தலைப்பு செய்திகள்
மனைவி மேகன் மார்க்கலை நினைத்து பயப்படும் இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மார்க்கலை நினைத்து எப்போதும் ஒரு பயத்திலேயே இருப்பதாகா கூறப்படுகிறது. இளவரசர் ஹரி, தனது மனைவி மேகன் மார்க்கலின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படாவிட்டால், அவர் தன்னை விட்டு பிரிந்துவிடுவார் என்று பயப்படுகிறார். பிரபல சர்வதேச செய்தி நிறுவனத்தின்படி, இளவரசர் ஹரி மேகனை தொந்தரவு செய்யக்கூடிய எந்த தவறும் செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார், ஏனெனில் அவர் தன்னை விட்டு பிரிந்து செல்ல நினைத்தால், அதனை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்களது … Read more
புயல் உருவாக வாய்ப்பு இல்லை ஆனால் 3 நாள் மழை நீடிக்கும்! பாலச்சந்திரன்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை ஆனால் 3 நாள் மழை நீடிக்கும், மீனவர்கள் 2 நாள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இன்றும் நாளையும் கன முதல் மிக கனவழை பெய்யக்கூடும். நேற்று தமிழகத்தில் ரெட் அலர்ட் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் … Read more
கோயில்களின் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கோயில்களின் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியை சேர்க்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. விண்ணப்பதாரரின் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியுடன் கூடிய பகுதியை சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள 560 கோயில்களுக்கு அரசே அறங்காவலர்களை நியமிக்கும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு, அறைக்காவலர்களை நியமிக்ககோரிய வழக்குகள் 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்… சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேச்சு…
அமலாக்கத்துறை மூலம் தவறான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார். சீனா, பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லாத பாஜக அரசு சிவசேனா மீது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சிவசேனா கட்சியை அழிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பாஜக அதற்காகவே கட்சியில் பிளவு ஏற்படுத்திய ஏக்நாத் ஷிண்டே-வுக்கு முதலமைச்சர் பதவி வழங்கி அழகு பார்க்கிறது. ஏக்நாத் ஷிண்டேவை தான் முதலமைச்சர் ஆக்கவேண்டும் … Read more
கொலிஜியத்தின் பரிந்துரைகள் மீது ஒன்றிய அரசு காலதாமதம் செய்வது ஏற்கக் கூடியது அல்ல: உச்சநீதிமன்றம் அதிருப்தி
டெல்லி : கொலிஜியத்தின் பரிந்துரைகள் மீது ஒன்றிய அரசு காலதாமதம் செய்வது ஏற்கக் கூடியது அல்ல உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. காலதாமதம் செய்வதால் நீதிமன்றங்களுக்கு உரிய நேரத்தில் நீதிபதிகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே,காலதாமதத்திற்கு பதிலளிக்குமாறு ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் காலதாமதம் தொடர்பாக பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர்.
தினமலர்- பட்டம் இதழ் மாணவர்களிடம் அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் புகழாரம்| Dinamalar
‘தினமலர் -பட்டம் இதழ்’, மாணவர்கள் மத்தியில் அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் பேசினார். ‘தினமலர்’ நாளிதழின், மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் நேற்று நடந்த ‘பதில் சொல் அமெரிக்கா செல்’ வினாடி வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘தினமலர்’ பட்டம் நாளிதழ் பள்ளி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தி, அவர்களின் உள்ளத்தில் ஒவ்வொரு நாளும் நல்ல செய்திகளை விதைத்துக் கொண்டுள்ளது. உலக … Read more
நீட்: நனவாகிய பீடித் தொழிலாளி மகளின் மருத்துவர் கனவு; பாராட்டிய முதலமைச்சரின் மகள்!
தெலங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் வசிக்கும் பீடி தொழிலாளியின் மகள் ஹரிகா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கான இடத்தையும் பிடித்துள்ளார். தன்னுடைய ஆறரை வயதிலேயே தந்தையை இழந்தவர் ஹரிகா. பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுள்ளார் இவரின் தாய். சிறு சிறு வேலைகளைப் பார்த்து, ஹரிகாவையும், அவரின் சகோதரரையும் படிக்கவைத்துள்ளார். Kavitha Kalvakuntla நிசாமாபாத் ஹோலி மேரி உயர்நிலைப் பள்ளியில் ஹரிகா படித்துக் கொண்டிருந்தபோது, அப்பள்ளியின் கரஸ்பான்டன்ட், இவர்களின் நிலை கண்டு கனிந்து குறைந்த கட்டணத்திலேயே … Read more
ஜேர்மனியில் வேலை இல்லாதவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை! புதிய நலத்திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
புதிய நலத்திட்டத்திற்கு ஜேர்மன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மன் மக்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை அனுபவித்து வருவதால், சமூக நலத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டிய அவசரம் அதிகரித்துள்ளது. நலத்திட்டத்தில் மாற்றம் இந்நிலையில், ஜேர்மன் நாடாளுமன்றம் வியாழன் அன்று வேலையின்மை நலன்களுக்கான Bürgergeld சமூக நலத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த புதிய நலத்திட்டம் தற்போதைய Hartz IV நலத்திட்டத்தில் மாற்றங்களை செய்து கொண்டுவரப்பட்டது. … Read more