மத்திய மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோ: மத்திய மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள லா பிளாசிட்டா டி மோரேலோஸ் கடற்கரையில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகை மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நாகை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனர்.

பல்கலை மாணவியர் வீடியோ விவகாரம்சிறப்பு விசாரணை குழு அமைப்பு| Dinamalar

சண்டிகர், பஞ்சாபின் சண்டிகர் பல்கலை விடுதியில் மாணவியர் குளிப்பதை படமாக்கியதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க மூன்று பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலையின் மாணவியர் விடுதியில், 17ம் தேதி இரவு மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியின் பொது குளியலறையில், மாணவியர் குளிப்பதை சக மாணவி ஒருவர், ‘மொபைல் போனில் வீடியோ’ எடுத்து அதை வெளிநபர்களுடன் … Read more

சென்னை டாக்டர் கொலை வழக்கில் காதலி உள்பட 3 பேர் கைது

பெங்களூரு: பெஙகளூருவில் நடந்த சென்னை டாக்டர் கொலை வழக்கில் காதலி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது. சென்னை டாக்டர் கொலை தமிழ்நாடு சென்னையை சேர்ந்தவர் விகாஷ். இவர், உக்ரைன் நாட்டுக்கு சென்று டாக்டருக்கு படித்திருந்தார். சென்னையில் டாக்டராக அவர் பணியாற்றினார். பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக விகாஷ் வந்திருந்தார். இதற்கிடையில், கடந்த 9-ந் தேதி பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைகோ … Read more

500 ஊழியர்கள் வேலைநீக்கமா? கண்ணீரில் சாப்ட்வேர் குழுக்கள்!

வாகன தயாரிப்பில் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஓலா நிறுவனம் 500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஓலா நிறுவனத்தில் சாப்ட்வேர் குழுக்களில் வேலை பார்க்கும் பலர் வேலை நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓலா: 500 பேர் திடீர் பணிநீக்கம்.. ஆடிப்போன டெக் … Read more

இந்த வார ராசிபலன்: செப்டம்பர் 20 முதல் 25 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

இந்திய கேப்டனுக்கு நடந்த அவமரியாதை? வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ

கோப்பையை பெறும்போது சுனில் சேத்ரிக்கு நடந்த அவமரியாதை என வைரலாகும் வீடியோ சுனில் சேத்ரிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடும் ரசிகர்கள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஆளுநரால் அவமரியாதை செய்யப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. ஆசியாவின் பிரபலமான டுராண்ட் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இதன்மூலம் … Read more

செப்டம்பர் 20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 122-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 122-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மயானத்திற்கு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு: தலித் மூதாட்டி உடல் சாலையோரம் அடக்கம்

துமகூரு: மயானத்திற்கு உடலை கொண்டு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தலித் மூதாட்டியின் உடல் சாலையோரம் அடக்கம் செய்யப்பட்ட அவல சம்பவம் துமகூரு அருகே நடந்து உள்ளது. சாலையோரம் உடல் அடக்கம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் உள்ளது பிஜ்வாரா கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள மயானத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அங்கு அடக்கம் செய்ய மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து … Read more