வங்கதேசம்: ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி!!

டாக்கா: வங்கதேசம் அருகே ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.   23 பேர் பலியாகிய நிலையில் மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

9 வயதில் ஆப் டெவலப்பர்.. அசத்தும் இந்திய சிறுமிகள்.. வாழ்த்து தெரிவித்த ஆப்பிள் டிம் குக்!

ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் , துபாயினை சேர்ந்த 9 வயதான சிறுமி ஹனாவுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 9 வயதிலான ஒரு குழந்தை வெப் டெவலப்பராக முடியுமா என்றால்? அது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மை தானா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். ஆனால் இது உண்மை தான். மிக இளம் வயது டெவலப்பரான ஹனா, இந்தியாவினை சேர்ந்தவராவார். ஆபிஸ் வரணுமா, வேலையே வேண்டாம்.. ஆப்பிள் உயர் அதிகாரி அறிவிப்பால் டிம் … Read more

“நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி!" – சீமான் தாக்கு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. சீமான் ஒருபுறம், இஸ்லாமிய இயக்கங்களைக் குறிவைத்து, தேசியப் புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் விசாரணை, கைது என அதிகாரப்பலத்தின் மூலம் … Read more

ரோகித் சர்மா அதிரடி! 8 ஓவர் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. செப்டம்பர் 20-ஆம் திகதி நடந்த முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் முக்கியமான இரண்டாவது டி20 போட்டி வெள்ளிக்கிழமை நாக்பூரில் நடைபெற்றது. அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. மழையின் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது, இதனால் ஒவ்வொரு அணிக்கும் மொத்தமாக 8 … Read more

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோர் கைது

கோவை: பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளாக இருக்கின்றனர் என கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை கர்நாடகா பயணம்| Dinamalar

புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் பயணமாக நாளை(செப்.,26) கர்நாடகா செல்கிறார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றபின் முதல் மாநில பயணமாக கர்நாடகாவிற்கு செல்கிறார்.நாளை மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை துவங்கி வைக்கும் அவர், தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் திறந்து வைக்கிறார்.நாளை மறுநாள் பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தியையும் ஜனாதிபதி திறந்து வைக்கிறார். புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் பயணமாக நாளை(செப்.,26) … Read more

“ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான திரைப்படங்கள் வரவேற்கத்தக்கன" – பூ பார்வதி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடந்த ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையை அடுத்த வெள்ளலூரில் “குமுக‌‌ழ அழககம்” என்ற பெயரில் குடும்ப அழகு நிலையம் ஒன்றைத் திறந்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகை “பூ” பார்வதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை பார்வதி, “கௌசல்யா மற்றும் அவரைப் போன்ற பெண்களுக்காக நான் இங்கு வந்துள்ளேன், காதலிப்பதற்கும் அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு. பெண்களின் உரிமையைச் சிலர் திருட பார்க்கிறார்கள். … Read more

வள்ளுவரும், பெரியாரும் தான் உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் வள்ளுவரும், பெரியாரும்தான் என கூறினார். கனடாவில் சமூகநீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாடு நடைபெற்றது. இதில் நேரடியாக கலந்து கொள்ள முடியாததால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கனடாவில் இந்த மாநாடு நடைபெறுவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். சமூகநீதிக்கான பன்னாட்டு மாநாடு 2017-ம் … Read more

அடேங்கப்பா!.. பாஜகவையே பின்னுக்கு தள்ளிட்டீங்களே.. கோவா தேர்தல் செலவில் மம்தா பானர்ஜி கட்சி முதலிடம்!

India oi-Mani Singh S பானாஜி: கடந்த ஆண்டு நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில், தேர்தல் செலவுகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. கோவா மாநிலத்திற்கு கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் முயற்சி எடுத்து தீவிர தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டன. கோவா சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மி கட்சியும் … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு: நிதியமைச்சர் விளக்கம்| Dinamalar

புனே: மற்ற கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு “மிக நன்றாக” உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை கண்டது. ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி, ஒரு டாலருக்கு நிகராக 39 காசுகள் சரிந்து இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக உள்ளது.அமெரிக்க … Read more