“நாட்டில் விவசாயிகளுக்காகப் பணியாற்றியவர் பிரதமர் மோடி மட்டுமே!" – ஜே.பி.நட்டா

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க-வின் ‘நமோ கேதுத் பஞ்சாயத்து’ திட்டத்தை ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “பிரதமர் மோடி மட்டுமே சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளார். விவசாயிகளைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தும் திட்டத்தை … Read more

வில்லங்க சான்றிதழ் முடக்கம், வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில் “ஜி-ஸ்கொயர்”! சீமான்…

திருச்சி: திருச்சி அருகே 6 கிராமங்கள் தங்களுக்கு சொந்தம் என வக்பு வாரியம் அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், இதன் பின்னணியில் முதல்வரின் மருமகன் சபரீசனின் “ஜி-ஸ்கொயர்” நிறுவனம் உள்ளது என நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நாம் தமிழர், மதிமுக மோதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த நாம் தமிழர்கட்சி தலைவர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் … Read more

ரயில்வே பணியாளர் தேர்வுகள் நேர்மையான முறையில் நடத்தப்படுகிறது: ரயில்வே தேர்வாணையம்

சென்னை: ரயில்வே பணியாளர் தேர்வுகள் நேர்மையான முறையில் நடத்தப்படுகிறது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கணினி வழி தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமலிருக்க பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு

India bbc-BBC Tamil ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம் அந்நாட்டில் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத அமலாக்கக் காவல்துறை என்று புரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய … Read more

தாலிபான் எடுத்த திடீர் முடிவு.. சீன நிறுவனங்கள் ஷாக்..!

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் பல மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், தற்போது இளைஞர்கள் நலனுக்காக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி 1 வருடம் முழுமையாக முடிந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்-ஐ தாலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றினர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியதால் இது தாலிபான் ஆட்சி 2.0 என்று அழைக்கப்படுகிறது. தலிபான்களின் 1990 ஆட்சியிலும் சரி, தற்போதைய … Read more

"ரூ.27 லட்சம் கட்டினேன்; இரட்டிப்பாக தருவதாக ஏமாற்றிவிட்டார்கள்!" – `நியோமேக்ஸ்' நிறுவனம்மீது புகார்

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் நிதி நிறுவன மோசடி குறித்த செய்திகள் வெளியாகி அதில் பணம் செலுத்தியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ்நாடு முழுவதுமே சமீபத்திய நிதி நிறுவன மோசடிகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கின்றன. இந்த நிலையில், மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதாகக் கூறப்படும் நியோமேக்ஸ், க்ரீன்வெல்த், சென்ட்ரியோ ஆகிய குழுமங்கள் இரட்டிப்பாக தருவதாகக் கூறி பல லட்சங்களை மோசடி செய்துவிட்டதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் … Read more

சிறு தவறு… பட்டத்து இளவரசிக்கு அழைப்பு விடுக்க தவறிய பிரித்தானியா: ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பு

இளவரசி மேரியின் கணவர் ஃபிரடெரிக், தாயார் இரண்டாம் மார்கரெட் ராணி ஆகியோர் மட்டும் முதல் வரிசையில் டென்மார்க் ராஜகுடும்பம் தரப்பிலும் இந்த விவகாரத்தில் தாங்கள் மனமுடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்கில் டென்மார்க் ராஜகுடும்பத்தினர் பங்கேற்றுள்ள நிலையில், பட்டத்து இளவரசியான மேரிக்கு அழைப்பு விடுக்கப்படாதது தற்போது டென்மார்க்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தின் வருந்தத்தக்க பிழை காரணமாகவே பட்டத்து இளவரசியான மேரி இறுதிச்சடங்குகளில் பங்கேற்க தவறியதாக கூறப்படுகிறது. @getty லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் … Read more

கலைஞர் நூலகத்துக்கு 114 கோடி நிதி ஒதுக்கீடு: மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் நூலகத்துக்கு நிதி ஒதுக்காத தமிழகஅரசு

சென்னை: மதுரையில் அமைந்துள்ள  உலக தமிழ்ச் சங்கத்தில் நூலகத்துக்கு தேவையான நிதி ஒதுக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்துக்கு ரூ. 114 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது, மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் துணை இயக்குனர்,  மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் நூலகம் அமைக்க இதுவரை தமிழகஅரசு எந்தவொரு நிதியும் ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார். தமிழ்நாடு … Read more

தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பில் ஈடுப்பட காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

சென்னை: தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பில் ஈடுப்பட காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடிசெய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதம் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

“5 டுவிஸ்டுகள்” – பாயும் பாஜக.. “பதுங்கும்” வங்கத்து புலி! “கப்சிப்” மம்தா -மொத்தமாக மாறும் “கணக்கு”

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தொடர்ந்து அதிரடி அரசியலை செய்து வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த சில மாதங்களாக அமைதியாக செல்வது அவரது பேச்சுக்களின் மூலம் தெரிகிறது. மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று மம்தா பானர்ஜி 3 வது முறையாக முதலமைச்சராக இருந்து வருகிறார். கடந்த முறை முதலமைச்சராக இருந்த சமயத்திலிருந்து கடந்த … Read more