யூடியூப்பில் ஆபாச விளம்பரங்கள் பார்த்துத் தேர்வில் தோல்வி; கூகுளிடம் 75 லட்சம் இழப்பீடு கேட்ட நபர்!

மத்தியப்பிரதேசம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் கிஷோர் சாவித்திரி என்பவர் விவகாரமான ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், யூடியூப்பில் காட்டப்படும் ஆபாச விளம்பரங்களால் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் இதன் காரணமாக, தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு கூகுள் நிறுவனம் 75 லட்சம் ரூபாய் தனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. எஸ்.கே கவுல் தலைமையிலான … Read more

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளாக பி.டி. உஷா உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தங்க மங்கை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பி.டி. உஷா. இந்த சங்கத்தின் 95 ஆண்டுகால வரலாற்றில் சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற ஒருவர் தலைவராக பதவியேற்பது இதுவே முதல் முறை. இந்திய அணி சார்பில் 1934 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற மகாராஜா யுதவிந்தர சிங் … Read more

கடைசி ஒருநாள் போட்டி; வங்கதேச அணிக்கு 410 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

டாக்கா: கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணிக்கு 410 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டாக்காவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்க உள்ளது.

கையில் செருப்பு மாட்டிகொண்டு நூதன திருட்டில் ஈடுபடும் விசித்திர திருடர்கள்…!

போபால், ஒவ்வொரு திருட்டு கும்பலும் ஒவ்வொரு முறையில் திருட்டை நடத்தும். அப்படி ஒரே விதமாக திருட்டை செய்யும் கும்பல் என்றேனும் ஒருநாள் காவல்துறை வசம் அகப்பட்டு விடும். அப்படி தான் மத்திய பிரதேசத்தில் ஒரு திருட்டு கும்பல் வசமாக சிக்கி உள்ளது அதுவும் விசித்திரமான முறையில் திருடி மாட்டிக்கொண்டுள்ளனர். அதாவது , அவர்கள் திருட செல்கையில் காலில் செருப்பு போடுவதற்கு பதில், கையில் செருப்பு மாட்டிக்கொண்டு செல்வார்களாம். அதனால் நாய்கள் தொந்தரவு இருக்காது எனவும் போலீசாரிடம் மாட்டிக்கொள்ள … Read more

குட்டீஸ்களை கவர புதுடிசைன் காலண்டர்கள்; பாடங்கள், பீம், பார்பி என அட்டகாச டிசைன்கள் ரெடி!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு உற்பத்தியைத் தொடர்ந்து உலக அளவில் பெயர்பெற்றது அச்சுத்தொழில் ஆகும். இத்தொழிலில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி வரை வணிக வருவாய் நடைபெறும் இந்தத் தொழில், சிவகாசியின் மற்றொரு முகம் என்றால் அது மிகையாகாது. மாடல்கள் ”நாங்க ஒட்டுற பேப்பரை தெய்வமா கும்பிடுறதைப் பாக்கறப்போ…!’’ – 2019 காலண்டர் தயாரிக்கும் சிவகாசி பெண்கள் 2022-ம் ஆண்டின்‌ கடைசி மாதமான டிசம்பர் தொடங்கி, 10 நாள்களைக் கடந்துவிட்டது. … Read more

அதிவேக இரட்டை சதம்., ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த இந்திய வீரர்!

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையை படைத்துள்ளார். இஷான் கிஷன் சாதனை இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷன், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஓட்டங்கள் எடுத்த 7வது சர்வதேச மற்றும் 4வது இந்திய துடுப்பாட்டக்காரர் ஆனார். 2015 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெறும் 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்த கிறிஸ் கெயிலின் உலக சாதனையை கிஷன் … Read more

‘துணிவு’ படத்தின் சில்லா சில்லா பாடல் கூலாக 1 மில்லியன் வியூஸ்-களை கடந்தது…

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு. இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ‘சில்லா சில்லா’ நேற்று வெளியானது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்-களை கடந்துள்ளது. லிரிக்கல் வீடியோ-வில் கூட கூலர்ஸில் அஜித் குமார் அசத்துவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்..!

மும்பை, மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் பயின்று வருகிறார். அவருடன் 17 வயதான சிறுவன் பழகி வந்துள்ளார். சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இருவரும் முத்தம் கொடுப்பதுபோல் செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி, வெளியிடுவதாக மிரட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமி ஒருமுறை கல்லூரிக்கு வரும்போது, சிறுவன் வெளியே செல்ல என்னுடன் வரவேண்டுமென வற்புறுத்தியுள்ளான். இதனை சிறுமியின் தோழி ஒருவர் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் … Read more

யுபிஐ பணப் பரிமாற்றம்.. வருகிறது புதிய வசதிகள்..!

யுபிஐ பேமெண்ட் ரிசர்வ் வங்கியின் டிசம்பர் மாதத்திற்கான மூன்று நாள் கூட்டம் நிறைவடைந்த போது ரிசர்வ் வங்கியின் கவர்னர்  சக்தி கந்ததாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பல்வேறு நாட்டு நடப்புகள் பற்றி பத்திரிகையாளர்களிடம் அவர் உரையாடினார். அப்பொழுது அவர் உலக அளவில் யுபிஐ பேமெண்ட் முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். UPI `யுபிஐ – டிஜிட்டல் கரன்சிக்கு உள்ள வித்தியாசம் என்ன?’ – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்! மேலும் யுபிஐ பேமெண்ட் … Read more