கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று, பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விடுமுறை அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இன்று இந்திய பங்கு சந்தை இப்படித் தான் இருக்கும்.. எச்சரிக்கையா இருங்க!

சர்வதேச சந்தையில் நிலவிய பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், முந்தைய அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்டன. குறிப்பாக சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேலாகவும், நிஃப்டியும் நல்ல ஏற்றத்தில் காணப்பட்டது. எப்படியிருப்பினும் கடந்த அமர்வானது விநாயகர் சதுர்த்தி என்பதால் இந்திய பங்கு சந்தைகள் விடுமுறையாகும். இதன் காரணமாக இன்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் ஜூன் காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்தான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அதில் முதல் காலாண்டில் 13.5% என்ற அளவுக்கு இரு … Read more

வேலூர்: பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன?!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது தண்ணீர் வரத்து குறைந்தாலும், அன்றிலிருந்து இன்றுவரை பாலாற்றில் தண்ணீர் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது பாலாற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. … Read more

ஆசிய கோப்பை: ஹாங்காங் அணியை வீழ்த்தியது இந்தியா

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

கனேடிய மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்: கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ

தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஸ்மித் மற்றும் அவரது நிர்வாகக் குழுவை ஆதரிப்பதாக… பெடரல் அரசும் கனேடிய மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். ஹொக்கி கனடாவின் தலைமையின் மீது பெடரல் அரசு மற்றும் கனேடிய மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார். அதை உணர்ந்துகொள்ள நிர்வாகிகள் தரப்பு தாமதிக்கும் என்றால், அது மேலதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் பிரதமர் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார். ஹொக்கி … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,494,797 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,494,797 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 607,775,247 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 583,757,288 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,061  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்த ரஷ்யர்களுக்கும் கிடுக்குப்பிடி… ஐரோப்பிய நாடுகள் மும்முரம்

ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் – பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி எதிர்ப்பு ரஷ்யாவை ஒட்டிய பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் ரஷ்யா உடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் என கூறப்படுகிறது. ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை … Read more

உலகளவில் 60.77 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.94 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.37 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப் -01 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.