2022 தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

புதுடில்லி: 2022 ம்ஆண்டிற்கான மத்திய அரசின் விளையாட்டு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைக்குளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் விளயைாட்டு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இதன் படி 2022 ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 25 பேருக்கு அர்ஜூனா விருதுகள் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜானதிபதி மாளிகையில் வரும் 30-ம் தேதி நடக்கவுள்ள விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்கிறார். அதன் … Read more

“நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றமே மாற்றுகிறது!" – ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து நாராயணசாமி

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் நேரு சிலைக்கு அரசு சார்பில் வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நேருவின் உருவப்படத்துக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ராஜீவ் காந்தி … Read more

இஸ்தான்புல் நகர குண்டுவெடிப்பு…தப்பி ஓடிய பெண் குண்டுதாரி: cctv காட்சிகளால் அதிர்ச்சி!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த பயங்கரமான குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்திற்குரிய பெண் குண்டுதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்-லின் மையப்பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இஸ்தான்புல்லின் பிரபலமான பாதசாரிகளின் இஸ்டிக்லால் அவென்யூவில் நேற்று நவம்பர் 13ம் திகதி இந்த அதிர்ச்சியூட்டும் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள பரபரப்பான ஷாப்பிங் தெருவில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில், ஆறு பேர் வரை கொல்லப்பட்டனர், மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் … Read more

திமுக பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் 52,000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு! அறநிலையத்துறை தகவல்

சென்னை:  திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல கோயில்களுக்கு சொந்தமான 52,000 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக  அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோயிலுக்கு சொந்தமான 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. தமிக  சட்டசபையில் 1985-87ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோயில்களுக்கு சொந்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், 2018-19ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் … Read more

708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது

சென்னை: 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. கிராமங்களை போல, நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவைகளை இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

ஜி20 மாநாடு: இந்தோனேஷியா சென்றடைந்தார் மோடி| Dinamalar

புதுடில்லி: ஜி-20 மாநாட்டில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இந்தோனேஷியா சென்றடைந்தார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில், ‘ஜி- – 20’ மாநாடு நாளை (நவ.,15) மற்றும் நாளை மறுநாள் ( நவ.,16) ஆகிய இரு நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியா சென்றடைந்தார். பாலி சென்றடைந்த அவரை அந்நாட்டு அரசு உயரதிகாரிகள், தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இம்மாநாட்டின் போது வளர்ந்து வரும் உலகளாவிய … Read more

ஜி-20 மாநாடு: முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட பைடன், ஜி ஜின்பிங்! – இருநாட்டு உறவு குறித்துப் பேச்சு

உலக பொருளாதாரத்தில் முதன்மையாக விளங்கும் இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்களும் ஜி- 20 உச்சிமாநாட்டில் சந்தித்துக் கொண்டனர். மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும், இன்று ஜி-20 உச்சிமாநாட்டில் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு வளர்ந்து வரும் வேறுபாடுகளைச் சமாளிக்கவும், மோதலை தவிர்க்கவும் வழிவகுக்கும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். தைவான் உள்ளிட்ட சில பிரச்னைகள் தொடர்பாகப் பல மாதங்களாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் நிலவிய … Read more

பாஜக ஆளும் மாநிலங்களில் கமிஷன் இல்லாமல் வேலை நடப்பதில்லை – உத்தரகாண்ட் பாஜக முன்னாள் முதல்வர் ராவத் பேச்சு… வீடியோ

உத்தரகாண்ட் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று பாஜக-வைச் சேர்ந்த உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்த பணிகளுக்கு 20 சதவீத கமிஷன் வாங்கப்பட்டு வந்தது அதிலிருந்து பிரிந்த உத்தரகாண்ட் மாநிலத்திலும் அதே 20 சதவீதம் கமிஷனாக வாங்கப்படுகிறது என்று அதில் பேசியுள்ளார். … Read more

செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு!

டெல்லி: செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார். டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

‛‛தவறு செய்தவர்கள் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளியுங்கள்: மம்தா வேண்டுகோள்| Dinamalar

கோல்கட்டா: ஊழல் வழக்குகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களுக்கு இவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என சுவேந்து அதிகாரி கூறியிருக்கிறார். நீங்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறீர்கள். நாம் எப்போதும், ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை எடை போடக்கூடாது. இந்திய ஜனாதிபதி இருக்கிறார். அவரை நாம் மதிக்கிறோம். ஆனால், அவர் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார் என்று மே.வங்க … Read more