அமெரிக்கா, கனடாவுக்கு தபால் சேவை நிறுத்தம் – இந்திய தபால் துறை

புதுடெல்லி, இந்திய தபால் துறை அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை நேற்று (ஆகஸ்ட் 25) முதல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதற்கு காரணம், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு எதிர்ப்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்பு 800 டாலர் வரை மதிப்புள்ள அஞ்சல் பொருட்களுக்கு வரி விலக்கு இருந்த நிலையில், இப்போது 100 டாலருக்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு … Read more

"ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையெனில் வேட்டையாடுவோம்" – ஐ.நா-வில் ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை

பாலஸ்தீனம் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை இன்னும் 10 நாள்களில் இரண்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கிறது. உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை போரை நிறுத்த வலியுறுத்தினாலும், கண்டித்தாலும் அமெரிக்கவின் ஆயுத உதவியுடன் இதுவரை 65,000-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்து போரைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது இஸ்ரேல். பலியான குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 20,000-க்கும் மேல். எஞ்சியிருக்கும் பாலஸ்தீனியர்களின் உயர்களைக் காப்பாற்ற ஐ.நா-வில் பாலஸ்தீனத்தை தனி நாடக அங்கீகரிக்கும் தீர்மானத்தை 157 நாடுகள் நிறைவேற்றின. இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் பட்டினியில் … Read more

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆர்கானிக் பொருட்களை ஒழுங்கமைப்பது குறித்த ஒப்பந்தம்…

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கரிமப் (organic) பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஏற்பாட்டில் (Mutual Recognition Arrangement – MRA) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் கரிம வர்த்தகத்திற்கான தேவைகளை எளிதாக்கும் என்றும், சான்றளிக்கப்பட்ட கரிமப் பொருட்கள் இரு நாடுகளுக்கும் இடையில் தடையின்றி செல்வதை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு நாடுகளிலும் உள்ள விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் கரிமச் சான்றிதழ் தரநிலைகளை அங்கீகரிப்பதன் மூலம், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கரிம உணவு … Read more

சுற்றுலா செல்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் பலாத்காரம்

நகரி, – தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் தார்நாகா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3 மாணவிகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் பதுகம்மா விழா நடைபெறுவதாக கூறி வெளியே சென்றனர். ஆனால் வீடு திரும்பவில்லை. மாயமான 3 மாணவிகளையும் கண்டுபிடித்து தரும்படி அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.போலீஸ் விசாரணையில், சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை கூறி 3 மாணவிகளும் ஐதராபாத் மாநகராட்சி ஊழியர் மது (வயது 19) என்பவருடன் … Read more

26 புதிய நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள  26 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி,  தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 26 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கள்ளக்குறிச்சியில் ரூ. 4.01 கோடியில் மாவட்ட மைய நூலகங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பள்ளிக்கல்வித் துறையின் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் 26 நூல்களையும் … Read more

அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்தார். இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்.1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.மேலும் அமெரிக்காவை மையமாக்கொண்டு உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமெரிக்காவிற்குள் மருந்து தொழிற்சாலை கட்டுமான பணிகளை தொடங்கினால் வரி விதிப்பு இல்லை என்றும் … Read more

நடிகர் ஜெய்சங்கர் வசித்த பகுதி சாலை ‘ஜெய்சங்கர் சாலை’ என மாற்றம்! பெயர் பலகையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை:  சென்னையில், நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த பகுதி சாலையை,  ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெய்சங்கர் சாலை என்ற  பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மறைந்த தலைவர்கள், நடிகர்கள் போன்றோரை  கவுரப்படுத்தும் வகையில், அவர்கள் வசித்து வந்த பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்டி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக இன்று  சென்னையில்,  நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை, … Read more

மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு

புதுடெல்லி, அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்து வருகிறார். இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை அவர் அறிவித்தார். குறிப்பாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை காரணமாக காட்டி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தியுள்ளார். இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் … Read more