அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து சி.வி.சண்முகம் கூடுதல் மனு

சென்னை: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்கவில்லை. குற்றச்செயல்கள் நடந்த இடத்திற்கு வந்து சிபிசிஐடி பார்வையிடாதது அதிர்ச்சி அளிக்கிறது. அதிமுக அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதான எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். … Read more

அன்று ஏசி பஸ்களில் சொகுசா… இன்று டிராக்டர்களில் ஐலசா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக, முன்னர் ஏசி பஸ்களில் சொகுசாக சென்ற ஐ.டி., ஊழியர்கள், இன்று டிராக்டரில் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ள நகராக பெங்களூரு உள்ளது. பல முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்கள் இங்கு தான் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் முன்பு சொகுசான ஏசி பஸ்களில் வருவது வழக்கம். அப்போது காதுகளில் ெஹட்போன், பாக்கெட்டில் விலை உயர்ந்த மொபைல்போன், … Read more

உத்தர பிரதேசத்திற்கு அடித்த ஜாக்பாட்.. பெப்சி-யின் பலே அறிவிப்பு..!

அமெரிக்காவிற்கு வெளியே பெப்சி நிறுவன குளிர்பானங்களின் இரண்டாவது பெரிய பாட்டில் உற்பத்தி நிறுவனமான வருண் பீவரேஜஸ் விரைவில் தனது புதிய பாட்டில் தொழிற்சாலையை உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைக்க உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதிக்கு அருகில் இருக்கும் நைனி-யில் உள்ள சரஸ்வதி ஹைடெக் சிட்டி-யில் இப்புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மேம்பாடு, என்ஆர்ஐ மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நந்த கோபால் குப்தா தெரிவித்தார். பிரயாக்ராஜ் பகுதியில் … Read more

Liger படத்தின் தோல்வி; சமூக வலைதளத்தை விட்டுத் தற்காலிகமாக விலகும் நடிகை சார்மி!

காதல் அழிவதில்லை படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்தவர் சார்மி கவுர். அதன் பிறகு தெடர்ச்சியாக பல தெலுங்கு படங்களில் நடித்தார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்கப்போவதாக அறிவித்துள்ளார். நடிகை சார்மி, கரண் ஜோஹர், பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட பலர் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்து பூரி ஜெகன்னாத் இயக்கி வெளியான படம் லைகர். விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து தமிழ், தெலுங்கு, … Read more

கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி சொத்தை சேதப்படுத்திய தேவேந்திரன், சதீஷ்பாபு, போலீஸ் வாகனம் மீது கற்களை வீசிய சின்னையன் ஆகியோர் கைதாகியுள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்தை அலேக்கா தூக்கும் முகேஷ் அம்பானி.. கடைக்குட்டி சிங்கத்துக்கு ஜாக்பாட்!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மிகவும் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் விரிவாக்கத்தை வேகப்படுத்தும் அதேவேளையில் சேவைகளை வேகப்படுத்தவும் பல நிறுவனங்களை வாங்கி வருகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அந்த வகையில் ரிலையன்ஸ் தனது 4வது முதலீட்டுச் சுற்றில் நியூ எனர்ஜி பிரிவு மூலம் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாகக் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை … Read more

“2024-ல் நான் பிரதமர் வேட்பாளரா?!" – செய்தியாளார்கள் சந்திப்பில் திட்டவட்டமாகக் கூறிய நிதிஷ் குமார்

பீகாரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பா.ஜ.க-வுடன் இணைந்து முதல்வராக ஆட்சி செய்துவந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், திடீரென அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியாக விளங்கிய மகாபந்தன் கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் முதல்வரானார். இது பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவே, அடுத்ததாக 2024 மக்களவைத் தேர்தலில் மோடிக்கெதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் போட்டியிடப்போகிறார் எனச் செய்திகள் வெளிவந்தன. அதுபோன்ற செய்திகளுக்கேற்றவாறே, நிதிஷ் குமாரும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துவந்தார். மோடி- … Read more

ஹிஜாப் வழக்கு: கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை  கடைபிடிப்பதுதான்  உரிமையா?

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை  கடைபிடிப்பதுதான்  உரிமையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தியா மதசார்பற்ற நாடு என அரசியலமைப்பின் முகப்பில் உள்ளது. தனிநபருக்கு , தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை உண்டு, ஆனால் அவர் அந்த உரிமையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட சீருடையைக் கொண்ட பள்ளி வரை எடுத்துச் செல்ல முடியுமா? என  உச்சநீதிமன்ற … Read more

இங்கிலாந்து பிரதமரின் ராஜினாமா ஏற்பு

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவை, ராணி எலிசபெத் ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பிரதமராக லிஸ் ட்ரூஸ் விரைவில் பதவியேற்க உள்ளார்

வளர்ப்பு நாய் கடித்ததால் துடிதுடித்த சிறுவன்: உரிமையாளர் மீது வழக்கு| Dinamalar

காசியாபாத்: உ.பி.,யில் தான் கொண்டு வந்த வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் வலியால் துடித்த போதும் கண்டு கொள்ளாமல் இருந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உ.பி., மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட்டில் சிறுவன் ஒன்று நின்று கொண்டிருந்தான். அப்போது, பெண் ஒருவர் வளர்ப்பு நாயுடன் உள்ளே வந்தார். நாயை பார்த்த பயத்தில் சிறுவன் முன்னே, அமைதியாக சென்றான். ஆனால், அந்த நாய் சிறுவனின் காலை கடித்தது. இதனால், … Read more