குடும்ப கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை புறக்கணிக்கும் ஹரி, மேகன்? வெளியான தகவல்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது 1988ஆம் ஆண்டு முதல் அரச குடும்பத்தின் கொண்டாட இடமாக Sandringham இருந்து வந்தது  இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் அரச குடும்பத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ராணியின் மறைவுக்கு பின்னர் இந்த ஆண்டு அரச குடும்பத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நார்ஃபோக்கில் உள்ள தோட்டத்தில் நடைபெற உள்ளது. முதல் முறையாக … Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்டுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை நீர் தேங்கியுள்ளதால் அனகாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவ-14: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரொனால்டோ இன்னும் அதை செய்யவில்லை! 9 ஆண்டுகள் ஒன்றாக விளையாடிய நட்சத்திர வீரர் வருத்தம்

ரொனால்டோ இன்னும் தனக்கு வாழ்த்து கூறவில்லை என பென்சிமா வருத்தம் தெரிவித்துள்ளார் உலகக்கோப்பையை வெல்வது எனது சிறந்த பிறந்த நாள் பரிசுகளில் ஒன்றாக இருக்கும் என பென்சிமா கூறியுள்ளார் கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான Ballon d’Or-ஐ பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்சிமா சமீபத்தில் பெற்றார். அவர் முதல் முறையாக இந்த விருதை வென்றுள்ளார். லா லிகா மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களை ரியல் மாட்ரிட் வெல்ல உதவியதற்காக பென்சிமாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது. … Read more

சூரியன் எப்போது சாகும்?

சூரியன் பிறந்து 460 கோடி ஆண்டுகள் ஆகும் நிலையில், எரிந்துகொண்டிருக்கும் அந்த நட்சத்திரம் எப்போது சாகும் என தெரியுமா? இது குறித்து விஞ்ஞானிகளுக்கு ஒரு பதில் கிடைத்துள்ளது. சுமார் 460 கோடி (4.6 பில்லியன்) ஆண்டுகள் பழமையான நமது சூரியன், பூமியின் வானிலை, பருவம், காலநிலை மற்றும் கடல் நீரோட்டத்தை இயக்குகிறது மற்றும் தாவரங்களில் ஒளிச்சேர்க்கையை அனுமதிப்பதன் மூலம் நமது கிரகத்தில் உயிர்கள் வாழ அனுமதிக்கிறது. ஆர்வத்தை தூண்டும் பெரிய நட்சத்திரம் GettyImages நமது கிரகத்தை ஆளும் … Read more

தப்பிச் செல்லும் முன் ரஷ்ய படைகளின் இழிவான செயல்! ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு

கெர்சனின் முக்கிய உள்கட்டமைப்புகளை ரஷ்ய படைகள் தப்பிச் செல்லும் முன் அழித்துவிட்டதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார் கெர்சன் நகரில் பெரும்பாலான வீடுகளில் மின்சாரம், தண்ணீர் இல்லை என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கெர்சனில் இருந்து தப்பிச் செல்லும் முன் ரஷ்ய படைகள் முக்கிய உள்கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். கெர்சனில் இருந்து ரஷ்யா பின் வாங்கிய நிலையில், அங்கிருந்து வெளியேறியபோது நகரின் முக்கிய உள்கட்டமைப்பை அழித்ததாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பில் உக்ரேனிய ஜனாதிபதி … Read more

14.11.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 14 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பொதுமக்கள் கூடும் இடத்தில் குண்டுவெடிப்பு! பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்..பரபரப்பு காட்சிகள்

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர்வாசிகள், காவல்துறை, துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருடன் அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் துருக்கியின் இஸ்தான்புல்லில் பொதுவெளியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்தான்புல் நகரின் பரபரப்பான நடைபாதையில், மாலை 4.20 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் பலியாகி இருக்கலாம் … Read more

மாணவர்களுடன் துபாயில் மியூசியம் ஆப் தி பியூச்சர்-ரை பார்வையிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… வீடியோ

எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல் உள்ளிட்டவை குறித்த அருங்காட்சியகத்திற்கு மாணவர்களை இன்று அழைத்துச் சென்றுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். இணையவழி வினாடி-வினா மூலம் தேர்வு செய்யப்பட்ட 67 அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபாய்க்கு நான்கு நாட்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு பாதுகாவலராக மட்டுமன்றி தாயாகவும் தந்தையாகவும் இருந்து கவனித்து வருகிறார்.   துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் உள்ள அருங்காட்சியகங்கள், வழிபாட்டு தலங்கள், … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வெளியேற்றம் 750 கன அடியாக குறைப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 750 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து ஏரியிலிருந்து நீர் வெளியேற்றமும் குறைக்கப்பட்டுள்ளது.