பல நாட்கள் இருளில் மூழ்கலாம்… கடும் நெருக்கடி: பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல்

*ஜனவரியில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் சம்பவம் ஏற்படலாம், தொடர் மின்வெட்டுகளுக்கு வாய்ப்புகள் அதிகம் *உணவு மற்றும் தொடர்புடைய தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, நெருக்கடி ஏற்பட்டால் எதிர்கொள்ள திட்டம் வகுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் எதிர்வரும் குளிர்காலத்தில் பல நாட்கள் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் ஏற்படலாம் எனவும், இது மருத்துவமனைகள், ரயில் சேவைகள் என பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள அங்காடிகளில் அலமாரிகளை காலியாக வைத்திருக்க வேண்டாம் எனவும், மருத்துவமனைகள் தவறாமல் டீசல் சேமித்து வைத்துக் கொள்ளவும் … Read more

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றமும் தடை விதிக்க மறுத்துள்ளது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது … Read more

கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்களை தீவைத்து கொளுத்தியதாக லட்சாதிபதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லியில் மாஸ்க் அணிவது கட்டாயம்| Dinamalar

புதுடில்லி: தலைநகர் டில்லியில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அங்கு பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போருக்கு இந்த விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உச்சநீதிமன்றத்தில் இன்று(ஆக.,11) முதல் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும், வழக்கறிஞர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வாதங்களை முன் வைக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா … Read more

137 கோடிக்கு ஆடம்பர வீட்டை வாங்கிய ஆகாஷ் சவுத்ரி..!

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆகாஷ் சவுத்ரி, டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் சுமார் 137 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார் என்று Zapkey.com நிறுவனம் ஆவணங்கள் சரிபார்த்து இத்தகவலை வெளியிட்டு உள்ளது. ஆகாஷ் சவுத்ரி, சாங்க்யபுரியில் உள்ள கௌடில்ய மார்க் பகுதியில் டிப்ளமேடிக் என்கிளேவ் என்ற இடத்தில் ஒரு மாபெரும் பங்களாவை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆகாஷ் சவுத்ரி வாங்கிய சொத்து 1293.47 சதுர மீட்டர் ஆகும், மேலும் இந்தச் சொத்து ஆகஸ்ட் 1, 2022 அன்று … Read more

ரேஷனில் கட்டாயப்படுத்தி தேசியக்கொடி விற்பனை? – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், பாஜக விளக்கமும்!

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதன் காரணமாக அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி இந்த நிலையில் ஹரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தின் ஹெம்தா கிராமத்திலுள்ள ரேஷன் கடைகளில், “20 ரூபாய் கொடுத்து தேசியக்கொடி வாங்கினால் மட்டுமே … Read more

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின நாளை கொண்டாடும் வகையில், நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தமிழகஅரசு, பெண்களுக்கான இலவச பேருந்துகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து மெட்ரோ ரயிலின் வருமானமும் குறைந்துள்ளது. இதையடுத்து, வருமானத்தை பெருக்குவது எப்படி என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில்,  75வது சுந்தந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள மெட்ரோ … Read more

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் காந்தி அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். 2022-23 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் இருந்து ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ஆண்டுடிதோறும் விலையில்லா சீருடை திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்தவுடன் வேட்டி, சேலை திட்டப்பணிகள் தொடரும் என  அமைச்சர் கூறியுள்ளார்.

PVR பாப்கார்ன் விலை ஏன் அதிகமாக உள்ளது.. அஜய் பிஜ்லி பதில் என்ன தெரியுமா..?

இந்தியர்களுக்கு உணவு, சினிமா இரண்டும் இரு கண்கள் போல, இவை இரண்டும் ஓரே இடத்தில் கிடைக்கும் இடம் தான் தியேட்டர். ஆனால் அந்தத் தியேட்டரிலும் பாப்கார்ன் உட்பட அனைத்துமே காஸ்ட்லியாக இருப்பது சாமானிய மக்களுக்குக் கடுப்பை ஏற்றும் விஷயமாக உள்ளது. சமுக வலைத்தளத்தில் இருந்து டிவி விவாதம் வரையில் தியேட்டர்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் ஸ்னாக்ஸ் குறித்த விவாதம் நடந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர் நிறுவனமான PVR நிர்வாகத் தலைவர் அஜய் … Read more