ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்… புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீரில், இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அடுத்த நாளே, புலம் பெயர் தொழிலாளி ஒருவர் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் சோத்னாரா சும்பல் என்ற இடத்தில், தீவிரவாதிகள் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் சிக்கி, பலத்த காயமடைந்த புலம்பெயர் தொழிலாளி, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியென்றும், … Read more