நாளையும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு| Dinamalar
சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய பின், நேற்று சன்னிதானத்தில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. நாளையும் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும், 1 லட்சத்து, 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், 50 முதல் 75 சதவீதம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கின்றனர்.நேற்று அதிகபட்சமாக, 87 ஆயிரத்து, 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இரவு வரை, 84 ஆயிரம் பேர் … Read more