எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை: ஆணையம் அறிக்கையில் தகவல்

சென்னை : எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ஆணையம் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் ஆஞ்சியோவுக்கு பரிந்துரைத்தும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சுவரை ஏன் அது நடக்கவில்லை? என ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் இன்டர்போல் பொதுச்சபை கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தை பிரதமர் மோடி இன்றுதொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.. இந்த கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி நடக்க உள்ளது. சர்வதேச அளவில் போலீஸ் துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இன்டர்போல் அமைப்பு. ஐரோப்பிய நாடான பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பில் மொத்தம் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இன்டர்போலின் 90வது பொதுச்சபை அக்டோபர் 18 முதல் 21 வரை நடைபெறுகிறது. … Read more

அருகருகே எடப்பாடி – பன்னீர்… எம்.எல்.ஏ-க்களை வெளியேற்ற உத்தரவு – சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம்!

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், சட்டசபையிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று தொடங்கிய சட்டசபைக் கூட்டத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்படததால், பழைய நடைமுறை தொடர்ந்தது. இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை, ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்படாமல் பன்னீர் செல்வத்துக்கே வழங்கப்பட்டிருந்தது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி மேலும் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி.உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. சட்டமன்ற … Read more

அலுவல் ஆய்வுக்குழுவில் யாரை சேர்ப்பது என்பது சபாநாயகரின் முழு உரிமை; அதில் யாரும் தலையிட முடியாது: அப்பாவு திட்டவட்டம்

சென்னை: அலுவல் ஆய்வுக்குழுவில் யாரை சேர்ப்பது என்பது சபாநாயகரின் முழு உரிமை அதில் யாரும் தலையிட முடியாது என அப்பாவு தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் வந்து இருக்கையை மாற்றச் சொன்னால் எடுத்தேன், கவிழ்த்தேன் என

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

டெல்லி, நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே அதிகரித்து வரும் தொடர்பை தகர்க்க இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தினத்தந்தி Related Tags : Delhi … Read more

தன் வீட்டில் திருடிய நண்பன்; மது வாங்கி கொடுத்து அடித்துக் கொலை – எலும்புக் கூடாக மீட்கப்பட்ட உடல்!

கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் மாசானம் என்ற கண்ணன்(37). இவர் மது குடிப்பதுடன் சிறு திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாசானம் திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அவரின் மனைவி இசக்கியம்மாள் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் மாசானத்தின் நண்பரான மாதவபுரத்தைச் சேர்ந்த பாலன் என்ற பாலகிருஷ்ணன், பாலனின் நண்பரான விக்னேஷ் ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் … Read more

மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவம்! ரயில் முன் தள்ளிவிடப்பட்ட வீடியோ ஆதாரம் சிக்கியது

மாணவி சத்யாவை ரெயில் முன் தள்ளி கொன்ற வழக்கு. வீடியோ ஆதாரத்தை கைப்பற்றிய அதிகாரிகள். கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன்னர் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கின் வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது. அதன்படி ஆதாரத்தை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் கைப்பற்றி உள்ளனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை கல்லூரி மாணவி சத்யாவை, சதீஷ் என்ற வாலிபர் மின்சார ரயில் முன்பு தள்ளிவிட்டு கொடூரமாக கொலை செய்தார். தமிழகத்தை உலுக்கிய சுவாதி – ராம்குமார் சம்பவம் போலவே … Read more

பயங்கரவாதம் – போதைப்பொருள்: டெல்லி உள்பட 40 இடங்களில் என்ஐஏ சோதனை…

டெல்லி: பயங்கரவாதம் – போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் டெல்லியின் என்சிஆர் பகுதி உள்பட பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில்  40-க்கு மேற்பட்ட இடங்களில்  இன்று அதிகாலை முதல் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பயங்கரவாதிகள், குண்டர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்/கடத்தல்காரர்களுக்கு இடையே உருவாகி வரும் தொடர்பைத் தகர்க்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதியில் பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்தியா … Read more

பழனிசாமி, பன்னீர் தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை..!!

சென்னை: பழனிசாமி, பன்னீர் தரப்பு எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர். பழனிசாமி தரப்பினர் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் இன்று பங்கேற்கின்றனர். எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் பன்னீர், பழனிசாமி தரப்பினர் இடையே மோதல் நீடித்து வருகிறது.

பாரத் ஜோடோ யாத்திரை: `என்ன சன் ஸ்கிரீன் பயன்படுத்துகிறீர்கள்?’ – ராகுல் அளித்த பதில்! | Video

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை இலக்காகவைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுவருகிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை இதுவரை ஏறத்தாழ 1000 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்திருக்கிறது. இன்று 42-வது நாளாக பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியிருக்கிறது. கர்நாடகாவில் ராகுல் காந்தியின் பயணம் தொடர்கிறது. ராகுல் காந்தி இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலை முன்னிட்டு நேற்று யாத்திரை இடை நிறுத்தப்பட்டது. … Read more