சிவாஜி பார்க் பொதுக்கூட்டம்: 56 ஆண்டுக்கால உரிமைக்காகப் போராடும் உத்தவ்… தடுக்கும் ஷிண்டே!

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்தபிறகு கட்சியை முழுமையாக தங்கள் கட்டுக்குள் கொண்டுவர உத்தவ் தாக்கரேயும், ஏக்நாத் ஷிண்டேயும் போராடி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே தனக்கு இருக்கும் முதல்வர் பதவி அதிகாரம் மற்றும் பாஜக-வின் ஆதரவு ஆகிய இரண்டையும் வைத்துக்கொண்டு சிவசேனாவை தனது கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகிறார். உத்தவ் தாக்கரே இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை மலை போல் நம்பி இருக்கிறார். உத்தவ்தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரில் யாரது அணி உண்மையான சிவசேனா என்பதை தேர்தல் … Read more

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிர்மலா சீதாராமன் கொடுத்த முக்கிய அப்டேட்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!

நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும் ரெசசனை எதிர்கொள்ளலாமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவில் முதலீடுகளை தொடரலாமா? அல்லது குறைத்துக் கொள்ளலாமா? என்ற குழப்பமான நிலை இருந்து வருகின்றது. எனினும் மற்ற சர்வதேச நாடுகளை காட்டிலும் இந்தியா பெரியளவில் பாதிக்கப்படவில்லை என்ற வெளித் தோற்றமே இருந்து வருகின்றது. இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

“கேரளாவுக்கு எதிர்காலம் இருக்குமானால் அது பாஜக-தான்!" – அமித் ஷா

கேரளாவின் திருவனந்தபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர். அமித் ஷா – ஸ்டாலின் மேலும், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய தெற்கு யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்துகொண்டனர். அமித் … Read more

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்

துபாய்: டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்ட இத்தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் “4” சுற்று போட்டிகளுக்கு அணிகள் தயாராகியுள்ளன. முன்னதாக நடந்த லீக் சுற்றில், ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த ஆப்கானிஸ்தான் அணி வங்க தேசம் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி … Read more

ரூ.1.14 லட்சம் கோடி வருமான வரி திருப்பி அளிப்பு; மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்

சென்னை: ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வருமான வரி கட்டுவோர் கூடுதலாக செலுத்தியிருந்த ரூ.1.14 லட்சம் கோடி திருப்பி தரப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் தெரிவித்தது. 1.96 கோடி தனிநபர்கள் கடந்த ஆண்டில் கூடுதலாகச் செலுத்தி இருந்த ரூ.61,252 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. 1,46,871 நிறுவனங்கள் கூடுதலாக செலுத்தி இருந்த ரூ.53,158 கோடியையும் திருப்பி கொடுத்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மாஸ் காட்டும் குலாம் நபி ஆசாத்… புதிய கட்சி அறிவிப்பை இன்று வெளியிடுகிறார்

India oi-Mathivanan Maran ஶ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலவர் குலாம் நபி ஆசாத், இன்று ஶ்ரீநகரில் தமது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி பலத்தை காண்பிக்க உள்ளார். ஶ்ரீநகரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை குலாம் நபி ஆசாத் வெளியிட உள்ளார். காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களின் வேண்டுகோள். மொத்தம் 23 தலைவர்கள், காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர். இதனால் … Read more

உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத்தன்மையுடன் மாற்ற பரிந்துரை| Dinamalar

புதுடில்லி: உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத்தன்மை கொண்ட நிலையங்களாக மாற்ற பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற யுஜிசி(பல்கலைக்கழக மானியக்குழு) நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதுடில்லி: உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத்தன்மை கொண்ட நிலையங்களாக மாற்ற பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பன்முகத்தன்மை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் … Read more

“பட்டியலின மாணவிகள் வழங்கிய உணவை சாப்பிடக் கூடாது!"- பள்ளியில் சாதிப் பாகுபாடு… சமையல்காரர் கைது

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சமையல்காரர் ஒருவர் இரண்டு பட்டியலின சிறுமிகள் பள்ளியில் பறிமாறிய மதிய உணவை தூக்கி வீசுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அரசுப் பள்ளியில் சமையல்காரராக பணியாற்றி வரும் லாலா ராம் குஜார் என்பவர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்திருக்கிறார். பள்ளியில் பாகுப்பாடு அந்த மதிய உணவை அங்கிருந்த பட்டியலின சிறுமிகள் மாணவர்களுக்கு பரிமாறியதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு கோபமடைந்த லால் ராம் அதற்கு எதிர்ப்பு … Read more

புதுக்கோட்டையில் ஆயுதப் படை காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

புதுக்கோட்டை: அழகர் நகரில் ஆயுதப் படை காவல் ஆய்வாளர் கோபிநாத் வீட்டில் நகை, பணம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு ஆய்வாளர் கோபிநாத் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். புதுக்கோட்டை சின்னப்பா நகர், அழகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதத்தில் இது 7-வது கொள்ளை சம்பவமாகும்.