காதலிக்க கோரி மைனர் பெண்ணை மிரட்டியவர் கைது

சென்னை: தன்னை மீண்டும் காதலிக்க வலியுறுத்தி மைனர் பெண்ணை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மைனர் பெண்ணை மிரட்டிய மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எக்ஸ்ட்ரா திருப்திக்கு என்ன வழி? மாத்தி யோசி கதைகள் – 4

ஜமா ஜூஸ் பாயின்ட். ஆனால் எல்லா உதடுகளும் சுருக்கமாக உச்சரிப்பது JJ. நல்வாய்ப்பாக, இந்தக் கடை, ஒரு கல்லூரிக்கும் தியேட்டருக்கும் அருகே இருந்தது. அதனால் மாலை 5 மணி வரை மாணவர் கூட்டம். அதன்பின் தியேட்டருக்கு வருபவர்களின் வருகை. “ஜமா” – இளவட்டங்களில் சொல்லாடல். நாம் எல்லோருமே வாலிப வயதைக் கடந்துதானே வருகிறோம். அதனால் கடையின் பெயர் மக்களின் மனதில் “பசக்”கென்று பதிந்தது. ஜூஸ் வகைகள் பல்கலைக்கழகத்தில் சம்பளம் போட பணமில்லை..! `மாத்தி யோசி’ பிசினஸ் கதைகள் … Read more

நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17ந்தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் புதிய மசோதாக்கள் மற்றும் பல திட்டங்கள், அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நாளை அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்படி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதன்படி, நாளை மாலை 5மணிக்கு  ராயப்பேட்டையில் … Read more

உதகை அருகே விதிகளை மீறிய 22 சொகுசு விடுதிகளுக்கு சீல்..!!

நீலகிரி: உதகை அருகே விதிகளை மீறிய 22 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. உல்லத்தி ஊராட்சியில் சொகுசு விடுதிகள் செயல்பட்டு வந்தன. வருவாய் துறை அதிகாரிகள் சொகுசு விடுதிகளுக்கு சீல் வைத்தனர்.

கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தின விழா| Dinamalar

புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28வது நிறுவன தின விழா நடந்தது. மாணவர் பேரவை தலைவி சரிகா வரவேற்றார். நிறுவனத்தின் புல முதல்வர் செழியன் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். அதில், நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகள் குறித்தும், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். மேலும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளிநாடு … Read more

ஸ்டாலின் அஞ்சும் அளவுக்கு தமிழக பாஜக வளர்கிறதா? – அண்ணாமலை கருத்தும் நிலவரமும்!

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, “சமீபத்தில் திமுக-வின் பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசியதை நாம் கேட்டோம். பாஜக என்ற கட்சியே தமிழகத்தில் இல்லவே இல்லை என்று 5 ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய ஸ்டாலின், இன்று பாஜக தங்களது முதல் எதிரியாக அவராகவே அறைகூவல் விடுத்துள்ளார். அதை பார்க்கும்போதே பாஜக தமிழகத்தில், தமிழக மக்கள் மனதில் வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். எப்போதும் … Read more

தமிழ்நாட்டில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள 11 ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்!

சென்னை; தமிழகத்தில் 11 இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சார் ஆடியர்,  திட்ட அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு. (அதிகாரிகள் ஏற்கனவே வகித்த பதவி அடைப்புக் குறிக்குள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது)  சி.ஏ. ரிஷப் – திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (திருநெல்வேலி … Read more

குழந்தை திருமண விவகாரத்தில் கோவில் செயலாளர் கைது

சிதம்பரம்: குழந்தை திருமண விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை திருமண விவகாரத்தில் ஏற்கனவே தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சக ஆலோசகர் விஜயகுமார் ராஜினாமா| Dinamalar

புதுடில்லி: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகருமான விஜயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1975-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடரான விஜயகுமார் , காவல்துறையில் உயர் பொறுப்புகளை வகித்து வந்தார். தனது பதவி காலத்தில் வீரப்பன் என்கவுன்டர் சம்பத்தில் கமாண்டோ படை தலைவராக இருந்தார். ஒய்வு பெற்ற போது மத்திய அரசின் சிறப்பு பணிக்கு அழைக்கப்பட்டு நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டார். 6 வருடம் அப்பணியில் இருந்து ஒய்வு பெற்றார். 2019-ம் … Read more

T20 WC: பரபரக்கப் போகும் உலகக்கோப்பை திருவிழா – சூப்பர் 12க்கு தகுதிபெறப்போகும் 4 அணிகள் எவை?

டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. முதல் ஒரு வாரத்திற்கு குரூப் சுற்று போட்டிகளே நடைபெற இருக்கின்றன. சூப்பர் 12 சுற்றில் காலியாக இருக்கும் நான்கு இடங்களுக்காக எட்டு அணிகள் இந்த க்ரூப் சுற்றில் அடித்துக் கொள்ளப்போகின்றன. அந்த எட்டு அணிகளைப் பற்றியும் இந்த சுற்றைப் பற்றியும் ஒரு சிறு அலசல் இங்கே… இந்த முதல் சுற்றில் பார்த்தவுடனேயே நம்முடைய கவனத்தை ஈர்க்கும் இரண்டு அணிகள் இலங்கையும் வெஸ்ட் இண்டீஸூமே. இலங்கை அணி இப்போதுதான் … Read more