சதித் திட்டம் தீட்டிய 3 நபர்கள் கைது| Dinamalar

புதுடில்லி : டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாச வேலையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்ததாவது:டில்லியைச் சேர்ந்த நீரஜ் செராவத், ஹரியானாவைச் சேர்ந்த நரேஷ் சவுத்திரி மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள், கொலை, பணம் பறிப்பு, பயங்கரவாதச் செயல்களில் மக்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச் … Read more

உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்; பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு பயிலும் குரிந்தர் சிங் என்ற மாணவருக்கும், மற்றொரு மாணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதுதொடர்பாக மாணவர் குரிந்தர் சிங்கை பள்ளி முதல்வர் ராம்சிங் வர்மா திட்டி கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், நாட்டு துப்பாக்கியால் பள்ளி முதல்வர் மீது இருமுறை சுட்டார். அந்த காட்சி, பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. காயமடைந்த முதல்வர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,539,682 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.39 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,539,682பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 619,952,013 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 599,820,175 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,956 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை உள்பட பல மாவட்டங்களில் பிஎஃப்ஐ கட்சியினர் பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..

சென்னை: கோவை உள்பட பல மாவட்டங்களில் பிஎஃப்ஐ கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தைலையும், வன்முறையில் ஈடுபட்டு வரும்  சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், 17 மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன்  தலைமை செயலாளர் இறையன்பு அவசர ஆலோசனை நடத்தினார். திமுக எம்.பி. ராசாவின்  இந்து துவேச பேச்சு, என்ஐஏ சோதனை போன்றவற்றால், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் மேலும் சில மாவட்டங்களில் பாஜக பிரமுகர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மற்றும்  பாஜக … Read more

சவப்பெட்டி நாற்காலியை உருவாக்கிய பிரித்தானியர்! சொல்லும் காரணங்கள்..

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்காக இந்த சவப்பெட்டி நாற்காலி வடிவமைக்கப்பட்டுள்ளது. நண்பரிடம் வேடிக்கையாக பேசிக்கொண்டிருக்கும்போது சொன்ன விடயத்திலிருந்து இந்த யோசனை வந்ததாக கூறுகிறார். பிரித்தானியாவை தளமாகக் கொண்ட வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி வடிவ அலுவலக நாற்காலிகளின் வரிசை, தங்கள் கணினிகளில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் The Last Shift Office Chair அல்லது Chair Box என்று பெயரிட்டுள்ளார். இந்த நாற்காலி சவப்பெட்டிகளின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு ஒரு சவப்பெட்டியை ஒத்த … Read more

தமிழக பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும்! புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர். தகவல்..

மதுரை: தமிழக சட்டப்பேரவையில் அடுத்து தாக்கல் செய்யப்பட உள்ள  பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும், எல்லோருக்கும் எல்லாம் எனும் தத்துவத்தில் திமுக ஆட்சி செயல்படுகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில்  புத்தக கண்காட்சி-2022ஐ  தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, அனைவருக்கும் கல்வி, சம வாய்ப்பு … Read more

கனடாவில் வீடுகளை சூறையாடிய பியோனா புயல்: மின்சாரம் இல்லாமல் தவிக்கும் லட்சக்கணக்கான மக்கள்

கனடாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் பெரும் சேதாரம் ஏற்ப்பட்டுள்ளது. பல வீடுகள் கடல் நீருக்குள் அடித்துச் செல்லப்பட்டன, லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்துவருகின்றனர். பியோனா (Fiona) என பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த புயலானது, கனடாவின் கிழக்கு பகுதியை பயங்கரமான சூறாவளி-காற்றுடன் தாக்கியது. இந்த புயலால் குறிப்பாக நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடித்து சேதமடைந்தன. பலர் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பெண் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளியில் பீதியை கிளப்பிய ‛கருஞ்சீரகம்’ .. வெடிபொருள் என பரவிய தகவலால் பரபரப்பு

Tamilnadu oi-Nantha Kumar R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருஞ்சீரகத்தை பார்த்து வெடிமருந்து என போட்டோக்கள் வெளியான நிலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையானது. கைது நடவடிக்கை பள்ளிக்குள் நுழைந்தவர்கள் வாகனங்களை … Read more

25.09.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 25 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்: வடசென்னையில் போக்குவரத்து மாற்றம்… முழு விவரம்

சென்னை: சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுவதால், வட சென்னை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து 21 திருக்குடைகள் உபய உற்சவ ஊர்வலமாக சென்று திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.  கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருக்குடை ஊர்வலம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு திருப்பதி திருக்குடை கவுன் தாண்டுகிறது. இதன் … Read more