பிரான்ஸ் நாட்டுக்கு உக்ரைன் அனுப்பியுள்ள ரொமான்றிக் வீடியோ: எதற்காக தெரியுமா?

பிரான்ஸ் நாட்டுக்கு ரொமான்றிக் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளது உக்ரைன். ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது ரொமான்றிக் விடயம் அல்ல. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் பிரான்சுக்காக ரொமான்றிக் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளது. சிவப்பு ரோஜாக்கள், சாக்லேட்டுகள் என துவங்கும் அந்த வீடியோ, உண்மையில், பிரான்சிடம் ஆயுதங்களை கோருவதற்காக, உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ஆகும். தங்களுக்கு மேலும் ஆயுதங்கள் வேண்டும் என்று குறிப்பிடுவதற்காகத்தான் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. Sophie Marceau… Isabelle Adjani… … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 391 புள்ளிகள் சரிந்து 57,235 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் இருந்த பங்கு சந்தை குறியீட்டு எண்கள் சரிந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 391 புள்ளிகள் சரிந்து 57,235 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109 புள்ளிகள் குறைந்து 17,014 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

"அமீர் கான் நடித்த விளம்பரம், இந்து மதத்தை புண்படுத்துகிறது!"- ம.பி அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கருத்து

பாலிவுட் நடிகர் அமீர் கான் சமீபத்தில் வங்கி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் அமீர் கான், கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்தனர். அந்த விளம்பரத்தில், திருமணம் முடித்த தம்பதிகள் சிரித்துக்கொண்டே மணமகளின் வீட்டை அடைந்து, மணமகன் மணமகள் வீட்டில் முதல் அடி எடுத்து வைப்பதாக விளம்பரம் நகர்கிறது. இந்த நிலையில், விளம்பரம் பாரம்பர்யத்தை மீறுவதாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலின் பூசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். விளம்பரம் இணையத்தில் வைரலாகி … Read more

மேட்டூரில் நீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலி: காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூரில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து இன்னும் அதிக அளவு  திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, காவிரி கரையோர 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்ப இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தின்  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  பெய்து வரும் கனமழை மற்றும், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. … Read more

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளி கொன்றவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

சென்னை : சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்றவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீஸ் சார்பாக 4 தனிப்படைகளும் பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்படுள்ளது.

தடம்! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மாலை ஆறு மணிக்கே உரிய சாம்பல் நிற வெளிச்சம். மஞ்சள் நிற தெருவிளக்குகளை சுற்றிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அந்த மாலை வேளையில் திருச்சியிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்ததும், தனது இருக்கையின் அருகே கிடந்த யாரோ விட்டுவிட்டு சென்றிருந்த அன்றைய … Read more

தாய் மீது கல்லை போட்டு கொன்ற 14 வயது மகன்! தெரிய வந்த அதிர்ச்சி காரணம்

சரியாக படிக்காததால் கண்டித்த தாயை கொலை செய்த 14 வயது மகன் தப்பியோடிய சஞ்சயைப் பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் தமிழக மாவட்டம் ஈரோட்டில் சரிவர படிக்காததைக் கண்டித்ததால் தாயின் தலையில் 14 வயது மகன் கல்லைப் போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். இவர் தனது மனைவி யுவராணி, மகன் சஞ்சய் மற்றும் மகள் தர்ஷினி ஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார். … Read more

சென்னையில் மீண்டும் ஒரு சுவாதி சம்பவம்: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர்….

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற  மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளம்பெண் முருகன் என்ற இளைஞரின் ஒருதலைக் காதல் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தின் நினை வலைகள் இன்னும் நீங்காத நிலையில், … Read more

கோயில் கோயிலாக இருக்க வேண்டும், வியாபாரதலமாக இருக்கக்கூடாது: போலி இணையதள பண மோசடி குறித்து ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: தமிழ்நாட்டில் கோயில்கள் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி நடந்துள்ளது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம், பழனி முருகன், சென்னை வடபழனி ஆண்டாள் கோயில் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி லட்சக்கணக்கில் பண மோசடி நடப்பதாக நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் வேதனை தெரிவித்தனர். கோயில் கோயிலாக இருக்க வேண்டும், வியாபாரதலமாக இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன், நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார். சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் தகவல் மையம், புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கி வருகிறது. இந்த மையத்தில், நாளை (14ம் தேதி) காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார். திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, … Read more