மூன்றாம் கட்ட நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம்!

சென்னை:  மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம் பரிமாற்றப்பட்டது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி – தமிழ்நாடு திட்டத்திற் கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜெர்மன் … Read more

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் ஒரு மாநில அரசு இப்படி நடந்துகொள்வது இறையாண்மைக்கு சவாலாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பயம் காரணமாக காங்., அமளி: அமித்ஷா குற்றச்சாட்டு| Dinamalar

புதுடில்லி: சீன தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி பணம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இது குறித்து உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயத்தால், பார்லிமென்டில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அமளி அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டார் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று(டிச.,13) பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டன. … Read more

வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய சுந்தரராஜ பெருமாள் கோயில்; வரலாறும் புராணமும் கூறும் அதிசயங்கள்

தமிழகத்தில் புகழ்பெற்ற பழைமையான வைணவத் தலங்களில் ஒன்று வீரவநல்லூர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில். இந்த தலத்தில் பெருமாள் தனது திருதேவியர் சுந்தரவல்லி அம்பாள் மற்றும் சுந்தரநாயகி அம்பாளுடன் சுந்தர வடிவமாய் பக்தர்களுக்கு அருள்கிறார். சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்னொரு காலத்தில் காசியப முனிவர் என்ற தீவிர வைணவ பக்தர் ஒருவர் வைணவ ஆலயங்களுக்கு சென்று எம்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறாகவே திருமாலிருஞ்சோலையில் கள்ளழகரை வழிபட்டுவிட்டு தென்பக்கம் நோக்கி நடந்த போது ஓரிடத்தில் தியான நிலையில் … Read more

கத்தார் உலகக்கோப்பையில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்து கேப்டன்! இந்திய தொழிலதிபர் கூறிய கருத்து

இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹரி கேன் குறித்து ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். கத்தார் உலகக்கோப்பையின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. பெனால்டியை தவறவிட்ட இங்கிலாந்து கேப்டன்   இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹரி கேன் 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து மிரட்டினார். ஆனால் 84வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி … Read more

உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்! பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதுடன், நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்புக்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவுச்சட்ட காலவரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக,  அனைத்து சார்-பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது. தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை … Read more

அரசு கல்லூரி மருத்துவமனைகளில் மனம் என்ற அமைப்பு தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

36 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் மனம் என்ற அமைப்பு தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மனம் அமைப்பு மூலமாக மனநல பயிற்சி வழங்கப்படும். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மனநல பயிற்சி வழங்கப்படும் என்று அவர் கூறினார். மனம் அமைப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வாரத்தில் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.    

உ.பியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை: வீடியோ வைரல்| Dinamalar

லக்னோ: உத்தர பிரதேசம் காசியாபாத்தில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை மற்றும் இளைஞரிடன் செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி இணையதளத்தில் வைரலாகி, பல்வேறு தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு இளம்பெண்ணை மிரட்டி, அவர் … Read more

`பரந்தூர் விமான நிலையம்… ரூ.2,467 கோடியில் அமைகிறது’ – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக பசுமை விமான நிலையம் அமைப்பதுக்கு மத்திய, மாநில அரசால் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துறை அடுத்துள்ள 4,563 ஏக்கர் நிலப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கிலி பாடி, மாடபுரம், பரந்தூர், கொளத்தூர், நெல்வாய், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் இந்த விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 3,646 ஏக்கர் தனியார் நிலமும், 1,542 ஏக்கர் அரசு நிலமும் அடங்கும். இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து … Read more

கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது மரணம்! ஓரினச்சேர்க்கை காரணமா?

கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது பத்திரிக்கையாளர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட் வஹில் தமிழ் வம்சாவளி பெண்ணான செலின் கவுண்டரின் கணவரும், அமெரிக்க பத்திரிக்கையாளருமான கிராண்ட் வஹில் (48) சமீபத்தில் கத்தார் உலகக் கோப்பையில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். கிராண்ட் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவரின் சகோதரர் பரபரப்பை கிளப்பினார். அதன்படி கிராண்ட் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவுடன் பல தரப்புகளில் இருந்தும் கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறினார். கிராண்ட் உயிரிழந்த 48 … Read more