13.12.22 | Today Rasi Palan | Daily Horoscope | December – 13 | செவ்வாய்க் கிழமை | இன்றைய ராசிபலன் |

Daily Astro predictions for Mesham to Meenam by Srirangam Karthikeyan. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

குழந்தை பெற்றுக்கொள்ள கூடுதல் பணம்: மக்கள்தொகையை அதிகரிக்க முயற்சிக்கும் பிரபல நாடு

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள மக்களுக்கு கூடுதல் பணம் கொடுக்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பான் சில காலமாக குறைந்த மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில், ஜப்பானில் உள்ள சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம், வங்கியில் இன்னும் கொஞ்சம் பணம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. இந்த அறிவிப்பு தங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தையைச் சேர்க்க அதிக மக்களை ஊக்குவிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது. ஜப்பானில் இப்போது … Read more

எம்பி.யாக டிம்பிள் பதவியேற்பு

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின்  மறைவால் மெயின்புரி தொகுதி காலியானது. இதையொட்டி நடந்த இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடிகட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள்  போட்டியிட்டார்.  இதில், 2,40,322 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யாவை வீழ்த்தி டிம்பிள் வெற்றி பெற்றார். எம்பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிம்பிள் யாதவ் நேற்று உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவை கைவிட மறுத்த நபர்; கொன்று உடலை வீசிய தாய், மகன் கைது!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு கருப்பசாமி என்ற மகனும், பவித்ரா, காவ்யா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 2 நாள்களுக்கு முன்பு  கோவில்பட்டி அருகேயுள்ள ஆலம்பட்டி கண்மாயில் காயங்களுடன் கணேசன்  உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், “என்னுடைய கணவருக்கும் கோவில்பட்டி, வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த துரைச்சி என்ற ஒரு பெண்ணுக்கும் … Read more

கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையை யார் வெல்வார்? ஜாம்பவான் ரொனால்டோ கணிப்பு

கத்தாரில் 2022 FIFA உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்று பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ கணித்துள்ளார். ரொனால்டோ நசாரியோ பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ (Ronaldo Nazario) கத்தாரில் நடைபெற்று வரும் 2022 FIFA உலகக் கோப்பையின் வெற்றியாளருக்கான தனது கணிப்பைப் பகிர்ந்துள்ளார். பிரான்ஸ், மொராக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரோஷியா ஆகிய நான்கு அணிகள் எஞ்சியிருக்கும் இந்த போட்டி அரையிறுதியை எட்டியுள்ளது. நாளை (டிசம்பர் 13) நடைபெறும் முதல் அரையிறுதியில் குரோஷியாவை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது, மறுநாள் மொராக்கோவை … Read more

உச்சநீதிமன்ற நீதிபதி தீபாங்கர் பதவியேற்பு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக  தீபங்கர் தத்தா நேற்று பதவி ஏற்றார். மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு ஒன்றியஅரசு ஒப்புதல் வழங்கிய நிலையில்,  ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, அவர் நேற்று பதவியேற்றார்.அவருக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (13-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (13-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர். தேர்வு| Dinamalar

புதுடில்லி: ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர்., திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், ‘ஹாலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன்’ என்ற தன்னார்வ அமைப்பு, ஆண்டுதோறும், சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தாண்டிற்கான சிறந்த படமாக ராஜமவுலி இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர்., படம் கோல்டன் விருதுக்கு தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடில்லி: ராஜமவுலி இயக்கியுள்ள … Read more

எல்லையில் வாலாட்டிய சீன ராணுவம் – விரட்டி அடித்த இந்திய ராணுவம்…!

இட்டாநகர், லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது. இந்தியா- சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் … Read more