நாட்டின் மிகப் பெரும் நன்கொடையாளர் ஷிவ் நாடார்| Dinamalar

புதுடில்லி :இந்தியாவில் மிகப் பெரும் அளவில் நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியலில், ‘விப்ரோ’ நிறுவனர் அசிம் பிரேம்ஜியை பின்னுக்கு தள்ளி, முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார், எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார். ‘ஹுருன் இந்தியா’ நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2022’ எனும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * ஷிவ் நாடார் 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதை அடுத்து, முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நாள் ஒன்றுக்கு, சராசரியாக … Read more

இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் சர்ச்சை – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் பதில் என்ன?

2005-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று எந்த கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு 2023-ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை (18.10.2020), இது குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அப்படி நடத்தினால் மட்டுமே இந்தியா … Read more

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது?..தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தடையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சந்திரயான் – 3 விண்கலம் அடுத்த ஜூன் மாதம் ஏவப்படும்

புதுடில்லி, :”நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான, ‘சந்திரயான் – 3’ விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும்,” என, ‘இஸ்ரோ’ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ‘சந்திரயான்  -  2’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 2019-ல் விண்ணில் ஏவியது. ஆனால், சந்திரயான் விண்கலத்தின், ‘லேண்டர்’ கலன் தொழில்நுட்பக் கோளாறால் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி உடைந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. … Read more

இளம்பெண் ஆசிரியை பாலியல் வன்கொடுமை வழக்கு; காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு 11 கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பேட்டையைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியையான இளம்பெண் கோவளம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், “பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ எல்தோஸ் குந்நப்பிள்ளில் என்னிடம் நெருக்கமாக பழகினார். பின்னர் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று அவரது கழுத்தில் கிடந்த செயினை அணிவித்து `உன்னை கைவிடமாட்டேன்’ என நெருக்கமாக இருந்தார். ஆனால் இப்போது அவர் என்னை விட்டு விலகிச் செல்கிறார். ஏன் விலகிச்செல்கிறீர்கள் … Read more

கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து: இறப்பதற்கு முன் மனைவியிடம் கடைசியாக போனில் பேசிய விமானி

செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) குகைக்கோவிலில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிகத்தை சேர்ந்த 3 பேரும் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானி, விபத்துக்கு முன் கடைசியாக தனது மனைவிக்கு போன் செய்து பேசிய உருக்கமாக பேசியுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில், செவ்வாய்கிழமையன்று குகைக்கோவிலில் இருந்து 6 பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள Garud Chatti என்ற இடத்தில் … Read more

மியான்மர் சிறைச்சாலையில் பார்சல் ஒன்றை பிரித்தபோது குண்டு வெடிப்பு: 8 பேர் பலி

நய்பிடாவ்: யாங்கூன் நகர் இன்செய்ன் சிறைச்சாலையில் பார்சல் ஒன்றை பிரித்தபோது குண்டு வெடித்தது. இதில் சிறை சாலை ஊழியர்கள், கைதிகள், பார்வையாளர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை: நள்ளிரவில் மனைவி கொலை; கதவை பூட்டிவிட்டு கணவர் தலைமறைவு! – என்ன நடந்தது?

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வரபிரசாதம். இவரின் மனைவி விசுவாசம் மேரி. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், நேற்றிரவு இவர்களுக்குள் சண்டை வந்திருக்கிறது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். மனைவி மீதான கோபத்தால் தூங்காத வரபிரசாதம், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த விசுவாச மேரியை அரிவாளால் வெட்டினார். இதில் ரத்த வௌத்தில் அவர் உயிரிழந்தார். கொலை இதையடுத்து விசுவாச மேரியின் சடலத்தை போர்வையால் மூடிய வரபிரசாதம் அந்த அறையின் … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் விசாரணைக்கு 2மாதம் இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் அமலாக்கத்துறை விசாரணைக்கு ச்சநீதிமன்றம் 2மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை  அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாகவும் மற்றும் பணமோசடி வழக்கு அவர்மீதும், அவரது குடும்பத்தினர் மீதும்  பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அவர்மீதான சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிற்து. இந்த வழக்கின் விசாரணையை எதிர்த்து, அனிதா ராதாகிருஷ்ணன் … Read more

இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவப்படிப்பில் இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் 200 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ். மொத்த இடங்கள் 10,825-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டில் 565 மாணவர்கள் சேர உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.