரைனிலிருந்து காதலன் அனுப்பிய அந்த புகைப்படம்: பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

தான் உக்ரைனில் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார் பிரித்தானிய பெண் ஒருவரின் புதுக்காதலர். விவாகரத்தான சோகத்தில் இருந்த பிரித்தானிய பெண் இங்கிலாந்தில் வாழும் ரேச்சல் (Rachel Elwell, 54), சமீபத்தில்தான் விவாகரத்தானதால் தனிமையில் வாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பேஸ்புக்கில் ஸ்டீபன் (Stephen Bario, 54) என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சமூக ஊடகத்தில் மணிக்கணக்காக உரையாடிக்கொண்ட நிலையில், தான் ஒரு புராஜக்டுக்காக உக்ரைன் செல்வதாக கூறியுள்ளார் ஸ்டீபன். பின்னர் சில … Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின – பாலாற்றில் வெள்ளப்பெருக்கு- பொதுமக்கள் ஆற்றில் குளிக்க தடை

செங்கல்பட்டு: பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலாற்றில் குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 பொதுப்பணித்துறை ஏரிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின. இதில் 220 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. அனுமந்தபுரத்தில் உள்ள கொப்பளான் ஏரியின் மதகு உடைந்ததால் நீர் … Read more