இளவரசி டயானா மற்றும் மன்னர் சார்லஸின் ரகசிய மகள் என கூறப்பட்ட பெண்! யார் அவர்? புகைப்படங்கள்

இளவரசி டயானா – மன்னர் சார்லஸ் தம்பதியின் ரகசிய மகள் என முன்னர் கூறப்பட்ட பெண். Globe என்ற பத்திரிக்கை அது தொடர்பில் வெளியிட்டிருந்த செய்தி. இளவரசி டயானா – மன்னர் சார்லஸ் தம்பதியின் ரகசிய மகள் என கூறப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான செய்திகள் 2015 காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டன. Globe என்ற பத்திரிக்கை தான் இந்த செய்திகளை அப்போது வெளியிட்டது. அதன்படி டயானா – சார்லஸ் தம்பதியின் … Read more

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்.பி.பி.எஸ். இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 … Read more

திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம்: ஒருவர் கைது

திருச்சி: மணப்பாறை அருகே திருமணம் செய்வதாகக் கூறி சட்டக்கல்லூரி மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வகுத்தாழ்வார்பட்டியில் மாணவியை ஏமாற்றிய இளைஞர் சத்தியமூர்த்தியை அனைத்து மகளிர் போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

சொல் வழிப் பயணம் -1: அவமானப்படாத மனிதர்கள் உண்டா? |Video

ஆனந்த விகடன் தொடரில் கதை சொல்லி பவா செல்லதுரை எழுதும் புதிய தொடர் சொல் வழிப் பயணம். அதன் முதல் பகுதி இதோ! – சொல் வழிப் பயணம் -1 அந்த பகுதியின் காணொலி வடிவில் பவா செல்லதுரையின் கதையாடல்… Source link

22 ஆண்டுக்கு பின்.. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: 22 ஆண்டுக்கு பின்.. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயப்பட்டு வருகிறார். இருப்பினும் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, மேற்கு … Read more

குன்றத்தூரில் கண்டெய்னர் லாரி மோதியதில் அண்ணா சிலை சேதம்: போலீஸ் விசாரணை

குன்றத்தூர்: குன்றத்தூரில் வழி தெரியாமல் சென்ற கண்டெய்னர் லாரி மோதியதில் அண்ணா சிலையின் வலது கை உடைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பல்லாவரம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி குன்றத்தூர் லாலாசத்திரம் அருகே சாலையில் செல்ல முயன்றது. மேலே சென்ற கேபிள் வயர் லாரியில் சிக்கி அண்ணா சிலையின் வலது கை உடைந்தது. விபத்தை ஏற்படுத்திய தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர் வெள்ளத்துரையிடம் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

“காவியின் பலம் கறுப்பினால் மறைந்துவிடக்கூடாது" – வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் தமிழிசை

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீடம் சார்பில் கொல்லம்விளையில் நடந்த சமயவகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜீ மஹராஜ் வழங்கினார். பட்டம்பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், “தமிழகத்தில் இந்து தர்மத்தைப்பற்றி பேசுவதும், ஆன்மீகத்தை பற்றி பேசுவதும் ஏதோ தவறான் ஒரு நிகழ்வு போலவும், பேசக்கூடாத ஒன்றை பேசுவதுபோலவும் மாயத்தோற்றம் இருக்கிறது. இந்த மாயத்தோற்றம் நிச்சயமாக … Read more

அந்தியூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

ஈரோடு: கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தியூர் வட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக்/சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 7 பேர் படுகாயம்

சேலம்: பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் 3-வது தெருவில் மாணிக்கம் என்பவர் வீட்டில் சிலிண்டர் வெடித்து 7 பேர் படுகாயம் அடைத்துள்ளனர். சிலிண்டர் வெடித்ததில் முதல் மாடியின் சுவர்கள் இடிந்து விழுந்ததில்10 மாத கைக்குழந்தை உள்பட  7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சபரிமலை நடை இன்று மாலை திறப்பு; நாளை புதிய மேல்சாந்தி தேர்வு| Dinamalar

நாகர்கோவில்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(அக்.,17) மாலை திறக்கப்படுகிறது. புதிய மேல்சாந்தி தேர்வு நாளை காலை நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றிய பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்தி, நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் … Read more