`நாட்டில் எஞ்சிய ஒற்றை தேசிய கட்சி பாஜக மட்டும்தான்!' – நட்டாவின் பேச்சும், கள யதார்த்தமும்!

பாஜக மட்டுமே தேசிய கட்சி: குஜராத்தின் துவாரகாவிலிருந்து போர்பந்தர் வரை பா.ஜ.க-வின் இரண்டாவது யாத்திரையை தொடங்கி வைத்துப் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, “ஒரு காலத்தில் அரசியல் என்றால் ஊழல், பதவியிலிருந்து கொண்டு மக்களை ஏமாற்றி மகிழ்வது என்ற நிலை இருந்தது. ஆனால், பிரதமர் மோடி இந்த நிலையை மாற்றி, சேவையில் ஈடுபட்டார். இந்தியாவில் பாஜக-வைத் தவிர வேறு எந்த தேசிய கட்சியும் இல்லை. காங்கிரஸ் சுருங்கிவிட்டது. இனி அது தேசிய கட்சி இல்லை” … Read more

சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது, மழைகால வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

அரசு பஸ்- சுற்றுலா வேன் மீது மோதல்: 9 பேர் பலி| Dinamalar

பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம் காந்திநகர் கிராமம் அருகே நேற்று(அக்.,15) இரவு அரசு பஸ்சும், சுற்றுலா டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதின. அந்த சமயத்தில் வேன் பின்னால் வந்த டேங்கர் லாரியும் வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்கி பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பெங்களூரு: கர்நாடக மாநிலம், … Read more

அக்னிபத் திட்ட வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடெல்லி, அக்னிபத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டடத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் … Read more

திருப்பூர்: குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி சாவு!

திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த 63 வேலம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மகன் கிஷோர் (9). அதே பகுதியைச் சேர்ந்த வேலன் மகன் கதிர்வேல் (11). கிஷோர், கதிர்வேல் இருவரும் நண்பர்கள். கிஷோர் 63 வேலம்பாளையம் அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பும், கதிர்வேல் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். கிஷோர், கதிர்வேல் இருவரும் 63 வேலம்பாளையம் அருகே உள்ள மூணுமடை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் மீன் பிடிக்க … Read more

நெல் ஈரப்பதம் 22%-ஆக உயர்த்துவது குறித்து நாகை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு

நாகை: நெல் ஈரப்பதம் 22%-ஆக உயர்த்துவது  குறித்து நாகை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு செய்துவருகிறது. நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களுக்கு  சென்று நெல் சேகரித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 2,401 ஆக சரிவு!| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,401 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: * இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,401 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,28,828 ஆனது. * கடந்த 24 மணி நேரத்தில், 2,373 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,73,308 ஆனது. தற்போது 26,625 பேர் சிகிச்சையில் உள்ளனர். * … Read more

தேர்வில் காப்பி அடித்ததாக ஆடையை கழற்றி சோதனையிட்ட ஆசிரியை – அவமானம் தாங்காமல் தீக்குளித்த மாணவி

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு நேற்று முன் தினம் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது, தேர்வு எழுந்த வந்த 9-ம் வகுப்பு மாணவி தேர்வில் காப்பி அடிக்க ‘பிட் பேப்பர்’ வைத்துள்ளதாக ஆசிரியை கருதியுள்ளார். இதனால், வகுப்பறைக்கு அருகே உள்ள அறைக்கு மாணவியை அழைத்து சென்ற அந்த ஆசிரியை மாணவியின் ஆடையை கழற்றி சோதனையிட்டுள்ளார். மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் ஆடையை கழற்றி சோதனை செய்துள்ளார். இந்நிலையில், ஆசிரியை … Read more

உலகப் பசி குறியீட்டு மதிப்பீடு; 101-வது இடத்திலிருந்து 107-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா!

இந்தியா உலகப் பசி குறியீடு (Global Hunger Index) 2022-ல் உலகளவில் 121 நாடுகளில் 107-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 101-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 107-வது இடத்திற்குச் சரிந்து தன்னுடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைவிடப் பின்தங்கியுள்ளது. சீனா, துருக்கி, குவைத் உட்பட 17 நாடுகள் ஐந்திற்கும் கீழான GHI மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்திருப்பதாகப் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்காணிக்கும் உலகப் பசி குறியீட்டின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு

சென்னை: சென்னையில் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த  சதீஷை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டார். சதீஷை ரயில்வே போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.