கர்நாடகத்தில் ராகுல் காந்தி 15-வது நாளாக பாதயாத்திரை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இன்று வாக்களிக்கிறார்

பெங்களூரு, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை அங்கிருந்து கேரளா சென்றது. அங்கு 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதே மாதம் 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு வந்த ராகுல் காந்திக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு, … Read more

கேரள நரபலி: `மனித இறைச்சிக்கு அதிக பணம்' – ஃபிரிட்ஜில் பாதுகாக்கப்பட்ட துண்டுகளாக்கப்பட்ட உடல்

கேரள மாநிலத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இப்போது மூவரும் போலீஸ் காவலில் உள்ளனர். இரட்டை நரபலி நடந்த பகவல் சிங்கின் வீட்டில் மூவரையும் அழைத்துச் சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பகவல் சிங் வீட்டிலும், ஃப்ரிட்ஜிலும் ரத்தக்கறைகள் இருந்தது கண்டறியப்பட்டன. மனித இறைச்சி சமைத்த பாத்திரங்களும், உடலை வெட்ட … Read more

சட்டப்பேரவையில் அதிமுக இருகைகளில் மாற்றமில்லை என தகவல்! ஓபிஎஸ் புறக்கணிப்பு?

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கைகளில் சபாநாயகர் அப்பாவு  மாற்றம்  செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஓபிஎஸ் சட்டப்பேரவையை நிகழ்வுகளை புறக்கணிப்பர் என கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு … Read more

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியில் வெளியீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் வெளியிட்டுள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

தாராபுரம்: பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த மகனும், காப்பாற்ற முயன்ற தாயும் மூழ்கி பலியான சோகம்!

தாராபுரத்தை அடுத்த சின்னபுத்தூர் மைனர் காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் (36). இவரின் மனைவி சந்திரகலா (30). இவர்களது மகன் வினோதர்ஷன் (8). 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சக்திவேலு தன் தோட்டத்தில் சோளம் சாகுபடி செய்துள்ளார். பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு 12 அடி ஆழமுள்ள செயற்கை பண்ணைக் குட்டையையும் அமைத்துள்ளார். chandrakala,vinodharsan இந்த குட்டை எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். சோளப் பயிருக்குத் தண்ணீர் தேவைப்படும்போது குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். … Read more

இளவரசி டயானா மற்றும் மன்னர் சார்லஸின் ரகசிய மகள் என கூறப்பட்ட பெண்! யார் அவர்? புகைப்படங்கள்

இளவரசி டயானா – மன்னர் சார்லஸ் தம்பதியின் ரகசிய மகள் என முன்னர் கூறப்பட்ட பெண். Globe என்ற பத்திரிக்கை அது தொடர்பில் வெளியிட்டிருந்த செய்தி. இளவரசி டயானா – மன்னர் சார்லஸ் தம்பதியின் ரகசிய மகள் என கூறப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான செய்திகள் 2015 காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டன. Globe என்ற பத்திரிக்கை தான் இந்த செய்திகளை அப்போது வெளியிட்டது. அதன்படி டயானா – சார்லஸ் தம்பதியின் … Read more

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்.பி.பி.எஸ். இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 … Read more

திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம்: ஒருவர் கைது

திருச்சி: மணப்பாறை அருகே திருமணம் செய்வதாகக் கூறி சட்டக்கல்லூரி மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வகுத்தாழ்வார்பட்டியில் மாணவியை ஏமாற்றிய இளைஞர் சத்தியமூர்த்தியை அனைத்து மகளிர் போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

சொல் வழிப் பயணம் -1: அவமானப்படாத மனிதர்கள் உண்டா? |Video

ஆனந்த விகடன் தொடரில் கதை சொல்லி பவா செல்லதுரை எழுதும் புதிய தொடர் சொல் வழிப் பயணம். அதன் முதல் பகுதி இதோ! – சொல் வழிப் பயணம் -1 அந்த பகுதியின் காணொலி வடிவில் பவா செல்லதுரையின் கதையாடல்… Source link

22 ஆண்டுக்கு பின்.. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: 22 ஆண்டுக்கு பின்.. இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயப்பட்டு வருகிறார். இருப்பினும் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, மேற்கு … Read more