எல்லையில் துப்பாக்கி சூடுபாக்., ராணுவம் விஷமம்| Dinamalar

ஜம்மு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு நம் படைகள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளன.ஜம்மு – காஷ்மீரில் எல்லையில், 2021 பிப்., 21 முதல் போர் நிறுத்தம் செய்வதாக இந்தியா, பாகிஸ்தான் அறிவித்தன. இதன்பின் பாக்., ராணுவம் பெரிய அளவில் தாக்குதலில் ஈடுபடவில்லை.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் அர்னியாவில் சர்வதேச எல்லைக்கு அருகில் இருந்து பாக்., ராணுவம் நேற்று காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. எல்லைக்கு … Read more

பெங்களூருவில், இன்று முதல் காவிரி குடிநீர் வினியோகம்- அதிகாரி தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) முதல் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார். நீரேற்று நிலையத்தில் வெள்ளம் புகுந்தது மண்டியா மாவட்டம் மலவள்ளி டி.கே.ஹள்ளியில் பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக நீரேற்று நிலையம் (பம்பிங் ஸ்டேஷன்) உள்ளது. அங்கு பெய்த கனமழையால் நீரேற்று நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த நிலையம் செயல்படாமல் முடங்கியுள்ளது. அங்குள்ள வெள்ளத்தை அகற்றும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த … Read more

உணவில் பல்லி : 33 மாணவியருக்குவாந்தி, மயக்கம்| Dinamalar

ஹைதராபாத்,தெலுங்கானாவில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 33 பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வர்தன்னாபேட்டையில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் தயாரித்து வைத்த உணவில், ஒரு பல்லி இறந்து கிடந்தது. இதுபற்றி, ஒரு மாணவி சமையல்காரரிடம் கூறினார். ஆனால், அது பச்சை மிளகாய் என அவர் கூறி விட்டார்.இந்நிலையில், அந்த உணவை சாப்பிட்ட மாணவியருக்கு, வாந்தி, மயக்கம் … Read more

மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது; ஜே.டி.எஸ். வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் கிடைத்தது

மைசூரு: மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது. ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் பா.ஜனதாவுக்கு கிடைத்தது. மேயர், துணை மேயர் தேர்தல் கர்நாடகத்தில் மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட சில மாநகராட்சிகளுக்கு 4-ம் கட்ட மேயர், துணை மேயர் தேர்தலுக்கு இடஒதுக்கீடு அளித்து கர்நாடக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி மைசூரு மாநகராட்சி மேயர் பதவி பொது பிரிவு ஆண்களுக்கும், துணை மேயர் பதவி எஸ்.டி. பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து … Read more

வாட்ஸ்ஆப் போன் கால் செய்ய கட்டணமா? டிராய் எடுக்கப் போகும் முடிவு என்ன?

வாட்ஸ் ஆப் செயலி மூலம் போன் கால், வீடியோ கால் செய்ய விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு இலவச அழைப்புகள், டேட்டா போன்றவை வழங்கப்பட்டன. பின்னர் சில மாதங்கள் கழித்து கட்டணம் வசூலிக்கப்பட்டன. இப்போது ஜியோ, ஏர்டெல், வீ என எல்லா டெலிகாம் நிறுவன கட்டணங்களும் கிட்டத்தட்டச் சமமாகவே உள்ளன. எனவே இணையதள டேட்டா உள்ள பேக், வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள வைஃபை சேவையை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் … Read more

லொட்டரி வென்றதை நடித்து காட்டிய நபருக்கு மீண்டும் அடித்த அதிர்ஷ்டம்! நேரலையில் உலகமே பார்த்த காட்சி இப்போது வைரல்

கோமாவில் இருந்து மீண்டு வந்த நபருக்கு விலைஉயர்ந்த கார் ஒன்று பரிசாக விழுந்தது. பரிசு விழுந்ததற்காக தொலைக்காட்சி ஒன்றிருக்கு லொட்டரி சீட்டை வாங்கி சுரண்டுவது போல் நடித்த அவருக்கு மீண்டும் ஒரு பெரிய தொகை பரிசாக விழுந்தது. (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது) கோமாவில் இருந்து மீண்ட அவுஸ்திரேலிய நபர் ஒருவர் லொட்டரியில் பரிசு வென்றதை நடித்துக்காட்டும்போது, மீண்டும் அவரும் பெரும் தொகை பரிசாக விழுந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் … Read more

மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்துஅவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி| Dinamalar

புதுடில்லி, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள, மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருத்தின் அவசரகால பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ., அனுமதி அளித்துள்ளது.நம் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, ‘கோவிஷீல்டு, கோவாக்சின்’ உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதில், ‘கோவாக்சின்’ தடுப்பூசியை, தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த நிறுவனம், மூக்கு வழியாக செலுத்தக்கூடிய, ‘பிபிவி 154’ என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளது. இந்த மருந்தை 18 … Read more

பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் WFH.. மழை வெள்ளத்தில் மூழ்கிய அலுவலகங்கள்..!

பெங்களூர்: இந்தியாவில் ஐடி துறைக்குத் தலைநகராக விளங்கும் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வீடுகள் மட்டும் அல்லாமல் பெரிய பெரிய டெக் பார்க், பயோ டெக் பார்க் நிறுவனங்களிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் திங்கட்கிழமை பெரும்பாலான ஊழியர்களை மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட நிலையில், இன்று அனைத்து பெங்களூர் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துள்ளது. சென்னை தான் மழை வெள்ளத்தில் … Read more

லலித் மோடி – சுஷ்மிதா சென் காதல் முடிவுக்கு வந்தது?

புதுடில்லி :’இந்தியன் ப்ரீமியர் லீக்’ எனப்படும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளின் நிறுவனரான லலித் மோடி – பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இடையிலான காதல் முறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஐ.பி.எல்., டி – 20 கிரிக்கெட் போட்டிகளை துவங்கி, அதன் முதல் தலைவராக இருந்தவர் லலித் மோடி, 58. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்று … Read more

இண்டிகோவின் 6 புதிய நிறுவனம்.. வெளிநாடு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் புதிதாக 6 விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த ஆண்டு 38 புதிய விமானங்களை அறிமுகப்படுத்திய இண்டிகோ, தற்போது வெளிநாட்டு விமான பயணத்தையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்க இண்டிகோ நிறுவனம் 6 புதிய விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளதால் வெளிநாட்டு விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். … Read more