தூத்துக்குடி அருகே தனியார் பள்ளி வாகனத்தின் அவசரகால கதவு திடீர் திறப்பு: 5ம் வகுப்பு மாணவி கீழே விழுந்து படுகாயம்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தின் அவசரகால கதவு திடீரென திறந்ததால் மாணவி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 5ம் வகுப்பு மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த பள்ளி வாகன ஓட்டுநர் சுந்தரத்திடம்(67) காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. கடையை எப்போ திறப்பீங்க! கும்மிடிப்பூண்டியில் சிக்கிய சிரிப்பு திருடர்கள்

Tamilnadu oi-Jackson Singh கும்மிடிப்பூண்டி: டாஸ்மாக் கடைக்குள் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு நுழைந்து பணத்தை திருடிய கொள்ளையர்கள், அங்கேயே மது அருந்தியதால் போலீஸாரிடம் சிக்கினர். ஒரு திரைப்படத்தில் ஒயிஷ் ஷாப்புக்குள் வடிவேலு கொள்ளையடிக்க செல்வார். ஆனால் அவர் இருப்பது தெரியாமலேயே கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விடுவர். பின்னர் அங்கு இருக்கும் மதுபானங்களை குடிக்கும் வடிவேலு, போதை தலைக்கேறியதும் கடை உரிமையாளருக்கே ஃபோன் செய்து ‘பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. கடைய எப்ப சார் திறப்பீங்க..’ என … Read more

சைரஸ் மிஸ்திரி மரணத்திற்கு பின் ஷபூர்ஜி பல்லோன்ஜி குரூப் எதிர்காலம் என்ன..?

டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், இதற்கு அடுத்தப் படியாக சைரஸ் மிஸ்திரி-யின் குடும்பம் சுமார் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ன் உரிமையாளரான பலோன்ஜி மிஸ்திரி சில மாதங்களுக்கு முன்பே உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், சைரஸ் மிஸ்திரி தான் எதிர்காலம் என நம்பியிருந்த நிலையில் குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி-யின் கார் விபத்தில் சிக்கி … Read more

`சைபர் அட்டாக்கில் இந்தியா இரண்டாவது இடம்… COWIN APP தான் காரணமா'? – ஆய்வு சொல்வதென்ன?

கொரோனா பெருந்தொற்றின்போது, தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஊரடங்கு சமயத்தில், மக்களின் நலன் மற்றும் தடுப்பூசி குறித்த விவரங்களை அறிந்து கொள்ள, வெகு வேகமாகவே சுகாதாரத்துறை தொழில்நுட்பத்தில் விரைவாகக் கால் பதிக்கத் தொடங்கியது. COVID-19 vaccine trial சுகாதாரத்துறையின் இத்தகைய தொழில்நுட்ப மாற்றம், எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது குறித்தும், எந்தளவுக்குச் சுகாதாரத்துறை அமைப்புகள் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான CloudSEK ஆய்வு ஒன்றை … Read more

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் புரட்சியை ஏற்படுத்தும்! அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘புதுமைப்பெண் திட்டம்’ உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் என  டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் மாதிரி பள்ளிகள் திறப்பு விழா இன்று வடசென்னை பகுதி ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிா் கல்லூரியில்  நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மாணவிகளுக்கு … Read more

திருப்பூர் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் மனைவி பலி

திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர் முத்துமாணிக்கத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

யாருமே என்கிட்ட பேசல! தோனி மட்டும்தான்.. கேப்டன் பதவிய உதறித்தள்ளிய தருணம் பற்றி கோலி உணர்ச்சிகரம்

International oi-Noorul Ahamed Jahaber Ali ஷார்ஜா: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, தான் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு தோனி மட்டுமே தன்னிடம் பேசியதாக தெரிவித்து இருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கடந்த வாரம் நீண்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த … Read more

கர்நாடக மடாதிபதியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு| Dinamalar

சித்ரதுர்கா: கர்நாடக மடாதிபதியின் சிவ மூர்த்தியின் நீதிமன்ற காவலை செப்.,14 வரை நீட்டித்து சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள, முருகா மடத்தின் மடாதிபதி, சிவமூர்த்தி முருகா சரணரு, 64. முருகா மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிரிடம் பாலியலில் ஈடுபட்டதாக , கடந்த மாதம் ஆக., 27ல், மடாதிபதி மீது பாலியல் புகார் கொடுத்தனர்.இதையடுத்து, கடந்த 1ம் தேதி இரவு, மடாதிபதியை, போலீசார் கைது செய்தனர். வரும் 5ம் … Read more

முன்னாள் டாடா குழுமத்தின் தலைவர்.. சைரஸ் மிஸ்ட்ரி குறித்த சில அறியப்படாத தகவல்!

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றிய சைரஸ் மிஸ்ட்ரி நேற்று கார் விபத்தில் காலமான சம்பவம் தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் உள்பட பல பிரமுகர்களும் சைரஸ் மிஸ்ட்ரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் காரில் பயணம் செய்த சைரஸ் மிஸ்ட்ரி சீட்பெல்ட் அணிய வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சைரஸ் … Read more

வெளிநாட்டு பெண் பயணி முன், காரிலேயே சுயஇன்பம்; ஓட்டுநரை கைது செய்த போலீஸ்!

லண்டனைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய நண்பருடன் ராஜஸ்தானுக்குச் சுற்றுலா செல்லும்விதமாக இந்தியா வந்தார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கிய இருவரும், மொபைல் ஆப்-ஐ பயன்படுத்தி கார் ஒன்றை முன்பதிவு செய்தனர். பின்னர் அந்த காரில் ஏறிக்கொண்டு, தெற்கு டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் பயணித்தனர். டாக்ஸி அப்போது காரை ஓட்டிவந்த டிரைவர், லண்டனைச் சேர்ந்த அந்த சுற்றுலாப்பயணிகள் முன் காரிலேயே சுயஇன்பம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டு சுற்றுலாப்பயணிகள் … Read more