தங்கையின் திருமணத்தில் அசத்திய அண்ணன்: சீதனத்தை பார்த்து வியந்த உறவினர்கள்

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தங்கையின் விருப்பத்திற்கு ஏற்ப சண்டை கிடாய், ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய் மற்றும் சண்டை சேவல் ஆகியவற்றை திருமணத்தில் சீதனமாக வழங்கி அசத்திய அண்ணன் பாசம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. தங்கையின் திருமணத்தில் அசத்திய அண்ணன்  தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுரேஷ்- செல்வி தம்பதியினரின் மகளான விரேஸ்மாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் திருமண வரவேற்பு மணமேடைக்கு அருகில் வந்த விரேஸ்மாவின் அண்ணன் ராயல், தானும், தனது தங்கையும் சிறு … Read more

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 36 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் மனம் என்ற அமைப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,   “மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலக தற்கொலைத் தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தற்கொலைக்கு காரணமான பூச்சிக் … Read more

சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் சோதனை நடத்தி ரூ.30 லட்சம் திருடிச் சென்றவர்களுக்கு போலீஸ் வலை..!!

சென்னை: சென்னை முத்திபால்பேட்டையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் சோதனை நடத்தி ரூ.30 லட்சம் திருடிச் சென்றவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது. சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்திவரும் அப்துல்லா என்பவரின் வீட்டுக்கு இன்று காலை ஒரு கும்பல் வந்தது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கூறி வீட்டில் இருந்த ரூ.10 லட்சத்தை எடுத்து சென்றுள்ளனர்.

ராகுலின் 100வது நாள் பாதயாத்திரை: ஹிம்மாச்சல முதல்வர் பங்கேற்பு| Dinamalar

ஜெய்ப்பூர்: காங்., எம்.பி ராகுலின் பாரத் ஜோடோ நடைப்பயணம் வரும் 16ம் தேதி 100வது நாள் ஆகும். அந்த நாளில் ஹிமாச்சல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். காங்., எம்.பி. ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் தூரத்துக்கான 150 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையை துவக்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, … Read more

மதுரை: `பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகூட இல்லை!' – ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்

கடந்த 13 வருடங்களில் செல்போன் பேசியபடி, பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் 205 பேரில், 6 பேரிடம் மட்டும் அபராதம் வசூலித்திருப்பதாக மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் அளித்திருக்கும் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்டிஐ இது குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற்றிருக்கும் சமூக ஆர்வலர் எம்.காசிமாயனிடம் பேசியபோது, “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எட்டு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் சுமாா் 24,000 நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் மதுரை போக்குவரத்து கழக … Read more

விவாகரத்து முடிவு! வருத்தத்திலும், குழப்பத்திலும் நடிகை ஹன்சிகா குடும்பத்தினர்

நடிகை ஹன்சிகாவின் சகோதரர் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹன்சிகா சகோதரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்பூரில் நடிகை ஹன்சிகாவுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அவர்களது குடும்பத்தில் திருமணம் முடிந்த பத்தே நாட்களில் விவாகரத்து விவகாரம் ஒன்று பூதாகரமாகியுள்ளது. ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் மோத்வானி, தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் விவகாரத்து முடிவுக்கு சென்றுள்ளார். பிரசாந்த் மோத்வானிக்கும், அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் இடையே அண்மைக்காலமாக சுமூகமான உறவு இல்லை … Read more

சிறை கைதிகளில் 77.1 சதவீதம் விசாரணை கைதிகள்… பாராளுமன்றத்தில் அமைச்சர் தகவல்…

2021 ம் ஆண்டு டிசம்பர் 31 முடிய சிறையில் உள்ள 5.54 லட்சம் கைதிகளில் 4.27 லட்சம் கைதிகள் அதாவது 77.1 சதவீதம் விசாரணை கைதிகள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷியாம் சிங் யாதவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் ஆஷிஷ் மிஸ்ரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள விசாரணை கைதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்த வகுப்பை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் எதிர்ப்பு: இளைஞரை பொதுவெளியில் தூக்கிலிட்ட இரான் அரசு – வலுக்கும் கண்டனங்கள்!

இரானில் கடந்த சில மாதங்களாக, முஸ்லிம் பெண்கள் மீதான அரசின் புதிய ஆடைக்கட்டுப்பாடு கொள்கைக்கெதிராக பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல், ஹிஜாப் சரியாக அணியவில்லை என கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், போலீஸ் காவலிலேயே உயிரிழந்தது நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது. அதைத் தொடர்ந்து மஹ்சா அமினி இறப்புக்கு நியாயம் வேண்டி நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் – இரான் இரானிய அரசும், … Read more

இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். விளம்பர நோக்கில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்தனர்.