புரட்டாசி சனிக்கிழமைகள் வழிபாடு: நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடு!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். குவலயவல்லி தாயாருடன் மலை மீது அமர்ந்தபடி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்குத் தமிழகம் முழுக்க பக்தர்கள் வந்துபோகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும். 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் நடந்துசென்று, மலையிலுள்ள பெருமாளைத் தரிசிக்கச் செல்வர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 … Read more