ரஷ்யா வெளியிட்டுள்ள திகிலை ஏற்படுத்தும் காட்சிகள்: அணு ஆயுதங்களுடன் ரஷ்யப் படைகள் புறப்பட்டன…

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று, அணு ஆயுதம் வெடிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள் முதலான காட்சிகளை வெளியிட்டுள்ளது. அத்துடன், ரஷ்யாவின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வாகனங்கள் ரஷ்யாவின் மையப்பகுதியிலிருந்து புறப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. புடின் ஆதரவு ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று, அணுகுண்டு வெடிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள் முதலான திகிலை ஏற்படுத்தும் சில காட்சிகளை வெளியிட்டுள்ளதுடன், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் ரஷ்யாவிலிருந்து புறப்பட்டுள்ளதாக தோன்றும் காட்சி ஒன்றும் வெளியாகியுள்ளது. ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று, அணு … Read more

புதுச்சேரியில் அவசர அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி: மின்துறை ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

துர்காவால் கொல்லப்பட்ட அசுரனுக்குப் பதில் காந்தி சிலை: கிளம்பியது சர்ச்சை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா: மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட அசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவி ஈட்டியால் வதம் செய்யப்படுவது போல சிலை அமைக்கப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது. அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு தென்மேற்கு கோல்கத்தாவில் உள்ள ரூபி கிராசிங் பகுதியில் துர்கா பூஜை பந்தல் அமைத்திருந்தனர். இந்த பந்தலில் கொலு பொம்மைகள் பல வைக்கப்பட்டிருந்தன.இதில் மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட அசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவியின் ஈட்டியில் வதம் … Read more

தரையிறங்கத் தயாரான விமானத்தை துளைத்த துப்பாக்கி குண்டு; காயமடைந்த பயணி! – என்ன நடந்தது?

மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மியான்மரின் லோய்காவிக்கு 3,500 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தது. அப்போது விமானம் தரையிறங்க வேண்டிய விமான நிலையத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒரு பயணி துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்டார். விமானத்தில் பயணிகள் ஏறும்போது சோதனையிடப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களிடம் துப்பாக்க்கி எதுவும் இல்லை. தாக்கப்பட்ட விமானம் ஆனால் எப்படி துப்பாக்கியால் சுடப்பட்டார் என்பது பெரும் கேள்வியாக மாறியது. அதன் பிறகே அந்தக் குண்டு வெளியிலிருந்து … Read more

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அலங்காரம்..!

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டியில் இரண்டாவது சீசன் களை கட்டி உள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்களைக் கொண்டு ‘பிளாஸ்டிக் தவிர்ப்போம், மறுசுழற்சி செய்வோம்; தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை” என்று அலங்காரம் செய்யப்பட்டுள்ளது இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

திருச்சியில் ஹீலியம் பலூன் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் வியாபாரி கைது

திருச்சி: திருச்சியில் ஹீலியம் பலூன் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் வியாபாரி அனர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த பலூன் வியாபாரியை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

`தவறான பூஜை; மகனின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டாய்’ – பூசாரியை தாக்கி காதை கடித்துத் துப்பிய குடும்பம்

ராஜஸ்தான் மாநிலம் இந்தூர் மாவட்டத்தின் கோட்டா பகுதியை சேர்ந்தவர் பூசாரி குஞ்ச் பிஹாரி ஷர்மா (60). இவர் லக்ஷ்மிகாந்த் சர்மா என்பருடைய வீட்டுக்கு பலமுறை சென்று பூஜை செய்து நண்பர்களாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், தனது 2 மகன்களில் முதல் மகனுக்கு திருமண தடை ஏற்படுகிறது. அதற்காக சத்தியநாராயணன் பூஜையை நடத்தி தடையை நீக்கவேண்டும் என பூசாரி குஞ்ச் பிஹாரி ஷர்மாவை அழைத்திருக்கிறார். செப்டம்பர் 29-ம் தேதி லக்ஷ்மிகாந்த் வீட்டுக்குச் சென்ற பூசாரி இரவு பூஜை நடத்தியிருக்கிறார். அதைத் … Read more

தந்தையிடம் இருந்து வாடகையாக மட்டும் பெருந்தொகையை வசூலிக்கும் இளவரசர் வில்லியம்

ராணியார் மறைவுக்கு பின்னர் முக்கிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வசம் சொத்துக்கள் பல கைமாறியுள்ளது. Highgrove மாளிகையானது நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ளார் மன்னர் சார்லஸ். மன்னர் சார்லஸின் சொத்துக்களில் முக்கிய தோட்டம் ஒன்று இளவரசர் வில்லியம் வசம் வந்துள்ள நிலையில், தற்போது தந்தையிடம் இருந்து வாடகையாக மட்டும் பெருந்தொகையை வசூலிக்க இருக்கிறார் அவர். ராணியார் மறைவுக்கு பின்னர் முக்கிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வசம் சொத்துக்கள் பல கைமாறியுள்ளது. அந்தவகையில் மன்னர் சார்லஸுக்கு மிக நெருக்கமான Highgrove மாளிகை … Read more

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடதுசாரிகள், விசிக கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.