கேரள போலீஸ் ஸ்டேஷனைபாதுகாக்கும் பாம்புப் படை| Dinamalar

இடுக்கி, பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், கேரள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் பாம்பு தான் துணை என போலீசார் அதை போற்றி வருகின்றனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு தமிழக எல்லையில் உள்ள, கம்பம்மெட்டு போலீஸ் ஸ்டேஷன் வனப்பகுதியில் உள்ளதால், குரங்குகள் அணி அணியாக வந்து ஸ்டேஷனை துவம்சம் செய்து வந்துள்ளன. இதனால், வெறுத்துப்போன போலீசார், என்ன செய்வதென்று … Read more

இந்த 7 பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கிடைக்கலாம்..!

அமெரிக்க பங்கு சந்தையில் நிலவிய சரிவுக்கு பிறகு இன்று இந்திய சந்தையிலும் ஏற்ற, இறக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 412.96 புள்ளிகள் அதிகரித்து, 59,934.01 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது, இதே நிஃப்டி 126.35 புள்ளிகள் குறைந்து, 17,877.40 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. கோடக் மகேந்திரா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பல பங்குகளை வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் … Read more

அதீத போதை… அதிவேக பயணம்; சாலையைக் கடக்க முயன்ற இளம்பெண்கள் கார் மோதி பலி!

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி, ஆந்திராவைச் சேர்ந்த லாவண்யா ஆகிய இருவரும் சென்னை நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவந்தனர். இவர்கள் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். இரவு 11 மணியளவில் ஓ.எம்.ஆரில் சாலையைக் கடக்க முற்படும்போது, சாலையில் அதிவேகத்தில் தாறுமாறாக வந்த கார் ஒன்று இருவர்மீதும் மோதியது. விபத்தில் இறந்த இளம்பெண்கள் கார் மோதியதில் இரண்டு இளம்பெண்களுக்குத் தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம் … Read more

காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பாராட்டுகள்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்

சென்னை : காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது பாராட்டுகள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட் செய்துள்ளார். காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என கூறியுள்ளார். அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் முதமைச்சர் தொடங்கி வைத்ததை வரவேற்கிறேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கொச்சி புறப்பட்டவிமானத்தில் தீ| Dinamalar

புதுடில்லி :தென்மேற்கு ஆசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட் நகரில் இருந்து, கேரளாவின் கொச்சி நகருக்கு ‘ஏர் இந்தியா’விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட 145 பயணியர், ஆறு பணியாளர்கள் என, மொத்தம் 151 பேர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், இரண்டு இன்ஜின்களுள் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, பயணியர் மற்றும் விமான பணியாளர்கள் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். பதற்றத்துடன் ஓடி கீழே இறங்கிய போது, பயணியர் … Read more

நல்ல சான்ஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இன்றும் சர்வதேச சந்தையில் சற்று குறைந்துள்ளது. இது இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. தங்கத்தில் செல் ஆஃப் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் … Read more

"நான் நினைத்ததை விட நீண்ட காலம் விளையாடினேன்!" – ரோஜர் ஃபெடரரின் ஓய்வுச் செய்தி சொல்வது என்ன?

டென்னிஸ் லெஜண்ட் ரோஜர் ஃபெடரர் ஓய்வை அறிவித்துள்ளார். 6 ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்ச் ஓப்பன், 8 விம்பிள்டன், 5 யு.எஸ் ஓப்பன் என 20 கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற பெருமைக்குரியவர் ஃபெடரர். அவரின் ஓய்வுச் செய்தி இதுதான்: “என் டென்னிஸ் குடும்பத்துக்கும், அதைத் தாண்டிய எல்லோருக்கும் வணக்கம்! இத்தனை ஆண்டுகளில் டென்னிஸ் எனக்கு அளித்த பரிசுகளில் மிகவும் மகத்தானது, நான் சந்தித்த மனிதர்களின் அன்புதான். நண்பர்கள், சக போட்டியாளர்கள், ரசிகர்கள் … Read more

முதலிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மணமகன்: ஆந்திராவில் ஏற்பட்ட பரிதாபம்!

ஆந்திராவில் இளம் காதல் ஜோடிகள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம். முதலிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் உயிரிழப்பு. ஆந்திராவில் திருமணம் ஆன புது மாப்பிள்ளை, முதலிரவு அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரி பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத் மற்றும் மதனப்பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில் ஆந்திர … Read more

மகிழ்ச்சி: சென்னை டூ திருப்பதி முன்பதிவில்லா பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்…

சென்னை:  சென்னை -திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல ஆண்டு காலமாக, முன்பதிவில்லா ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. தினசரி இருமுறை இயக்கப்பட்டு வந்த இந்த ரயில், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து, முற்றிலும் இயல்பு வாழ்க்கை திரும்பியதால், திருப்பதி பயணிகள் ரயிலை … Read more

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதித்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.