எண்ணும் எழுத்தும் திட்டம்: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.10-ல் தொடக்கம்

சென்னை : எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.10-ல் வகுப்புகள் தொடங்கவுள்ளது. 1-5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அக்.6 முதல் அக்.8 வரை 3 நாட்கள் பயிற்சி நடத்தப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் பாஸ் ஆனாலே போதும் நீங்களும் டாக்டர் தான்.. அதான் 'மெட்டா நீட் அகடமி' இருக்கிறதே!

சென்னை: நீட் தேர்வில் பாஸ் ஆகி குறைந்த மதிப்பெண் என்று நீங்கள் கவலைப்படாதீர்கள்.. நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக நமது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வெறும் 10,000 எம்.பி.பிஎஸ் /பி.டி.எஸ் இடங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. எனவே மதிப்பெண் குறைவாக பெற்றுள்ள மாணவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். அவ்வாறு குறைந்த மதிப்பெண்களோடு … Read more

முதல்முறையாக இந்திய தூதரகம் சென்ற கூகுள் சுந்தர் பிச்சை.. என்ன காரணம் தெரியுமா?

முதன்முறையாக, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்திய தூதரகத்திற்கு வருகை தந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த பல ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் முதல்முறையாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றுள்ளார். இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது. கூகுள் பே, போன்பே-க்கு செக்.. வாய்ப்பை தட்டி செல்லும் ஸ்விக்கி, சோமேட்டோ..! கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை … Read more

நோய் நீக்கி, மன அமைதி அருளும் சுயம்புலிங்கம் – நரசிம்மர் பூஜை செய்த திருத்தலத்தின் சிறப்புகள்!

ஹிரண்யாசுரனை அழித்திடவும், பிரகலாதனின் பக்தியை உலகிற்கு உணர்த்திடவும் திருமால் எடுத்திட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம். அசுர வதம் முடிந்த பின்னர், குருதிக்கலப்பால் ஏற்பட்ட விளைவினால், நரசிம்மமானது தன்னிலை மறந்து ஆக்ரோஷமான நிலையில் கட்டுப்பாடின்றி திரிந்ததைக் கண்டு அண்டசராசரங்களும் நடுநடுங்கின. இந்நிலையைப் போக்கிட எண்ணிய சிவபெருமான் சாளுவ பக்ஷியாக (சரபம்) உருவெடுத்துத் தன் சிறகுகளால் அணைத்து நரசிம்மத்தைக் குளிர்வித்தார். சாந்தமடைந்த நரசிம்மம் தன்னிலை உணர்ந்தது. அசுர வதம் செய்தமையால் ஏற்பட்ட ஹத்தி தோஷத்தினைப் போக்கிக்கொள்ள நரசிம்மம் சிவ பூஜை செய்த தலம்தான் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் … Read more

தசரா பண்டிகையையொட்டி குலசைக்கு 1ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை:  பிரசித்தி பெற்ற குலசேகரபட்டிணம்  தசரா திருவிழாவையொட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்டோபர் 1 முதல் 10ந்தேதி  வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்தாற்போல் மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.4,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிஷ் டிவி தலைவர் ஜவஹர்லால் கோயல் திடீர் ராஜினாமா.. இனி என்ன ஆகும் நிறுவனம்?

ஒளிபரப்பு செயற்கைக்கோள் சேவை வழங்குநரான டிஷ் டிவியின் தலைவரான ஜவஹர்லால் கோயல் அந்நிறுவனத்தின் குழுவில் இருந்து விலகினார். ஜவஹரின் பதவி விலகல் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த வெற்றி என கூறப்படுகிறது. மேலும் ஜவஹர் லால் கோயல் விலகிய பிறகு அந்த இடத்திற்கு வேறு யாரையும் நியமிக்கும் திட்டமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே உஷார்.. டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் எதையும் வாங்காதீங்க..! டிஷ் டிவி இயக்குனர் டிஷ் டிவி நிறுவனத்தின் இயக்குநர் ஜவஹர் லால் கோயல் நேற்று … Read more

புதுச்சேரி: மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்துப் போராட்டம்; கல்வீச்சு, அடிதடியில் முடிந்ததால் பரபரப்பு!

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா, மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வர்ண பேதங்களை விமர்சித்துப் பேசியிருந்தார். அதையடுத்து, “ஆ.ராசா இந்து மக்களின் மனதை புண்படுத்திவிட்டார்” என்று கூறிய பா.ஜ.க-வினரும், இந்து முன்னணியினரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், எம்.எல்.ஏ-வுமான வேல்முருகனும் ஆ.ராசாவின் கருத்தை ஆதரித்ததுடன் பா.ஜ.க, இந்து முன்னணியினரின் போக்குகளையும் கண்டித்திருக்கின்றனர். பா.ஜ.க, இந்து முன்னணியினரை தடுக்கும் … Read more

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் #NC22 படப்பிடிப்பு நாளை துவங்குகிறது…

வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் நாகசைதன்யா நடிக்க இருக்கும் NC22 படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. நாகசைதன்யா-வின் 22 வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப் படம் வெங்கட்பிரபு-வுக்கு 11 வது படம். நாகசைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.  

இமானுவேல் சேகரனுக்கு வெண்கல சிலை: வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை

மதுரை: இமானுவேல் சேகரனுக்கு வெண்கல சிலை அமைக்கக் கோரிய வழக்கை நவம்பர் 8ம் தேதிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஒத்திவைத்தது. இமானுவேல் சேகரனின் சிமெண்ட் சிலையை அகற்றி வெண்கல சிலை அமைக்கக் கோரிய வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.