அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்: நடிகை திவ்யா பேட்டி

சென்னை: கணவர் அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரான பிறகு சின்னத்திரை நடிகை திவ்யா தெரிவித்துள்ளார். பல்வேறு தகவல்களை முதல் தகவல் அறிக்கையில் இணைக்க வலியுறுத்தியுள்ளேன். கட்டாய மதம் மாற்ற திருமணம் செய்து, தற்போது கதியற்ற நிலைக்கு தள்ளிவிட்டார். என்னுடைய நிலை வேறு எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

கட்டடம் இடிந்து 2 தொழிலாளர் பலி| Dinamalar

ஒயிட் பீல்டு : சிதிலமடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், அதில் துாங்கி கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாயினர். மூன்று பேர் காயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே உள்ள ஹுடியில் பி.எல்.ஆர்., எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. எனவே இடிக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டடத்தின் முன்பு நேற்று முன்தினம் இரவு … Read more

நெல் நாற்றுகள் விற்பனை… உரிமம் இல்லையென்றால் 7 ஆண்டுகள் சிறை! விதை ஆய்வு அதிரடி

விதைச் சட்டம் 1966, விதை கட்டுப்பாட்டு ஆணை 1983- இன் படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மற்றும் நாற்றுகளின் தரத்தினை உறுதி செய்யும் பணியினை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் விதை ஆய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சி.சண்முகம் பேசியபோது, “சேலம் மாவட்டத்தில் 714 விதை விற்பனை நிலையங்களுக்கும், 94 நாற்றுப் பண்ணைகளுக்கும், விற்பனை உரிமம் வழங்கப்பட்டு விதை ஆய்வாளர்களால் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டும், விதை மாதிரிகள் எடுத்து … Read more

மன்னருடன் ராணியாக பதவியேற்கும் கமீலா: புத்திசாலித்தனமாக காய் நகர்த்திய தருணங்கள்

பிரித்தானிய மன்னராக அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முடிசூட இருக்கிறார் சார்லஸ். அன்றே சற்றே சிறிய நிகழ்ச்சி ஒன்றில் ராணியாக பதவியேற்க இருக்கிறார் கமீலா. இளவரசர் சார்லஸ், இளவரசி டயானாவின் திருமண வாழ்வில் மூன்றாவது நபராக அறியப்பட்டவர் கமீலா. இளவரசி டயானா, தங்கள் திருமண வாழ்வில் மூன்றாவது நபராக ஒரு பெண் இருக்கிறார், அது கமீலா என பிபிசி தொலைக்காட்சியில் பேட்டியளித்தபோது, பிரித்தானிய மக்கள் கொந்தளித்தார்கள். ராஜ அரண்மனை குலுங்கியது. பிரித்தானிய மகாராணியார் தர்மசங்கடமான … Read more

ஆபரேசன் கஞ்சா 2.0? சென்னையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது…

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருட்களை தடுக்கும் வகையில் ஆபரேசன் கஞ்சா 2.0 என்று டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி வேட்டையை நடத்தி வந்த நிலையில், சென்னையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து 315 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருளான கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டத்தை அறவித்து நடவடிக்கை மேற்கொண்டு … Read more

தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது: கனிமொழி பேட்டி

கோவை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பது அரசின் நிலைப்பாடு என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ் நமது அடையாளம். தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும் .கூறினார்.

3 பேருக்கு அக்.,26 வரை நீதிமன்ற காவல்| Dinamalar

பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியைசேர்ந்த 2 பெண்களை உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் 3 பேரையும், வரும் அக்.,26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியைசேர்ந்த 2 பெண்களை உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த … Read more

`வீட்டுக்கு வாங்க… நிதி அளிக்கிறேன்’ – என்.ஜி.ஓ பெண்ணை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில், என்.ஜி.ஓ ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவரை நிதி வழங்குவதாக வீட்டுக்கு அழைத்து அடித்து, பாலியல் வன்முறை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்துள்ளார். அதில், “ஒருவர் என்ஜிஓ -க்காக நிதி அளிக்கிறேன். என் அலுவலகம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அலைபேசியில் தொடர்பு கொண்டார். நான் அவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது, வீட்டில் வந்து பெற்றுக் கொள்ள சொன்னார். ரோஷன்பூர் காலனிக்கு … Read more

என் சகோதரர்கள் குடிகாரர்கள்! அம்மா ஊதாரித்தனமாக.. கலங்கிய பிரபல நடிகை

வீட்டை விட்டு துரத்தியதாக புகார் கூறிய நடிகை சங்கீதாவின் தாய் தன் அம்மாவும், சகோதரர்களும் ஊதாரித்தனமாக நடந்து கொள்வார்கள் என குற்றம்சாட்டியுள்ளார் நடிகை சங்கீதா என் விடயத்தை பொறுத்தவரை என் அம்மா தப்பு என நடிகை சங்கீதா மன வருத்தத்துடன் பேசியுள்ளார். தமிழில் காதலே நிம்மதி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. பிதாமகன் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த சங்கீதா, கடந்த 2009ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் … Read more

2023 டிசம்பரில் ராமர்கோவில் திறக்கப்படும்! உஜ்ஜையினி விழாவில் பிரதமர் மோடி தகவல்…

உஜ்ஜைனி: அயோத்தியில் விரைந்து கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படுமென உஜ்ஜையினி மகாலிங்கேஷ்வரர் கோவில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 12 ‘ஜோதிர்லிங்கங்களில்’ ஒன்று, ஆன்மீக நகரங்களில் ஒன்றனான உஜ்ஜயினியில் உள்ளது. இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ம.பி.யின்  உஜ்ஜையினி  மகாகாலேஷ்வர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவிந்து, சிவனின் அருளை பெற்று வருகின்றனர். இந்த கோவிலின் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை … Read more