ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

ஸ்ரீபெரும்புதூர்: ஒற்றுமை நடைபயணம் இன்று தொடங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்துகிறார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றை நட்டு வைத்தார்.

திருச்சூர் நகருக்கு ஐ.நா., அங்கீகாரம்| Dinamalar

புதுடில்லி கேரளாவின் திருச்சூர், நிலாம்பூர் ஆகிய நகரங்களை, சர்வதேச அளவிலான கற்றல் நகரங்கள் பட்டியலில், ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனெஸ்கோ’ அமைப்பு இணைத்துள்ளது. ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, பல்வேறு நாடுகளில் உள்ள நீண்ட கால கற்றல் முறையை ஊக்குவிக்கும் வகையில், அவற்றில் சிறப்பாக செயல்படும் நகரங்களை அங்கீகரித்து வருகிறது. இவ்வாறு அங்கீகரிக்கப்படும் நகரங்கள், சர்வதேச அளவிலான கற்றல் நகரங்களின் பட்டியலில் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தப் பட்டியலில், தற்போது 44 நாடுகளைச் சேர்ந்த, … Read more

செப்டம்பர் 7: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 109-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 109-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,506,558 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.06 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,506,558 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 611,139,618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 588,691,529 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,043 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரூ.1,200 கோடி போதைப் பொருள் பறிமுதல் : ஆப்கனை சேர்ந்த மூவர் சிக்கினர்

புதுடில்லி:உத்தர பிரதேச மாநிலத்தில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர், சமீபத்தில் புதுடில்லியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் 2016ம் ஆண்டு முதல் நம் நாட்டில் தங்கியுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.அவர்கள் அளித்த வாக்குமூலப்படி, உ.பி., தலைநகர் லக்னோவில் ஒரு கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 312.5 கிலோ, ‘மெத்தம்பேட்டமைன்’ மற்றும் … Read more

கர்நாடக உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டி திடீர் மரணம்

பெங்களூரு: கர்நாடக உணவுத் துறை மந்திரி உமேஷ் கட்டி மாரடைப்பால் நேற்றிரவு திடீரென்று மரணம் அடைந்தார். உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டி கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. இதில் வனம் மற்றும் உணவுத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி. அவருக்கு வயது 61. பா.ஜனதா மூத்த தலைவரான இவர், பெலகாவி மாவட்டம் உக்கேரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் வசித்து வந்தார். … Read more

உலகளவில் 61.11 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65.06 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.87 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப் – 07 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அ.தி.மு.க., விவகாரம்பன்னீர் மேல்முறையீடு| Dinamalar

புதுடில்லி, அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில், ஜூலை 11-ல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இது தொடர்பாக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளித்தார்.தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த இரு நீதிபதிகள் … Read more

மின்வாரிய தேர்வு முறைகேடு; மேலும் 3 பேர் சிக்கினர்

பெங்களூரு: கர்நாடக மின்சாரத்துறையில் காலியாக இருந்த 600 இளநிலை பொறியாளர் பதவிக்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி தேர்வு நடந்தது. பெலகாவி மாவட்டம் கோகாக்கில் ஒரு தேர்வு மையத்தில் நடந்த தேர்வில் சிலர் தேர்வின் போது முறைகேடு செய்து இருந்தனர். இதுகுறித்து கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை கோகாக் … Read more