ரயில் மோதி யானைகள் பலி| Dinamalar

புதுடில்லி : அசாமில் அதிவேக ரயில் மோதி, பெண் யானை மற்றும் அதன் குட்டி உயிரிழந்தன. மற்றொரு யானை பலத்த காயத்துடன் உயிர் தப்பியது. வடகிழக்கு மாநிலமான அசாமின் ஜோர்ஹட் மாவட்டத்தில் உள்ள திதாபர் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தை கடந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில் பெண் யானை மற்றும் அதன் குட்டி, மற்றொரு யானை ஆகியவை பலத்த காயம் அடைந்தன. இரவு … Read more

தேவர் குருபூஜையில் பிரதமர்?: “முக்குலத்தோர் மக்களின் வாக்குகளே குறி" – ரவிக்குமார் எம்.பி காட்டம்

வி.சி.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஒருங்கிணைந்து நேற்று (11.10.2022) தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தின. விழுப்புரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார், “’காவி கும்பலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை’ என்று தமிழ்நாடு முழுவதும் இன்று மக்கள் அணிதிரண்டு முழங்குகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மனித … Read more

இளவரசர் ஹரிக்கு நெருக்கடி தரும் சார்லஸ் மன்னர்: வெளிவரும் புதிய பின்னணி

புத்தகம் வெளியிடவிருக்கும் நிறுவனத்திற்கு உரிய தொகையை திருப்பி செலுத்தவும் மன்னர் சார்லஸ் தயார் இளவரசர் ஹரி மொத்தமாக 60 மில்லியன் டொலர் தொகை கைப்பற்றியுள்ளார். இளவரசர் ஹரி வெளியிடவிருக்கும் நினைவுக் குறிப்புகள் புத்தகம் வெளிவராமல் இருக்க மன்னர் சார்லஸ் நடவடிக்கை முன்னெடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புத்தகம் வெளியிடவிருக்கும் நிறுவனத்திற்கு உரிய தொகையை திருப்பி செலுத்தவும் மன்னர் சார்லஸ் தயார் என்றே கூறப்படுகிறது. கடந்த 2021 ஜூலை மாதம் பிரித்தானிய ராஜகுடும்பத்து உறுப்பினர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் தகவலை … Read more

அக்டோபர் 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 144-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 144-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அக்-12: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தகவல் கமிஷனர்களுக்கான 42 பணி இடங்கள் காலி| Dinamalar

புதுடில்லிநாடு முழுதும், தகவல் கமிஷனர்களுக்கான 42 பணி இடங்கள் காலியாக இருப்பதாகவும், இரண்டு மாநிலங்களில் தலைமை தகவல் கமிஷனர்களே இல்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரசு துறைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ரகசிய நடைமுறைகளுக்கு முடிவு கட்டுவதற்காக, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ல் அமலுக்கு வந்தது. இன்றுடன் இந்த சட்டம் அமலுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் செயல்பாடு, அதில் உள்ள சவால்கள், சந்திக்கும் … Read more

உடனே வெளியேறிவிடுங்கள்… சொந்த குடிமக்களுக்கு போலந்து எச்சரிக்கை

திங்களன்று 83 ஏவுகணைகளை வீசி உக்கிர தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தது. தமது நாட்டின் சிறப்பு ராணுவம் உக்ரைன் மீதான போரில் கலந்துகொள்ளும் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து போரிட இருப்பதாக பெலாரஸ் அறிவித்துள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற போலந்து மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், திங்களன்று 83 ஏவுகணைகளை வீசி உக்கிர தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தது. உக்ரைனின் மின்சார அமைப்புகள், ராணுவ முகாம் உள்ளிட்டவைகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் … Read more

ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்

நங்கநல்லூர் ஐயப்பன் கோயில், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக் கொடுக்கிறதோ அதே போன்ற வடிவிலேயே இங்கும் ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து, அவர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் புனிதப் பணியினை செய்து வந்தார் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். நாளடைவில் திருவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் விக்ரகம் ஒன்று … Read more

ரூ.45 கோடி மதிப்புஹெராயின் பறிமுதல்| Dinamalar

கரிம்கஞ்ச் அசாமில், லாரியில் கடத்தப்பட்டு வந்த ௪௫ கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை, போலீசார் நேற்று பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். வடகிழக்கு மாநிலமான மிசோரமில் இருந்து கரிம்கஞ்ச் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக, அசாம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், எல்லை பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, கண்காணிப்பில்ஈடுபட்டனர். அப்போது, கரிம்கஞ்ச் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், டிரைவர் கேபினில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த … Read more

வெறும் 1 யூரோவுக்கு சொந்த நிறுவனத்தை ரஷ்யாவிடம் விற்ற நிசான்: அதிர்ச்சி பின்னணி

நிசான் ரஷ்யாவில் தங்களின் மொத்த பங்கையும் அரசு சார்பு நிறுவனமான NAMI- இடம் ஒப்படைத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பல முக்கிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது நிசானும் இணைந்துள்ளது. ரஷ்யாவில் நிசான் மோட்டார் நிறுவனம் தங்களது சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோ தொகைக்கு ரஷ்ய அரசு நிறுவனத்திடம் விற்றுள்ளது தொழில்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த இழப்பு 687 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. ஜப்பான் மோட்டார் நிறுவனமான நிசான் ரஷ்யாவில் தங்களின் … Read more