சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..! ஏழுமலை வெங்கடேசன்…

சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..! சிறப்பு கட்டுரை: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… ஜெயலலிதா மரணம் விவகாரத்தில், விசாரணைக் கமிஷனின் அறிக்கைக்குப் பிறகு  இப்போது சசிகலாவை நோக்கித்தான் பெரும்பாலோனோர் கைகள் நீள்கின்றன. சந்தேக கண்ணோட்டத்தில், சசிகலா பிரதான புள்ளியாகவே இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் ஒத்துழைப்பு  இல்லாமல் வெறும் சசிகலாவால் மட்டுமே 75 நாள் மர்மத்தை கடத்திச் சென்று இருக்க முடியாது. மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சர் என்றாலும், மருத்துவமனையில் தளர்ந்து போய் விட்ட நிலையில் ஜெயலலிதாவின் சூழல் நிலைமையே வேறு. … Read more

அக்.26ல் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கிறார் மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி; புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அக்.26ம் தேதி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவராகும் நேரு குடும்பத்தைச் சாராத தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவார்.

சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் தேங்கிய மழை நீரில் நீச்சலடிப்பு| Dinamalar

துமகூரு : தொடர் மழையால், பாவகடாவில் உள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் மழை நீர் சூழ்ந்தது. ஆபத்தை உணராத இளைஞர்கள் சிலர், தேங்கிய நீரில் நீச்சடித்தனர். துமகூரு பாவகடாவின் வல்லுார் – கடகனாகரே கிராமத்துக்கு இடையே, 12 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் மாநிலத்தின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இதன் மூலம் தினமும், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், இப்பகுதியில் மழை … Read more

குவியும் வெளியூர் வியாபாரிகள்; கோடிக்ககணக்கில் வர்த்தகம்! புதுக்கோட்டையில் களைகட்டும் ஆட்டுச் சந்தை!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் ரொம்பவே பிரபலம். கடந்த ஒரு மாத காலமாகவே புரட்டாசி மாதம் என்பதால், ஆட்டுச்சந்தைக்கு குறைந்தளவிலான ஆடுகள் மட்டும் சந்தைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டாததால், விவசாயிகள், வியாபாரிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். சென்னையில் அசத்தும் அரண்மனைத் தோட்டம்… ஆற்காடு நவாப்பின் இயற்கை விவசாயம்! ஒரு மாதமாகவே சந்தையில்  விற்பனை படு மந்தமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்,  புரட்டாசி மாதம் நிறைவடைந்து, ஜப்பசி தொடங்கிய … Read more

ரஷ்ய குண்டு வீச்சு விமானங்கள் இடைமறிப்பு: அமெரிக்க போர் விமானங்களின் செயலால் பதற்றம்!

ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகே இடைமறித்தது. ரஷ்ய நடவடிக்கை அச்சுறுத்தலாக பார்க்கப்படவில்லை என NORAD தகவல். ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகில் இடைமறித்தாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது. அலாஸ்காவிற்கு அருகில் பறந்த Tu-95 Bear-H  ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் திங்களன்று அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை அடுத்து அவை இடைமறிக்கப்பட்டதாக NORAD செவ்வாயன்று தனது … Read more

அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலை.யில் ரூ.11.41 கோடி முறைகேடு நடந்திருப்பது கணக்கு தணிக்கைத் துறை ஆய்வில் கண்டுபிடிப்பு..!!

சென்னை: அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11.41 கோடி முறைகேடு நடந்திருப்பது கணக்கு தணிக்கைத் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. 2012 முதல் 2016 வரை கல்வி பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு 2 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11.41 கோடி வழங்கப்பட்டுள்ளது.

"இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் உலகக் கோப்பையைப் புறக்கணிப்போம்!"- பாகிஸ்தான் அதிரடி!

2005ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று தொடர்களில் பங்கேற்கவில்லை. இதையடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு 2023ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து நேற்று இது பற்றிப் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான … Read more

சூட்கேசுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி விவகாரம்: பிரான்சில் வெடித்துள்ள புலம்பெயர்தல் பிரச்சினை

பிரான்சில் மாயமான சிறுமி ஒருத்தி சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம், எதிர்பாராத விதமாக அரசியல் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அதற்குக் காரணம், சிறுமியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் ஒரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத லோலா (Lola Daviet, 12) என்னும் மாணவி, பின்னர் சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கொல்லப்படும் முன் வன்புணரப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், … Read more

நடப்பு நிதியாண்டில் 1600 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும்… சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர். அதற்காக 2,200 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது : “தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 55 ஆயிரத்து 567 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் 6 ஆயிரத்து 45 … Read more

கனமழையால் சரிந்து விழுந்த தற்காலிக பந்தல்: காவலர்களின் அணிவகுப்பு பாதியில் நிறுத்தம்..!!

சேலம்: சேலம் அருகே நடைபெற்ற காவலர்களின் அணிவகுப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. கனமழையால் தற்காலிக பந்தல் சரிந்து விழுந்ததால் காவலர்களின் அணிவகுப்பு தடைப்பட்டது.