சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய பதவிக்கு ஜெய் ஷா தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி விவகாரங்களை கவனிக்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் வணிகக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய் ஷா ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உறுப்பினர் நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வது ஆகியவற்றை கவனித்துக் கொள்வார். தற்போது இந்தப் பதவியில் உள்ள ரோஸ் மெக்கோலம் விரைவில் ஓய்வு பெறுவதை அடுத்து ஜெய் ஷா தேர்வாகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெய் ஷா தற்போது மெல்போர்னில் நடைபெறும் ஐசிசி … Read more

சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி, மண்டல சுகாதார அதிகாரி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் மண்டல சுகாதார அதிகாரி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறப்பு, இறப்பு பதிவேட்டில் மகேஸ்வரி என பதிவான பெயரை மாற்றி பதிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு 28 கோடி இழப்பு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கடந்த 2066-11ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அரசுக்கு 28 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதுடன், அவர் விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. Pon கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில்.  அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து … Read more

மழைநீர் பெருக்கு காரணமாக வேளச்சேரி சுரங்கப்பாதை மூடல்

சென்னை: மழைநீர் பெருக்கு காரணமாக வேளச்சேரி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. வேளச்சேரி சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வி! இந்திய சிமென்ட்ஸ் விழாவில் அமித்ஷா..

சென்னை:  மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும், ,தமிழகம் மீது பிரதமர் தனிக்கவனம் செலுத்து கிறார் என்றும்,. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன விழாவில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை, மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள் … Read more

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 7,881 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த மாதம் 8ம் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும். இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? என்பது டிசம்பர் 8ம் தேதி தெரிந்துவிடும்.

ICC T20 WC 2022: ஏற்ற இறக்கங்கள் தாண்டி வந்த இரு அணிகள்; பாகிஸ்தான், இங்கிலாந்து கடந்து வந்த பாதை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் சுற்று, சூப்பர் 12 சுற்று என பல அணிகள் பங்குபெற்ற இந்தத் தொடரில் தற்போது பாகிஸ்தானும் இங்கிலாந்தும் மட்டுமே எஞ்சியுள்ளன. இரு அணிகளும் தங்கள் குரூப்பில் இரண்டாவது இடம்பிடித்த அணிகள்தான். முதலிடம் பிடித்த இந்தியாவும் நியூசிலாந்தும் அரையிறுதியில் தோல்வியைச் சந்தித்து வெளியேறிவிட்டன. இங்கிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே தங்கள் கடைசி லீக் போட்டியில்தான் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர். அவர்கள் கடந்து வந்த பாதை எப்படியிருந்தது? … Read more

காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 57 லட்சம் பேர் பலி… ஆய்வு தகவல்..

லண்டன்: காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 57 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர் கனடாவைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வு தகவல் தெரிவிக் கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள மாநிலமாக தலைநகர் டெல்லி திகழ்கிறது. காற்று மாசு காரணமாக அங்குள்ள பள்ளிக்குழந்தைகள் சுவாசிப்பதற்கே சிரமப்படுகின்றனர். இதையடுத்து, காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில், உலகம் முழுவதும் ஆண்டுக்கு 57லட்சம் … Read more

மூணாறு பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு

மூணாறு: மூணாறு பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பதுக்கடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக வட்டவடை சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரிசை திரும்பக்கேட்ட முன்னாள் காதலன்; கூலிப்படை மூலம் தாக்கிய மாணவி – புதிய காதலன் மீதும் வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த செங்கோடி மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின்(22). டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவருக்கும் அணைக்கரை பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜெஸ்லின்(19) என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஜெஸ்லின் வீட்டில் வெல்டிங் வேலைக்குச் சென்ற அறிமுகத்தால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங்கி பழகிய நிலையில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும்படி பிரவினிடம் கூறியுள்ளார். இதையடுத்து பிரவின் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இரு … Read more