உருவகேலிக்கு பதில் அளித்த கேரள கல்வித்துறை அமைச்சர்; பாடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை!

உருவ கேலிக்கு எதிரான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், அது குறித்து பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், ‘அமைச்சரே உங்கள் வயிற்றை குறையுங்கள்’ என கமென்ட் செய்திருந்தார். Representational Image இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவன்குட்டி, … Read more

பெண்ணின் வாய் வழியாக 4 அடி நீள பாம்பை வெளியே எடுக்கும் மருத்துவர்: வைரல் வீடியோ

பெண் ஒருவரின் வாய் வழியாக 4 அடி நீள பாம்பு ஒன்றை மருத்துவர் ஒருவர் எடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. வைரல் வீடியோ பெண்ணின் வயிற்றுக்குள் சென்றுவிட்ட பாம்பு ஒன்றை மருத்துவர் ஒருவர் வெளியே எடுக்கும் காட்சியைக் காட்டும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மருத்துவர் ஒருவர் எண்டோஸ்கோப் என்னும் கருவியின் உதவியால் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் சென்ற பாம்பை, அவரது வாய் வழியாக … Read more

பிளஸ்2 முடித்துவிட்டு கல்லூரியில் சேராத 777 அரசுப்பள்ளி மாணாக்கர்கள் கல்லூரியில் சேர நடவடிக்கை – உதவித்தொகை வழங்க உத்தரவு!

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள்  18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியை தொடராத மாணவர்களை கண்டறிந்து அதற்கான காரணங்களை கேட்டு அவர்கள் உயர்கல்வி பயில நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணி … Read more

பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்..!!

மதுரை: குற்ற வழக்கு பின்னணி கொண்ட பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. 3வது முறையாக கோயில் அறங்காவலராக தேர்வான சொக்கலிங்கம் மீது பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு நிலுவையில் உள்ளதால் சொக்கலிங்கம் அறங்காவலராக தேர்வானது செல்லாது என உத்தரவிட கோரி மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

பல்கலை., செயல்பாட்டின் அரசு தலையீடு அதிகம்: கேரள கவர்னர்| Dinamalar

புதுடில்லி: பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாட்டின் அரசாங்கம் அதிகமாக தலையிடுகிறது. அதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் என கேரள கவர்னர் ஆரிப் கான் கூறினார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கேரள உயர்கல்வித்துறையில் கவர்னர் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் இடது ஜனநாயக முன்னணி கட்சிகள் இன்று(நவ.,15) திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு மாபெரும் கண்டன பேரணியை நடத்தின. இந்நிலையில், … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம். மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags … Read more

தோனியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வர நினைக்கிறதா பி.சி.சி.ஐ? பின்னணி என்ன?

T20 உலகக்கோப்பையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான  போட்டியில் இந்தியா தோல்வியுற்றது குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் தோனியை நியமிப்பதற்கு பி.சி.சி.ஐ திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம், கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐ.சி.சி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இதை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து அனைத்து ஐ.சி.சி கோப்பைகளையும் பெற்றுத் தந்த தோனியை இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் நியமித்து எதிர்கால வீரர்களுக்குப் … Read more

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2.50 கோடி வழங்கினார்…

சென்னை:  அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகஅரசு சார்பில்  ரூ. 2.50 கோடி காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவரிடம் இந்த காசோலை வழங்கப்பட்டது. அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  … Read more

கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அசாமில் ராணுவ ரோந்து வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு உல்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

கவுகாத்தி, அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் நேற்று காலை ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தகவலின்படி, நேற்று காலை பயங்கரவாதிகள் பெங்கேரி-திக்பாய் சாலையில் (வனஞ்சல்) ராணுவ வாகனங்களை தாக்குதல் நடத்தினர். ராணுவ அதிகாரிகள் அளித்த தகவலின்படி, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, ராணுவ வீரர்களும் பதிலடித் தாக்குதல் நடத்தினர், அதன் பிறகு பயங்கரவாதிகள் சுற்றியுள்ள காடுகளில் பதுங்கியிருந்தனர். இருப்பினும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துள்ளது. தேடுதல் பணி இன்னும் … Read more