சர்ச்சை எதிரொலி: தனித்தனி கழிப்பறையாக மாற்றப்பட்டது காஞ்சிபுரம் அரசு அலுவலக இரட்டை கழிப்பறை…

சென்னை: சர்ச்சை எதிரொலி காரணமாக, ஒரே அறையில் கட்டப்பட்டிருந்த இரு கழிப்பறைகள்  தனித்தனி கழிப்பறையாக மாற்றப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வரைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ந்தேதி திறந்து வைத்த பூந்தமல்லி  ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம்  சிப்காட் திட்ட அலுவலகத்தில் உள்ள ஒரு கழிப்பறையில், இரு கோப்பைகள் அமைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலானது.  ஒப்பந்ததாரர்களின் அலட்சியம் மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தனமே  இதற்குக் காரணம் என்ற … Read more

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உயர்நீதிமன்ற முழு அமர்வு உத்தரவுப்படி பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்ய ஐகோர்ட் முழு அமர்வு ஆணையிட்டுள்ளது.

“பூ வெச்சுட்டு வந்தா ஒத்த ரோசானு கிண்டல் பண்றாங்க" | ஜன்னலோரக் கதைகள் – 5

சென்னை ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம்.  சோதனை செய்ய நின்று கொண்டிருந்த நபர்களிடம், பயணிகள் ஒவ்வொருவரும் பல்வேறு முகபாவனைகளால் அவர்களின் எரிச்சல்களை வெளிப்படுத்தி நகர்ந்தனர். அறிவிப்பு பலகையைப் பார்த்து நான்கு நிமிடங்களுக்கு ஒரு ரயில் இருப்பதை அறிந்து கொண்டேன். ரயில் நிலையத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே என்னுடன் ஒரு பெண் நடந்து வந்தார்.  மெட்ரோ ரயில் “காசைத் தாண்டி எத்தனையோ விஷயம் இருக்குங்க…” | ஜன்னலோரக் கதைகள் – 1 “அக்கா டிக்கெட் எங்க வாங்கணும்?” … Read more

கனடாவில் உயிரிழந்த இலங்கை தமிழர்! பிரபலம் வெளியிட்ட இரங்கல் செய்தி

ஸ்ரீ குகன் ஸ்ரீரிஸ்கந்தராஜா என்ற இலங்கை தமிழர் மறைவுக்கு  கேரி அனந்தசங்கரி இரங்கல். வழிகாட்டி மற்றும் சமூகத் தலைவராக இருந்தார் என புகழாரம். கனடாவில் பிரபலமாக இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினரான கேரி அனந்தசங்கரி இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்ரீ குகன் ஸ்ரீரிஸ்கந்தராஜா என்ற நபர் சமீபத்தில் உயிரிழந்திருக்கிறார். அவர் ரொறன்ரோவில் உள்ள தமிழ் சமூகத்தினரின் குடியேற்றம், தொழிலாளர் நலன், இளைஞர்களை ஊக்குவிப்பது போன்ற வழிகாட்டுதல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவர் சமீபத்தில் … Read more

அரசு கட்டிடங்களின் வணிக வாடகைதாரர்களின் வாடகையை தள்ளுபடி செய்கிறது தமிழகஅரசு…

சென்னை: கொரோனா காலக்கட்டத்தின்போது, அரசு கட்டிடங்களின் வாடகைக்கு இருந்து வணிகர்களின்  வாடகையை தள்ளுபடி செய்யும் நடவடிக்கைகை தமிழகஅரசு முன்னெடுத்துள்ளது கொரோனா காலக்கட்டத்தின்போது தமிழகஅரசு அறிவித்த பொதுமுடக்கம் காரணமாக வணிகர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர். குறிப்பாக அரசு கட்டிடங்களில் வாடகைக்கு இருந்து வரும் வணிகர்கள் கடைகளை திறக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், வாடகை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து, அப்போதைய அதிமுக அரசு, அரசு கட்டிடங்களில் வாடகைக்கு இருந்து வரும் வணிகர்களின் இரண்டு மாத வாடகையை தள்ளுபடி … Read more

அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்: நடிகை திவ்யா பேட்டி

சென்னை: கணவர் அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரான பிறகு சின்னத்திரை நடிகை திவ்யா தெரிவித்துள்ளார். பல்வேறு தகவல்களை முதல் தகவல் அறிக்கையில் இணைக்க வலியுறுத்தியுள்ளேன். கட்டாய மதம் மாற்ற திருமணம் செய்து, தற்போது கதியற்ற நிலைக்கு தள்ளிவிட்டார். என்னுடைய நிலை வேறு எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

கட்டடம் இடிந்து 2 தொழிலாளர் பலி| Dinamalar

ஒயிட் பீல்டு : சிதிலமடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், அதில் துாங்கி கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாயினர். மூன்று பேர் காயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே உள்ள ஹுடியில் பி.எல்.ஆர்., எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. எனவே இடிக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டடத்தின் முன்பு நேற்று முன்தினம் இரவு … Read more

நெல் நாற்றுகள் விற்பனை… உரிமம் இல்லையென்றால் 7 ஆண்டுகள் சிறை! விதை ஆய்வு அதிரடி

விதைச் சட்டம் 1966, விதை கட்டுப்பாட்டு ஆணை 1983- இன் படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மற்றும் நாற்றுகளின் தரத்தினை உறுதி செய்யும் பணியினை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் விதை ஆய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சி.சண்முகம் பேசியபோது, “சேலம் மாவட்டத்தில் 714 விதை விற்பனை நிலையங்களுக்கும், 94 நாற்றுப் பண்ணைகளுக்கும், விற்பனை உரிமம் வழங்கப்பட்டு விதை ஆய்வாளர்களால் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டும், விதை மாதிரிகள் எடுத்து … Read more

மன்னருடன் ராணியாக பதவியேற்கும் கமீலா: புத்திசாலித்தனமாக காய் நகர்த்திய தருணங்கள்

பிரித்தானிய மன்னராக அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முடிசூட இருக்கிறார் சார்லஸ். அன்றே சற்றே சிறிய நிகழ்ச்சி ஒன்றில் ராணியாக பதவியேற்க இருக்கிறார் கமீலா. இளவரசர் சார்லஸ், இளவரசி டயானாவின் திருமண வாழ்வில் மூன்றாவது நபராக அறியப்பட்டவர் கமீலா. இளவரசி டயானா, தங்கள் திருமண வாழ்வில் மூன்றாவது நபராக ஒரு பெண் இருக்கிறார், அது கமீலா என பிபிசி தொலைக்காட்சியில் பேட்டியளித்தபோது, பிரித்தானிய மக்கள் கொந்தளித்தார்கள். ராஜ அரண்மனை குலுங்கியது. பிரித்தானிய மகாராணியார் தர்மசங்கடமான … Read more

ஆபரேசன் கஞ்சா 2.0? சென்னையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது…

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருட்களை தடுக்கும் வகையில் ஆபரேசன் கஞ்சா 2.0 என்று டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி வேட்டையை நடத்தி வந்த நிலையில், சென்னையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து 315 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருளான கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டத்தை அறவித்து நடவடிக்கை மேற்கொண்டு … Read more