வரதஆஞ்சநேயர் திருக்கோயில், பெரணமல்லூர்
வரதஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் அமைந்துள்ளது. மலைகளும் வயல்களும் நிறைந்த இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒருநாள் அவர்கள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்தை தோண்டிப் பார்க்க, அங்கே அனுமன் சிலை இருந்ததைக் கண்டு வியந்தனர். பின்னர் அருகேயிருந்த சிறுகுன்றின்மேல் ஊர் மக்கள் உதவியுடன் அனுமனைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அடுத்த வருடமே அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தது. … Read more