புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு அடுத்தநாளான 26ந்தேதி பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் வரும் 24ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பணி நிமித்தமாக நகரங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன் காரணமாக, பண்டிகையை முடித்துவிட்டு திரும்பும் வகையில், தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற … Read more