4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் – இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு சென்ற பிரதமர் மோடி 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் டெல்லி மற்றும் உனாவின் அம்ப் அன்தெளராவுக்கும் இடையே இயக்கப்பட உள்ளது. மேலும் அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி-யை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஹரோலியில் ரூ.1900 கோடி செலவில் கட்டப்படவுள்ள மருந்துப் பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதனையடுத்து, சம்பாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் … Read more

தினசரி பாஸ் ரூ.100… எங்கேயும் எப்போதும் செல்லலாம்! – வரவேற்பை பெற்ற சென்னை மெட்ரோ திட்டம்!

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு 42 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தினசரி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால், அலுவலக நேரமான காலை 8 மணியில் முதல் 11 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரூ.100 கட்டணத்தில் வழங்கப்படும் தினசரி … Read more

கண்ணீர் விட்டு கதறிய மகள்கள்! இலங்கை தமிழர்கள் முகாமில் நடந்தது என்ன? 4 பேர் கைது

தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் இரு தரப்புக்கு இடையே மோதல். கைது நடவடிக்கையை முன்னெடுத்த பொலிசார். தமிழகத்தில் உள்ள ஒரு இலங்கை தமிழர் முகாமில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒற்றுமையை வலியுறுத்தி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியின் போது குகன் என்பவா் போதையில் தகராறு செய்ததாகவும், அவரை போட்டி ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான சுதாகா் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. … Read more

100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழகஅரசு

சென்னை: 100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக மின் வாரியம், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுதும்; 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. இதற்காக ஆண்டுக்கு 3,650 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டது. இந்த தொகையை மின் வாரியத்திற்கு, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இந்த நிலையில் … Read more

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் 3-வது நாளாக குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பிறப்பு சான்றிதழில் குழந்தைகளின் பெயரை பெற்றோரே சேர்க்கும் வசதி டெல்லி மாநகராட்சியில் அறிமுகம்

புதுடெல்லி, குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது. பின்னர் பெயர் சூட்டியவுடன் அதை பிறப்பு பதிவாளரிடம் சொல்லி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறும் வழக்கம் பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. இதில் பொதுமக்களுக்கு ஆகும் காலவிரயங்களை தடுக்க டெல்லி மாநகராட்சி எளிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை குழந்தைகளின் பெற்றோரோ, பாதுகாவலரோ ஆன்லைனில் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக் … Read more

“குறைவான முதலீட்டில் நிறைவான லாபம் பார்க்கலாம்..!” – விளம்பரத்தால் ரூ.8 லட்சத்தை ஏமாந்த இளம்பெண்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கும்மாங்குடியைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி சீதாலட்சுமி (27). இவர் சமீபத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். உடனே, அவரின் வாட்ஸ்-அப்பில் எண்ணுக்கு அவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த லிங்கை கிளிக் செய்த சீதாட்சுமி அதில், கேட்டிருந்த வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்துள்ளார். மூன்று மடங்கு வரையிலும் பணம் … Read more

மேகனின் டயட் ரகசியம் இது தான்! இந்த உணவுகளை ஒரு பிடி பிடிப்பாராம்

மேகன் மெர்க்கலின் விருப்பமான உணவுகள். காலை உணவை எப்போதும் அவர் தவிர்க்க மாட்டார் என தகவல். இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் ஒரு உணவு பிரியர் ஆவார். இரண்டு குழந்தைகளின் தாயான அவர் எப்போதும் தனது காலை உணவை தவிர்த்தது கிடையாது. அவர் சத்தான உணவுகளை தான் சாப்பிடுவார். இது தொடர்பாக எழுத்தாளர்கள் Omid Scobie and Carolyn Durand தெரிவிக்கையில், அவரது காலை உணவு ஒரு கப் வெந்நீர் மற்றும் ஒரு எலுமிச்சை துண்டுடன் தொடங்கும். … Read more

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்: விவரம் கேட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: பிரபல நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள விவகாரம் சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 38வயதான நடிகை நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் 9ந்தேதிதான் இயக்குனர் விக்னேஷ்வரனை திருமணம் செய்தார். இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையான நிலையில், … Read more

ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர்

சென்னை: ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் தெரிவித்துள்ளார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட இலக்கில் இதுவரை 55.5% குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என சென்னையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அவர் பேசினார்.