பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து..!!

சென்னை: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் பாலியல் தொல்லை தந்ததாக கடந்த ஆண்டு  சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. பாலியல் தொல்லை தீவிர குற்றமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயங்குகின்றனர். 3 ஆண்டு தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக வழக்கு பதிவு செய்ததாக சிவசங்கர் பாபு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆந்திரா கங்கா பவானி கோயிலில் காங்., எம்.பி., ராகுல் சுவாமி தரிசனம்| Dinamalar

அமராவதி: ஆந்திரா அதோனியில் உள்ள ஸ்ரீ கங்கா பவானி கோயிலுக்கு, சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் சாமி தரிசனம் செய்தார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, 3,570 கி.மீ., துாரம், ‘ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரிலான நடை பயணத்தை காங்., – எம்.பி., ராகுல் சமீபத்தில் துவக்கினார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாதையாத்திரையை துவங்கிய ராகுல், கேரளா, கர்நாடகாவை கடந்து நேற்று ஆந்திராவிற்குள் வந்தார். கர்நூல் மாவட்டத்தில், காங்., தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார். … Read more

கயிலையிலிருந்து வந்த கயிலாசநாதனின் ஆலயம் சீர்பெறுமா? – அடியார்களின் கோரிக்கையை கவனிக்குமா அரசு?

‘கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!’ என்பார் மாணிக்கவாசகர் எனும் ஞானவள்ளல். காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம் கருணைக்கடலான ஈசனின் திருஆலயம் ஒன்று கேட்பாரின்றிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்கலம் என்று பொருள் தரும். அன்பாக அருள்பெருஞ்ஜோதியாக, இன்பமாக மங்கலமாக மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கயிலைப்பனிமலை … Read more

7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி! தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்  என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்  17ந்தேதி  நடைபெற்றது. தலைவர் பதவிக்கான போட்டியில்  மூத்த காங்கிரஸ் தலைவரான 80வயது மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்  … Read more

சட்டப்பேரவையில் தன் அருகே ஓ.பன்னீர்செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : சட்டப்பேரவையில் தன் அருகே ஓ.பன்னீர்செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் அதிமுகவினர் பேரவையில் கலவரம் செய்ய முயன்றனர் என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மல்லிகார்ஜுன கார்கே!

காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்துவருவதால், கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்விதமாக, கட்சிக்குள் தேர்தல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடவில்லை. அதேசமயம், யாரையும் ஒருசார்பாக ஆதரிக்கவும்போவதில்லை என காந்தி குடும்பத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி இதனால் தேர்தல் வேட்பாளர்களான சசி தரூர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே இருமுனைப் போட்டி நிலவி … Read more

தீபாவளி பண்டிகையையொட்டி வாகன நெரிசல்: சென்னையில் 21ந்தேதி முதல் 3 நாள் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும்  21ந்தேதி முதல் 3 நாள் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை  அறிவிப்பு வெளியிட்டு  உள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காகவும் சென்னையில் இருந்து … Read more

கர்ப்பிணியாக உள்ள நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அர்ணவ் ஜாமீன் ரத்து..!!

சென்னை: கர்ப்பிணியாக உள்ள நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அர்ணவ் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. நடிகர் அர்ணவ்-ன் ஜாமீன் மனுவை ரத்து செய்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகையை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அர்ணவ் (எ) நைனா முகமது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

Dhoni: இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் வரைந்த ஓவியம்! தோனி நெகிழ்ச்சி

சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆந்திராவைச் சேர்ந்த 35 வயது இளம் பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அந்தப்பெண் குணமடைந்து பிறகு ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். தோனியின் தீவிர ரசிகையான அப்பெண் சிகிச்சைக்குப் பின் வரையும் தனது முதல் ஓவியமாக தோனியின் ஓவியத்தை வரைந்துள்ளார். காவேரி மருத்துவமனையின் குழும நிறுவனர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், காவேரி மருத்துவமனையின் பிராண்ட் தூதரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் … Read more

23 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த 56 வயதான நடிகர் பப்லு? வெளியான புகைப்படம்

நடிகர் பப்லு பிரித்விராஜுக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாக தகவல். மலேசியாவை சேர்ந்த பெண்ணை மறுமணம் செய்தார் என கூறப்படுகிறது. பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் இளம் வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 56 வயதான பப்லு பல தமிழ் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்த வயதிலும் தன் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பதற்கு காரணம் மனைவி என கூறினார். அடுத்த கனவே … Read more