“அறிவுப்பூர்வமாக விவாதம் நடத்த பாஜக-வில் ஆளில்லை” – சொல்கிறார் தொல்.திருமாவளவன்

“திமுக எம்.பி ஆ.ராசா சனாதனம் குறித்து சில கருத்துக்களைத் தொடர்ந்து பேசிவருகிறார். அதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்களே?” “ஆ.ராசா பேசிவரும் கருத்துகள், அவருடைய சொந்த கருத்துகள் அல்ல. மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களைத்தான் அவர் பேசிவருகிறார். இப்படியெல்லாம் மனு தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அவர் கூறுகிறார். அதற்காக அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மோசமான கருத்து இடம்பெற்றிருக்கும் அந்த புத்தகத்தைத்தான் தடை … Read more

19-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

ஷோரனூர்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாலக்காட்டின் ஷோரனூரில் இருந்து 19-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. ராகுலுடன் சேர்ந்த 118 பேர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் ராகுலுடன் இணைந்து … Read more

அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்பு

சென்னை: அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

2 குழந்தைகளுடன் டாக்டர் பலி| Dinamalar

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே, மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பற்றியதில், டாக்டர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். ஆந்திராவின் திருப்பதி அருகேயுள்ள ரேணிகுன்டாவில் வசிப்பவர் டாக்டர் ரவிசங்கர் ரெட்டி, ௪௯. இவரது மனைவியும் டாக்டர். இவர்கள், மூன்று மாடி குடியிருப்பின் தரை தளத்தில் மருத்துவமனை நடத்தினர். இரண்டாவது தளத்தில், தங்களின் ௧௧ வயது மகள், ௭ வயது மகன் மற்றும் ரவிசங்கரின் மாமியார் ஆகியோர் வசித்து வந்தனர். … Read more

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம் – ராகுல்காந்தி

கோழிக்கோடு, பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ தூரத்தை கடந்து 15-வது நாளில் (22-ந்தேதி) திருச்சூர் மாவட்டம் சாலைக்குடியில் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் 16-வது நாளாக தனது பாதயாத்திரையை தொடர்ந்தார். காலை 6.30 மணிக்கு திருச்சூர் பேராம்பிரா சந்திப்பில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. அங்கு தொண்டர்கள் அவருக்கு … Read more

தொடர்ந்து வீழ்ச்சி காணும் ரூபாய்.. என்னவெல்லாம் விலை அதிகரிக்கும்.. !

இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத அளவுக்கு சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து பணவீக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. பணவீக்கத்தின் மதிப்பானது தற்போது 7% என்ற லெவலில் காணப்படும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இலக்கு 6% ஆக உள்ளது. ஆக மேற்கொண்டு ரூபாயின் மதிப்பு சரிவானது வர்த்தக பற்றாக்குறையை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 8 மாதம் தான்.. இந்திய பொருளாதாரத்தை மிரட்டும் அன்னிய செலாவணி..! ரிசர்வ் வங்கி … Read more

Doctor Vikatan: பிரசவத்துக்கு பின் வயிற்றைச் சுற்றிவரும் தழும்புகளை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதி விரிவடைவதால், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படுகிற தழும்புகளைப் போக்க ஏதேனும் வழிகள் உண்டா? அதைத் தவிர்க்க முன்கூட்டியே ஏதேனும் க்ரீம் உபயோகிக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா… சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா கர்ப்பமான முதல் மாதத்திலிருந்தே இதற்கான அக்கறை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது தரமான மாய்ஸ்ச்சரைசரை வயிற்றைச் சுற்றி மென்மையாகத் தடவி வரலாம். கண்ட கண்ட எண்ணெய்கள், மற்றவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம்கள் போன்றவற்றைப் … Read more

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுப்பு

புதுடெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதி முடிகிறது. இந்நிலையில் தான் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவி ஏற்க மத்திய அரசு கூறியதை மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹத்கி மறுத்துள்ளார். இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீலான 91 வயது நிரம்பிய கேகே வேணுகோபால் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2017 முதல் இந்த பதவியில் செயல்பட்டு வருகிறார். அட்டர்னி ஜெனரல் பதவி என்பது பொதுவாக 3 ஆண்டு காலத்துக்கு … Read more

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு எடுக்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் தக்க நேரத்தில் தமிழக அரசு எடுக்கும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். பாலாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாலறு அணை பற்றி ஆந்திர முதல்வர் பொதுக்கூட்டத்தில் பேசியதை வைத்து எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அறிக்கை விட்டிருக்கிறார். எந்த அணையும் கட்டாத ஈபிஎஸ்க்கு நிர்வாகரீதியான செயல்பாடுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் … Read more

காங்கிரஸுக்கு எதிரான புதிய கட்சியை இன்று அறிவிக்கிறார் குலாம் நபி ஆசாத்!

India oi-Mathivanan Maran ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக புதிய அரசியல் கட்சியை இன்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவிக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைமையில் இருந்து மாற்றம் தேவை என்பதை மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பிய தலைவர்கள் ஜி23 தலைவர்கள் என … Read more