Uber Eats: `உணவு போல இனி கஞ்சாவும் ஹோம் டெலிவரி’ – கனடாவில் சட்டப்பூர்வ அனுமதி!

கனடாவில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான உபர் ஈட்ஸ் (Uber Eats) சட்டப்பூர்வமாக வீட்டிற்கே கஞ்சாவை டெலிவரி செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கஞ்சா போதைப்பொருள்களை, உணவு ஆர்டர் செய்வது போல ஆர்டர் செய்பவர்க்கு, நேற்று முதல் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறது. இதற்காகவே பிரத்யேகமாக, கஞ்சா விற்பனை இணையதளமான லீஃப்லி உடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. மேலும், ஆன்லைன் மூலம் கஞ்சாவை ஆர்டர் செய்யும் நபர் 19 வயதைக் கடந்திருக்க … Read more

திடீரென மாயமான பிரதமர் லிஸ் ட்ரஸ்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்..

முக்கிய நிகழ்வின்போது பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நாடாளுமன்றத்திற்கு வராததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. முதுகெலும்பில்லாத பிரதமர் மேசைக்கடியில் ஒளிந்துகொண்டிருக்கிறாரா, எங்கே அவர் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தம் எழுப்பினார்கள். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரது இடத்தைப் பிடிக்க கடும் போட்டி நடந்தது. முழு அரசியல்வாதியாக, அதைச் செய்வேன் இதைச்செய்வேன் என வாய்ஜாலம் பேசி பிரதமர் பதவியைக் கைப்பற்றிய லிஸ் ட்ரஸ், சொன்னதைச் செய்ய இயலாமல் தடுமாறி வருகிறார். அவர் ராஜினாமா … Read more

ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்…

சென்னை: ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றம் சாட்டியுள்ள விசாரணை ஆணையம்,   ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம்  உள்ளதாகவும், ஜெ.வுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய சசிகலா தடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் … Read more

பாஜக ஆட்சிக்கு வந்ததே இந்தியை திணிக்கதான்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை: ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியை திணிப்பதை ஒன்றிய அரசு தனது வழக்கமாகவே கொண்டுள்ளது. ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்கிறது. பல்வேறு மொழியினர் வாழும் நாடு இது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது … Read more

குஜராத் காந்திநகரில் பாதுகாப்புத் துறையின் மாபெரும் கண்காட்சி இன்று தொடக்கம்!

காந்திநகர், இந்தியாவில் இதுவரை நடைபெறாத வகையில், பிரம்மாண்டமான முறையில் 12-வது பாதுகாப்புத்துறை கண்காட்சி குஜராத்தின் காந்திநகரில் இன்று தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற உள்ள 12-வது பாதுகாப்புத்துறை கண்காட்சியின் ஒரு பகுதியாக இன்று இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தை சந்திப்பின்போது, ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளை பாதுகாப்புத் துறை மந்திரி மந்திரி ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார். ‘இந்திய-ஆப்பிரிக்கா: ராணுவ … Read more

`பெண்கள் மட்டுமே உடலை சுமந்து சென்றது ஏன்?' – காவேரி அம்மாளின் இறுதி ஊர்வலம் குறித்து அவரின் மகன்

சாமானியர் ஒருவரின் மரணம் அவரின் குடும்பத்தினருக்கு மறக்கமுடியாத ஒன்றாக நினைவில் தங்கி நிற்கும். ஆனால், காவேரியம்மாளின் இறப்பு துக்கத்தைத் தாண்டி அங்கு நிகழ்ந்த முற்போக்கான நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுக்க பேசுபொருளாகி இருக்கிறது. இறந்தவர்களின் உடலை பொதுவாக ஆண்கள் சுமந்து செல்வது வழக்கம் இருக்கிறது. ஆனால்,காவேரியம்மாளின் உடலை பெண்கள் மட்டுமே சுமந்து சென்றனர். காவேரி அம்மாள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் நாகராசன். இவர் திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். … Read more

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஒருநாள் தடை…

சென்னை: எதிக்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முடிவு எடுக்காததை கண்டித்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையில் இருந்து வெளியேற்றிய சபாநாயகர் அவர்கள் அனைவரையும் இன்று ஒருநாள் அவை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்துள்ளார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் முடிவு எடுக்காததை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அவை யில் கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு, அவையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து, … Read more

எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை: ஆணையம் அறிக்கையில் தகவல்

சென்னை : எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ஆணையம் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் ஆஞ்சியோவுக்கு பரிந்துரைத்தும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சுவரை ஏன் அது நடக்கவில்லை? என ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் இன்டர்போல் பொதுச்சபை கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தை பிரதமர் மோடி இன்றுதொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.. இந்த கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி நடக்க உள்ளது. சர்வதேச அளவில் போலீஸ் துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இன்டர்போல் அமைப்பு. ஐரோப்பிய நாடான பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பில் மொத்தம் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இன்டர்போலின் 90வது பொதுச்சபை அக்டோபர் 18 முதல் 21 வரை நடைபெறுகிறது. … Read more

அருகருகே எடப்பாடி – பன்னீர்… எம்.எல்.ஏ-க்களை வெளியேற்ற உத்தரவு – சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம்!

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், சட்டசபையிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று தொடங்கிய சட்டசபைக் கூட்டத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்படததால், பழைய நடைமுறை தொடர்ந்தது. இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை, ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்படாமல் பன்னீர் செல்வத்துக்கே வழங்கப்பட்டிருந்தது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி மேலும் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி.உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. சட்டமன்ற … Read more