புகார் தெரிவித்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம்! வீடியோ

தர்மபுரி: புகார் தெரிவிக்க வந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மின்வாரிய ஊழியர் குப்புராஜை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 11ந்தேதி அன்று தர்மபுரி மாவட்டம்  தீர்த்தகிரி நகரில் நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாததால், அதுகுறித்து புகார் அளிக்க அந்த பகுதி மக்கள், அருகே உள்ள பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் மின் அலுவலக்துக்கு சென்று புகார் தெரிவித்தனர். அப்போது,  மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் … Read more

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ள நிலையில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கோவை சூலூரில் இறங்கிய பிரான்ஸ் ரபேல் போர் விமானங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தோ பசிபிக் பகுதியில் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக 16 ஆயிரம் கி.மீ., தூரம் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் வான் மற்றும் விண்வெளி பாதுகாப்பு அணி, ரபேல் போர் விமானங்களுடன் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமான படை தளத்தில் கடந்த 10ம் தேதி இறங்கியது. பிரான்ஸ் விமானப்படையின் இந்த பயிற்சி ஆக.,1 0 முதல் செப்.,18 வரை நடைபெற உள்ளது. 10ம் தேதி … Read more

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் விரைவில் நிறுத்தம்..ஏன் தெரியுமா?

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெடாஸ் என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டு வந்தது. இந்த பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகின்றது. இதற்கிடையில் ஜான்சன் அன்ட் ஜான்சனின் பேபி பவுடர் 2023ம் ஆண்டில் உலகளவில் விற்பனை செய்வதை நிறுத்தும் என்று அறிவித்துள்ளது. உச்சத்தில் இருந்து பாதாளம் சென்ற 4 பங்குகள்… உங்களிடம் இருக்கா? ஆயிரக்கணக்கான … Read more

கேரளா: மாலில் குவிந்த மக்கள்; படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியைக் கேன்சல் செய்த படக்குழு!

கேரளாவில் உள்ள ஹைலைட் (HiLITE) என்ற மாலில் ‘தல்லுமாலா’ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியை நடத்த படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் புரோமோஷன் நிகழ்ச்சியையே படக்குழுவினர் ரத்து செய்துவிட்டனர். பிரபல மலையாள இயக்குநர் காலித் ரகுமான் இயக்கத்தில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள `தல்லுமல்லா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், … Read more

தமிழ்நாடு செயல்படுத்தி வரும் மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தால் 12% சேமிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: தமிழ்நாடு செயல்படுத்தி வரும் மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தால் அக்குடும்பங்களுக்கு 8-12 சதவீதம் சேமிப்பு கிடைக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இலவச பேருந்து திட்டத்தால் பயனடைந்தவர்களில் 80 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பினர் என்பது மகிழ்ச்சிக்குரியது என அவர் கூறினார்.

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி| Dinamalar

நெட்டப்பாக்கம்: நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவையொட்டி, அரியாங்குப்பம் மாவட்ட பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப் பட்டது. நெட்டப்பாக்கம் பா.ஜ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அணியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி மாணவர்களுக்கு, சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கை வரலாறு குறித்து கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.நெட்டப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. … Read more

48 லட்சம் செலவு செய்து சர்ஜரியா.. எதற்காக.. இளம்பெண் செய்த காரியத்தை பாருங்க.!

சமீபத்திய காலமாக பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பல பெண்கள் சர்ஜரி செய்து கொள்கின்றனர். அப்படி தன்னை ஒரு நடிகை போல அழகுபடுத்திக் கொள்ள, இளம்பெண் ஒருவர் 15 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ளார். இதற்காக அவர் 48 லட்சம் ரூபாயினையும் செலவு செய்துள்ளார் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் விஷயமே. 6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..! அழகாக மாற அறுவை சிகிச்சை பிரபல … Read more

“எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரா… அத்தகைய எண்ணம் எனக்கில்லை!" – நிதிஷ் குமார் திட்டவட்டம்

மத்திய அரசு நடத்திய நிதி ஆயோக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொள்ளாததையடுத்து ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணியில் விழுந்த விரிசல் இறுதியாக ஆளும் கூட்டணியை முறித்து, புதிய கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி முதல்வர் பதவியை ராஜினாமாசெய்த நிதிஷ் குமார், மகாபந்தன் கூட்டணியில் சேர்ந்து மீண்டும் பீகாரின் முதலமைச்சராகியிருக்கிறார். நிதிஷ் குமார் – தேஜஸ்வி யாதவ் இதன் மூலம், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேஜஸ்வி யாதவும் தற்போது துணை … Read more

மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி…

மதுரை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, மதுரையில் மாணவி ஒருவர் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், மாணாக்கர்களின் தற்கொலைகள், ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள், பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழகஅரசு கூறி வருகிறது. ஆனால், தற்கொலைகள் தொடர்கின்றன. … Read more